1 முதல் 8ஆம் வகுப்பு வரை.. பள்ளிகள் முழுமையாக திறப்பது எப்போது?.. அன்பில் மகேஷ் கூறிய தகவல்
சென்னை: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கான ஆலோசனைகள் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் கேட்கப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்னும் திட்டத்தில் மாணவர்கள் கோரிக்கைக்கான தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் அவர் பேசுகையில் மாணவர்களிடம் இருக்கும் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் அறிவுத் திறன் ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

வேளாண்மை
நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆலோசனைகள்
தொடக்கப் பள்ளிகளை திறப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்கப்பட்டு வருகிறது. இக்கருத்துக்களின் அடிப்படையில் முதல்வர் பள்ளிகளை திறப்பதற்கான நல்ல முடிவினை எடுப்பார் என்றார் அமைச்சர்.

சென்னை மாநகராட்சி
இந்த நிகழ்வுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது கூறுகையில் சென்னை மாநகராட்சி பள்ளி சார்பில் ஆண்டுதோறும் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சுவாமிநாதன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதுவரை இந்த நிறுவனத்தின் மூலம் 3000 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் பயிற்சி
இந்த ஆராய்ச்சி நிறுவனம் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளின் அடிப்படையில் முதல்வரிடம் ஆலோசனை பெற்று பள்ளிகளை முழுமையாக திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அமைச்சர் மகேஷ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications