Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் புது ‘செல்’.. தலைமையேற்கும் அமெரிக்கா ரிட்டர்ன் ஆனந்தன் அய்யாசாமி.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் ஒரு புதிய பிரிவை தொடங்கி, அதன் ஒருங்கிணைப்பாளராக ஆனந்தன் அய்யாசாமியை நியமித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. யார் இந்த ஆனந்தன் அய்யாச்சாமி?

யார் இந்த ஆனந்தன் அய்யாசாமி: தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஆனந்தன் அய்யாசாமி. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இண்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆனந்தன் அய்யாசாமி, அங்கு பொறியியல் இயக்குநராகவும் பணியாற்றினார். பின்னர், இந்தியா திரும்பிய ஆனந்தன் அய்யாசாமி, தனது சொந்த ஊரான தென்காசியில் இருந்தபடி வாய்ஸ் ஆஃப் தென்காசி பவுண்டேஷன் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். மேலும், பாஜகவில் இணைந்து தற்போது தீவிரமாகக் களப்பணி ஆற்றி வருகிறார்.

 Ananthan Ayyasamy appointed as BJP start-up cell convenor: Who is he?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆனந்தன் அய்யாசாமி, அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையின் தென்காசி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். தென்காசி மாவட்டம் முழுவதும் சுற்றிச் சுழன்று கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார் ஆனந்தன் அய்யாசாமி. அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தென்காசி சுற்றுப்பயணம் சென்றபோது அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தது ஆனந்தன் தான்.

ஒரு விழா விடாமல்: பாஜகவின் கட்சி கூட்டங்கள், போராட்டங்கள் மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தில் கல்லூரி நிகழ்ச்சிகள், பள்ளி நிகழ்வுகள், வேலைவாய்ப்பு முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள் தனியார் ரத்த தான நிகழ்வுகள், கோவில் திருவிழாக்களில் நீர் மோர் ஊற்றும் பந்தல் என ஒரு இடம் விடாமல் சென்று கலந்து கொண்டு வருகிறார் ஆனந்தன் அய்யாசாமி. மேலும், இவரது ஸ்டார்ட் அப் தென்காசி அமைப்பு சார்பில் கல்லூரிகளில் களப் பயிற்சி நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.

 Ananthan Ayyasamy appointed as BJP start-up cell convenor: Who is he?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் இவருக்குத்தான் சீட் என்ற அளவுக்கு தென் மாவட்ட பாஜகவில் பேச்சுகள் ஓடி வருகின்றன. இந்நிலையில் தான், தமிழ்நாடு பாஜகவில் ஸ்டார்ட் அப் பிரிவு என புதிதாக ஒரு பிரிவைத் தொடங்கி, அதன் ஒருங்கிணைப்பாளராக, ஆனந்தன் அய்யாசாமியை நியமித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

பாஜகவின் புதிய பிரிவு: இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது பாரதப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்களின்‌ தொலைநோக்குப்‌ பார்வையை செயல்படுத்தும்‌ வகையில்‌, தமிழக பாஜக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிர்வாகம்‌ மற்றும்‌ சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட நமது அணிப்‌ பிரிவுகளை தமிழகம்‌ முழுவதும்‌ விரிவுபடுத்தியுள்ளது. விளையாட்டு மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுப்‌ பிரிவு, மத்திய அரசின்‌ நலத்‌ திட்டங்கள்‌ பிரிவு, தரவு மேலாண்மைப்‌ பிரிவு மற்றும்‌ ஆன்மீகம்‌ மற்றும்‌ ஆலய மேம்பாட்டுப்‌ பிரிவு உள்ளிட்ட பிரிவுகள்‌, கட்சியின்‌ செயல்பாடு மற்றும்‌ மக்கள்‌ தொடர்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன.

 Ananthan Ayyasamy appointed as BJP start-up cell convenor: Who is he?

தரவு மேலாண்மைப்‌ பிரிவானது, தரவு சார்ந்த உத்திகளை முன்னிறுத்தி, ஆதாரங்களை அடிப்படையாகக்‌ கொண்ட முடிவுகள்‌ எடுக்க உதவுகிறது. மேலும்‌, கட்சி பொதுமக்களுடன்‌ தனிப்பட்ட முறையில்‌ நேரடியாகத்‌ தொடர்பு கொள்ள உதவுகிறது. தமிழகத்தின்‌ ஆன்மீகம்‌ மற்றும்‌ வளமான கலாச்சாரத்தையும்‌ பாரம்பரியத்தையும்‌ பாதுகாத்து மேம்படுத்துவதில்‌ கட்சியின்‌ அர்ப்பணிப்பை ஆன்மிகம்‌ மற்றும்‌ ஆலய மேம்பாட்டுப்‌ பிரிவு வெளிப்படுத்துகிறது. விளையாட்டு மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுப்‌ பிரிவு, தமிழக பாஜக, அடிமட்ட அளவில்‌ திறமையானவர்களைக்‌ கண்டறிந்து அவர்கள்‌ திறமைகளை மேம்படுத்த உதவுகிறது.

பாஜக ஸ்டார்ட் அப் செல்: சமூகநீதி மற்றும்‌ அனைவரையும்‌ உள்ளடக்கிய வளர்ச்சிக்கான எங்கள்‌ கட்சியின்‌ உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மத்திய அரசின்‌ நலத்திட்டங்களின்‌ பலன்கள்‌, தகுதியான பயனாளிகளைச்‌ சென்றடைவதை உறுதி செய்வதில்‌ மத்திய அரசு நலத்திட்டப்‌ பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கூறப்பட்ட பிரிவுகளும்‌, கட்சியின்‌ திறமையான அணிகளும்‌, பிற பிரிவுகளும்‌, தமிழக மக்கள்‌ எதிர்கொள்ளும்‌ முக்கியமான பல்வேறு பிரச்சனைகளுக்குத்‌ தீர்வு காண்பதற்கு பெருமளவில்‌ உதவி வருகின்றன. இதன்‌ மூலம்‌, தமிழக பாஜக, மக்களைப்‌ பெருமளவில்‌ சென்றடையவும்‌, மக்கள்‌ மத்தியில்‌ கட்சியின்‌ செல்வாக்கை உயர்த்திக்‌ கொள்ளவும்‌ உதவியுள்ளன.

தீவிர செயல்பாடுகளாலும்‌, பொதுமக்களை ஈர்க்கும்‌ அணுகுமுறையை வெளிப்படுத்துவதன்‌ மூலமாகவும்‌, தமிழக பாஜக, தமிழகத்தில்‌ ஒரு திறம்‌ மிக்க அரசியல்‌ சக்தியாக தம்மை வலுப்படுத்தியுள்ளது. இன்றைய தினம்‌, புதுமையான முயற்சிகளை உற்சாகப்படுத்தவும்‌, ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஒரு முக்கிய தகவல்‌ தொடர்புப்‌ பாலமாகச்‌ செயல்படுவதற்கும்‌, ஸ்டார்ட்‌-அப்‌ பிரிவு என்ற புதிய பிரிவைத்‌ தமிழக பாஜக தொடங்கவிருக்கிறது.

இன்டெல் முன்னாள் பொறியியல் இயக்குநர்: இந்தப்‌ பிரிவைத்‌ தொடங்கியதின்‌ நோக்கம்‌, வளர்ச்சியை உருவாக்கும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகும்‌. இந்த முன்னெடுப்பானது, தமிழக இளைஞர்களிடையே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும்‌, திறமையான மற்றும்‌ புதுமையான சிந்தனையாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும்‌, மேலும்‌ நமது தமிழகத்தின்‌ வளர்ச்சி மற்றும்‌ வளத்துக்கு முக்கியப்‌ பங்களிப்பதற்கும்‌, தமிழக பாஜக கொண்டிருக்கும்‌ குறிக்கோளை வெளிக்காட்டுகிறது.

இந்த ஸ்டார்ட்‌ - அப்‌ பிரிவின்‌ மாநில ஒருங்கிணைப்பாளராக, இன்டெல்‌ நிறுவனத்தின்‌ முன்னாள்‌ பொறியியல்‌ இயக்குநராகப்‌ பணியாற்றியவரும்‌, தற்போது தமிழக பாஜகவின்‌ தென்காசி மாவட்டத்தில்‌ தீவிர களப்பணியாற்றி வருபவருமான ஆனந்தன்‌ அய்யாசாமி அவர்கள்‌ நியமிக்கப்பட்டுள்ளார்‌ என்பதனைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இந்தப்‌ புதிய பொறுப்பில்‌ அவர்‌ திறம்படச்‌ செயல்பட, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+