போனில் பேசிட்டிருந்த நயினார்.. பின்னாடியே வந்த துர்கா ஸ்டாலின்.. சென்னையில் மலர்ந்த அரசியல் நாகரீகம்
சென்னை: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பாரம்பரியமான இருமுனை அரசியல், இந்த முறை 4 முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளதால், தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது... இந்த பரபரப்புக்கு நடுவே ஒரு அரசியல் நாகரீகம் சென்னை ஏர்போர்ட்டில் நேற்றைய தினம் மீண்டும் மலர்ந்ததை நம்மால் காண முடிந்தது..!!
ஆட்சியை தக்கவைக்க முனையும் திமுக கூட்டணி, இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க துடிக்கும் அதிமுக கூட்டணிகளுடன், சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போன்றவையும் களம் காண்கின்றன..

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, சிதறிக்கிடக்கும் வாக்கு வங்கிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, அமமுகவை தன் கூட்டணியில் இணைத்துள்ளது..
பழைய கசப்புகள்
பழைய கசப்புகளை மறந்து, திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற பொதுவான நோக்கத்தில் செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும், தென் மாவட்டங்களில் உள்ள தங்களது வாக்கு வங்கி கூட்டணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றும் அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக மற்றும் மாநிலம் முழுவதும் பரவலாகத் தொண்டர்களைக் கொண்டுள்ள தேமுதிக ஆகிய கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுப்பதில் அதிமுக ஆர்வம் காட்டி வருகிறது..
அதேபோல முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு இன்னும் ஊசலாட்டத்திலேயே உள்ளது. பாஜக மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஓபிஎஸ் அணியை ஒரு தனி அங்கமாகவோ அல்லது டிடிவி தினகரனுடன் இணைத்தோ கூட்டணியில் தக்கவைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நான்கு முனைப் போட்டி
தமிழகத்தின் இந்த 4 முனைப் போட்டியில், ஒவ்வொரு சதவீத வாக்கும் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால், கூட்டணிகளை இறுதி செய்வதில் கட்சிகள் மிகக் கவனமாக உள்ளன... இப்படி நாலாபக்கமும் திமுகவுக்கு எதிரான காய்நகர்த்தல்களை எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் மேற்கொண்டு வருகின்றன..
அரசியல் களத்தில் அனல் பறக்கும் வார்த்தைப் போர்களும், கொள்கை ரீதியான மோதல்களும் வலுப்பெற்று வரும் சூழலில், சென்னை விமான நிலையத்தில் அரங்கேறிய ஒரு நிகழ்வு பார்ப்பவர்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
ஆம்...
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி செல்வதற்காக சென்னை ஏர்போர்ட் வந்திருந்த அதே நேரத்தில், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் அதே விமானத்தில் பயணிப்பதற்காக அங்கு வந்திருந்தார்...
நயினார் நாகேந்திரன் ஃபிளைட்டில் ஏறுவதற்காக தன்னுடைய நிர்வாகிகளுடன் ஏர்போட்டுக்குள் சென்று கொண்டிருந்தார்.. அப்போதுதான் அவருக்கு பின்னாடியே துர்கா ஸ்டாலினும் வந்து கொண்டிருந்தார்.. போனில் பேசிட்டே வந்த நயினார் நாகேந்திரன் திடீரென பின்பக்கம் துர்கா ஸ்டாலின் வருவதை பார்த்ததுமே அப்படியே நின்றுவிட்டார்..
துர்கா ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்
துர்கா ஸ்டாலினிடம் திரும்பி சென்ற நயினார் நாகேந்திரன் அவருக்கு வணக்கம் சொன்னார்.. பதிலுக்கு வணக்கம் வைத்த துர்கா ஸ்டாலின், நயினார் நாகேந்திரனின் நலனை விசாரித்தார்..
பொதுவெளியில் இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் யுத்தம் நடந்து வரும் நிலையிலும், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தவுடன் தர்மசங்கடத்திற்கு இடம் கொடுக்காமல், மலர்ந்த முகத்துடன் புன்னகையைப் பரிமாறிக்கொண்டனர்.
வெறும் புன்னகையோடு மட்டுமே கடந்துவிடாமல், இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்ட விதம், "அரசியல் வேறு, தனிப்பட்ட பண்பாடு வேறு" என்பதை உரக்கச் சொல்வது போல் அமைந்திருந்தது...
அரசியல் நாகரீகம்
துர்காவும், நயினார் நாகேந்திரனும் இப்படி புன்னகைத்து பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டதை அங்கிருந்த இரு கட்சியினரும் ஸ்நேகத்துடன் பார்த்துக் கொண்டு நின்றனர்.
மேடைகளில் முழங்கும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, பொதுவெளியில் நிலவிய இந்த கண்ணியமான அணுகுமுறை, தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது..
"அரசியல் நாகரீகம்" மண்ணோடு மண்ணாக மக்கிப்போய்விடவில்லை, அது இன்னமும் தமிழக அரசியலில் உயிர்ப்புடன் உலா வந்து கொண்டிருக்கிறது" என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது....!!
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications