ஐயா யார் காக்கை வன்னியன்? பாமக நிறுவனர் ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் எழுதிய திறந்த மடல்!
சென்னை: ஐயா யார் காக்கை வன்னியன்? என்ற கேள்வியோடு பாமக நிறுவனர் ராமதாசுக்கு மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் குரு.விருதாம்பிகை திறந்த மடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கு குரு.விருதாம்பிகை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;

வன்னியர் இட ஒதுக்கீடு
''வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் மக்களால் போராட்டம் நடத்தியது 1987 செப்டம்பர் 17 முதல் ஒரு வார காலத்திற்கு நடத்தப்பட்டது. அப்போதைய ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அரசு 21 வன்னியர் தியாகிகளை சுட்டுக் கொன்றது. 4 வன்னியர் தியாகிகளை அடித்தே கொன்றது. மேலும் நம் போராட்டத்தை எம்.ஜி.ஆர் கொச்சைப் படுத்தினர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் 1989 இல் ஆட்சிக்கு வந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் எந்த வித போராட்டமும் நாம் செய்யாத போது வன்னியர்களின் நலனில் அக்கறை கொண்டு வன்னியர் தலைவர்களை அழைத்து 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்கினார்.''

திமுகவை திட்டினீர்கள்
''இன்றுவரை இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது எந்த சட்டப் பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் நீங்கள் திரு. கலைஞர் அவர்கள் அழுகிய மாம்பழத்தை கொடுத்துவிட்டார் என்று பல முறை பேசி உள்ளீர்கள். திராவிட முன்னேற்ற கழகம் வன்னியர்களுக்கு எதிரான கட்சி என்று கூறியுள்ளீர்கள். மற்ற கட்சி தலைவர்களுடன் நட்பில் இருக்கும் நம் வன்னியர் தலைவர்களை காக்கை வன்னியன் என்று அழைத்தீர்கள். அது மட்டுமல்லாமல் நம் பாட்டாளி சொந்தங்களை வைத்து சமூக வலைதளங்கள் மற்றும் பிற இடங்களில் அவர்களைப் பற்றி தவறான வார்த்தையில் திட்டவும் செய்தீர்கள்.''

ஏளனம் செய்தீர்கள்
''2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதல்வர் திரு .மு. க.ஸ்டாலின் அவர்களை வன்னியர் துரோகி என்று பல இடங்களில் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளர் இல்லாத போதும் அவரை தனிப்பட்ட முறையில் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசி உள்ளார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் 2019 ஆம் ஆண்டு திரு.மு. க. ஸ்டாலின் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்குவேன் என்று கூறினார். அதுவரை ஐயா நீங்கள் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு என்ற ஒரே கோஷத்தை மட்டும் வைத்து இருந்தீர்கள். நீங்கள் அப்பொழுது திரு. மு. க.ஸ்டாலின் அவர்கள் எப்படி உள் இட ஒதுக்கீடு வழங்குவார் என்று அவரை ஏளனம் செய்தீர்கள்.''

அரசியல் லாபம்
''பிறகு திரு.மு. க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்து விடுவார் என்று பயந்து 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு நாடகத்தை அரங்கேற்றி உங்களுடைய கொள்கை தனி இட ஒதுக்கீடு என்பதை மாற்றி உள் இட ஒதுக்கீடு என்று மாற்றம் செய்து ஐயா திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வந்துவிட்டால் கொடுத்துவிடுவார் என்பதற்காக அரசியல் நாடகம் செய்தீர்கள்.. உங்களுடைய தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகவும் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அவருடைய அரசியல் லாபத்திற்காகவும் வன்னியர்களுக்கான 10.5 தனி உள் இட ஒதுக்கீடு வழங்கினார். ''

ஸ்டாலினுக்கு புகழாரம்
''அப்போதே நாங்கள் கூறினோம் நீங்கள் தேர்தலுக்காக தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக எந்த ஒரு சரியான புள்ளிவிவரங்கள் இல்லாமல் இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளீர்கள் என்று. ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க .ஸ்டாலின் அவர்கள் நீங்கள் கூறிய போல் இல்லாமல் தந்தையின் வழியில் வன்னியர் மக்கள் மீது அன்பு கொண்டு தமிழக முதல்வராக பதவி ஏற்றவுடன் அவரது கூறியதுபோல் இந்த மசோதாவிற்கு அரசு ஆணை வழங்கினார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த போதும் உச்சநீதிமன்றத்தில் சிறப்பான வழக்கறிஞர் வைத்து ஐயா திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்.''

சமூக நீதி போர்
''மேலும் ஐயா.திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வன்னியர் மக்களின் மீது அன்பு கொண்டு எந்த ஒரு வன்னியர் தலைவர்களும் கோரிக்கை வைக்காத போது வன்னியர் உரிமைப் போரில் உயிர்நீத்த குடும்பங்களுக்கு அரசு வேலை மற்றும் அவர்களுக்கு மணிமண்டபம் அதுமட்டுமல்லாமல் வன்னியர் உரிமைப் போரை சமூக நீதி போர் என்று அங்கீகரித்தார். தற்போது உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க.ஸ்டாலின் அவர்கள் சரியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து மீண்டும் நமக்கு வன்னியர் உள் இட ஒதுக்கீடு பெற்றுத் தருவார்கள்.''

நமக்கான உரிமை
''இவ்வாறு இருக்கும் இருக்கும்பொழுது 20 சதவீதம் கொடுத்தது,வன்னியர் உரிமைப் போரில் உயிர்நீத்த 25 குடும்பங்களுக்கு 3 லட்சம் பணமும் ஓய்வூதியமும் வழங்கியது ஐயா கலைஞர் அவர்கள் வன்னியர்களுக்கான10.5 சதவீதத்திற்கு அரசு ஆணை வழங்கியதும் வன்னியர் உரிமைப் போரில் உயிர்நீத்த 25 குடும்பங்களுக்கு அரசு வேலை அவர்களுக்கு மணிமண்டபம் மேலும் வன்னியர் உரிமைப் போரை சமூகநீதி போர் என்று அங்கீகரித்தது திரு. மு. க.ஸ்டாலின் அவர்கள் தற்பொழுதும் நமக்கான உரிமையை மீட்டு கொடுக்க முயல்பவர் திரு. மு. க.ஸ்டாலின் அவர்கள். ஐயா இதில் நீங்கள் செய்தது என்ன மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. கலைஞர் அவர்களையும் தற்போதைய முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களையும் அவதூறாகப் பேசியது மட்டுமே.''

ராமதாசுக்கு கேள்வி
''அதுமட்டுமல்லாமல் திராவிட முன்னேற்றக் கழக தலைவர்களுடன் நட்புடன் இருந்த நம் சமூக தலைவர்களை காக்கை வன்னியன் என்று கூறியதே. ஆனால் நீங்கள் இதுவரை ஐயா திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை வன்னியர் துரோகி என்று கூறி விட்டு தற்போது புகழ்ந்து பேசுகிறீர்கள். தற்போது உங்கள் நிலை வன்னியர் இடம் பலமிழந்த திரு.எடப்பாடி கூட தங்களை எள்ளி நகையாடும் நிலைக்கு ஆளாகி விட்டீர்கள். ஐயா நான் உங்களிடம் கேட்கிறேன் இப்பொழுது யார் காக்கை வன்னியன்?''

காடுவெட்டி குருவின் மகள்.
மேற்கண்ட இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாசுக்கு மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் குரு. விருதாம்பிகை திறந்த மடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
-
ஆஞ்சியோ டெஸ்ட் டாக்டர் ராமதாசுக்கு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. எப்படி இருக்கிறார்? -
Ramadoss: சேலம் பிரசார மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ்.. மருத்துவமனையில் அனுமதி! -
செளமியா அன்புமணிக்கு எதிராக.. தர்மபுரியில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யும் ராமதாஸ்.. பாமகவுக்கு செக்! -
அப்படியே ஒரு நொடி.. ஆடிய கால்கள்.. மயங்கிய ராமதாஸ்.. விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம்












Click it and Unblock the Notifications