"மடிமீது".. சாட்டையை எடுத்த அன்பில் மகேஷ்.. "ப்ளீஸ் வேண்டாம்", பரிசீலியுங்கள்.. ஆசிரியர்கள் கோரிக்கை
அன்பில் மகேஷ் அறிவிப்பை பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
சென்னை: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ஒன்றினை, மாணவர்களின் நலன்கருதி அதை மறுபரிசீலனை செய்யுமாறு, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.. அந்த கோரிக்கை என்ன?
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசுப் பள்ளி ஒன்றில், வகுப்பறையில், மாணவர்கள் ஆசிரியரிடம் தவறாக நடந்து கொண்ட விதம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது... அதுவும் மாணவிகளின் மடியிலேயே படுத்து கொண்டு அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோவும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது... அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வரும் நிலையில், இப்படியெல்லாம் பள்ளி மாணவர்களின் நடவடிக்கை, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அரசுக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது.

முற்றுப்புள்ளி
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை சட்டமன்றத்தில் அறிவித்தார்.. அதன்படி, "எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை சொல்வது தவறு..,. பள்ளிகள் - பெற்றோர்கள் - அரசு ஆகியோருக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச் சான்றிதழ் (TC), நடத்தை சான்றிதழில் (Conduct Certificate) என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்றார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ் வெளியிட்ட இந்த அறிவிப்பினை பல தரப்பினரும் வரவேற்றனர்.. ஆனால், ஆசிரியர்களின் தரப்பில் அவ்வளவாக வரவேற்கப்படவில்லை.. இந்த அறிவிப்பானது, வேறு சில பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடக்கூடும், முக்கியமாக பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்கிறார்கள்.. மாறாக, இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி
அந்த வகையில், அரசு பள்ளி ஆசிரியரும், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3), கல்வியாளருமான சு.உமா மகேஸ்வரியை "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக சந்தித்துபேசினோம்.. அவர் நம்மிடம் சொன்ன கருத்துக்கள் இவைதான்: "நமது அரசு பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகள் பெரும்பாலும் குரலற்றவர்களின் குழந்தைகள்.. அதேசமயம், பள்ளியில் தவறான செயல்களில் ஈடுபடுவதையும் ஏற்க முடியாது.. இதற்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்த்த வேண்டும் என்பதே நம்முடைய பார்வையாக உள்ளது..

டிசி தர வேண்டாம்
காரணம், ஒருவேளை இந்தபிள்ளைகள் இடைநிற்றலுக்கு ஆளானால், அதாவது பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டால் அத்துடன் எல்லாமேமுடிந்துவிடும்..இதுவே தனியார் பள்ளி மாணவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டு, அவர்களுக்கு டிசி தந்து வெளியேற்றினாலும், அரசு பள்ளி அவர்களை அரவணைத்து கொள்ளும்.. ஆனால், அரசு பள்ளி குழந்தைகளையே வெளியே அனுப்பிவிட்டால், அதுக்கப்பறம் அவர்களின் கல்வியே முடங்கி போய்விடும்.. அது அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.

சமத்துவம்
சமத்துவம், அனைவருக்குமான கல்வி குறித்து நாம் பேசும்போது, இந்த குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் தேடணும்.. அதற்கான வழிகளையும் கண்டுபிடிக்கணும் என்பது காலத்தின் தேவையாக இருக்கிறது.. ஆசிரியர்களின் பார்வையில் இது கட்டாயம் தேவையாக உணரப்படுகிறது.. குறிப்பாக ஆசிரியர்களின் பார்வை இன்று 2 விதமாக இருக்கிறது.. பணிப்பாதுகாப்பும் வேண்டும், அதேசமயம், பள்ளி குழந்தைகளை எப்படி கையாள்வது என்பதும்தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது..

கட்டாய தேவை
எனவே, ஆசிரியர் - மாணவர் உறவு, ஆசிரியர் பெற்றோர், பள்ளிக்கான உறவு, சமூகம் பள்ளியை நோக்கி வருவது போன்ற போக்குகள் இருந்தால் மட்டுமே, இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புகளும் குறையக்கூடும். அதேபோல ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் ஆலோசகர்கள் நியமனம் செய்ய வேண்டி உள்ளது.. இதுவும் இன்றைய கட்டாய தேவையாகும்.. அப்படி நியமனம் செய்யப்படும்போது, நிச்சயம் இதுபோன்ற குறைகள் மாணவர்களிடம் ஏற்பட வாய்ப்பிருக்காது.. முக்கியமாக, மாணவர்களுக்கு கல்வியையும் தர வேண்டும், அதேசமயம் அவர்களை நெறிப்படுத்தவும் வேண்டி உள்ளது.

மாணவர்கள்
கல்வித்துறையானது, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரின் பொறுப்பும்தான் இது.. எனவே, மாணவர்களை வெளியேற்றாமல், பள்ளிக்குள்ளேயே வைத்து, அவர்களை நெறிப்படுத்த வாய்ப்புகளை கல்வித்துறையை உருவாக்க வேண்டும்.. எனவே கல்வி அமைச்சர் இந்த கோரிக்கையை, இந்த ஒன் இந்தியா தமிழ் மூலமாக கேட்டுக் கொள்கிறேன்.

டிசி வேண்டாம்
ஏனென்றால், மாணவர்கள் எதையும் தெரிந்து செய்வது கிடையாது.. புறச்சூழல், வாழ்க்கை முறை, பெற்றோர்கள், குடும்ப சூழல், சந்திக்க கூடிய சமூகத்தினுடைய போக்கு, திரைப்படம், இணையதளம், மதுபானம், போதைப்பொருட்களின் தாக்கம் போன்றவை சேர்ந்துதான் மாணவர்களிடையே போக்கை நிர்ணயிக்கிறது.. இதை சரிசெய்ய வேண்டிய சூழல் நமக்கு உள்ளது. அதை நோக்கிதான் நாம் இனி நகர வேண்டுமே தவிர, மாணவர்களுக்கு டிசி கொடுத்து அனுப்புவது என்பது சரியான தீர்வாக இருக்காது.. எனவே , இதை கல்வி அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்பதை ஒன் இந்தியா வழியாக கேட்டுக் கொள்கிறேன்" என்றார் உமாமகேஸ்வரி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications