சென்னை சென்ட்ரலில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த இளம் பெண்.. கடவுளாக வந்த போலீஸ்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் சட்டென தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற நபரும் தவறி விழுந்த நிலையில் அவர்களை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
ஓடும் ரயில்களில் ஏறவோ இறங்கக்கூடாது என்ற எல்லாருக்கும் தெரியும்.ஆனால் சரியான நேரத்திற்கு ரயில் நிலையத்திற் வராமல் ரயில் புறப்படும் நேரத்தில் வருவார்கள். அப்படி வருபவரகள் அவசர அவசரமாக ஓடும் ரயிலில் ஏறுவார்கள்.இப்படி ஏறும் போது விபத்தில் சிக்கி உயிரிழப்பது அடிக்கடி நடக்கிறது.

ஒரு ஐந்து நிமிடம் முன்பு வரும் வகையில் பயணத்தை மேற்கொள்ள பலர் தயாராக இல்லை. அந்த ஐந்து நிமிடத்திற்காக கொடுக்கும் விலை மிகஅதிகமாக உள்ளது. சில நேரங்களில் உயிரையே கூட விலையாக கொடுக்கிறார்கள். அஜாக்கிரதை, அலட்சியம், கவனக்குறை என எப்படி பெயர்களில் வேண்டுமானாலும் அழைக்கலாம். அதனால் ஏற்படும் இழப்புகள் வாழ்நாளில் ஈடுகட்ட முடியாதது.
அதேநேரம் இதுபோல் அவசர அவசரமாக வரும் பயணிகளை சரியான நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றிய சம்பவங்களும் நடந்துள்ளன. ரயில் புறப்பட்டு சென்ற பின் வரும் பயணிகள் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்துவிடுவார்கள்.
அப்போது கன நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றுவார்கள். இந்த வீடியாக்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு சம்பவம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இளம் பெண் ஒருவர் ஏற முயன்றார். அப்போது அவர் எதிர்பாராத விதிமாக தவறி விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர் அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் தவறி விழுந்தார். இதனை கண்ட அருகிலிருந்த ஆர்.பி.எப் வீரர் அவரை காப்பாற்றினார்.
ரயிலில் சிக்கி சிறு காயத்துடன் மீட்கப்பட்ட அந்த இளம் பெண்ணை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரியான நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர் துரிதமாக செயல்பட்டதால் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இரண்டு பேரை காப்பாற்றி உள்ளார். அவரை ரயில்வே அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டினார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
மக்களே, ரயிலில் பயணம் என்றால் குறைந்தது 20 நிமிடத்திற்கு முன்பே ரயில் நிலையத்திற்கு வந்துவிடுங்கள். அப்போது தான் ரயில் நிலையத்தில் எந்த பிளாட்பார்ம் என்பது உங்களால் அறிய முடியும். ரயிலில் எந்த கோச்சில் ஏற வேண்டும் என்பதையும் பொறுமையாக பார்த்து அறிந்து ஏற முடியும். இல்லாவிட்டால் அவதி அவதியாக சென்று விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படலாம்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications