நடந்தது கோர விபத்து..மக்களை காக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்..கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
சென்னை: தமிழ்நாட்டு பயணிகளை காப்பாற்ற வேண்டியது சரியான சிகிச்சை அளிக்க வேண்டியதும் நம்முடைய கடமை என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். நடந்துள்ளது மிகப்பெரிய துக்ககரமான நிகழ்வு கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக சென்னைக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. இதில் 10 முதல் 12 பெட்டிகள் தரம் புரண்டதால் எதிர் தண்டவாளத்தில் விழுந்தன அதைத் தொடர்ந்து பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இந்த ரயிலில் இருந்த நான்கு பெட்டிகளும் தடம் புரண்டன.

மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு முதல் விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றன. மீட்புப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விரைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நேற்றிரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் பெங்களூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிய விபத்தில் 230 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. முழு விபரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை. மாலைக்குள் விபரங்கள் தெரியவரும். முதல்வர் ஸ்டாலின் காலையிலேயே ஆய்வு நடத்தியிருக்கிறார்.
பாலசோர் மாவட்டத்தில் தங்கியிருந்து பணிகளை நிறைவு செய்து விட்டு திரும்ப வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா அரசாங்கத்திடம் இருந்து தகவல்கள் தொடர்ந்து கேட்டிருக்கிறோம். மீட்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தால்தான் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரியவரும்.
நேற்றிரவு மிகப்பெரிய விபத்து நடந்துள்ளது. பெட்டிகளை உடைத்துதான் பயணிகளை மீட்க வேண்டும். விபத்தில் சிக்கிய பயணிகள் 8 பேர் கட்டுப்பாட்டு அறைக்கு பேசியுள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து கோரமண்டலம் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் 127 பேரிடம் பேசியிருக்கிறோம். ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 5 பேரிடம் பேசியிருக்கிறோம் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவது வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு திரும்ப வருகின்றனர். அமைச்சர்களும் அரசாங்க உயரதிகாரிகளும் ஒடிசாவிற்கு கிளம்பி சென்றுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தாராள மனதிற்கு சொந்தக்காரர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பார் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து சென்று உயிரிழந்தவர்களை அடையாளம் காட்டினால் மட்டுமே எத்தனை பேர் என்று தெரியவரும் என்றும் அமைச்சர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும் மருத்துவ சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்து ஏன் எப்படி நிகழ்ந்தது என்று ரயில்வே துறைதான் விசாரணை நடத்தி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications