நண்பா உதய்.. இது வேறலெவல் அடி.. அன்பில் மகேஷ் டிவீட்க்கு ஹார்ட் விடும் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்துக்குப் பிறகு, திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சமூக வலைதள பதிவு புதிய அரசியல் அதிரடியை கிளப்பியுள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையை பாராட்டிய அவர், தற்போதைய ஆட்சியை கடுமையாக விமர்சிக்கும் வகையில் டிவீட் செய்துள்ளார்.

சட்டமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சம்பவங்களை குறிப்பிட்டு அன்பில் மகேஷ் தனது டிவிட்டரில், "கூவத்தூரை மிஞ்சிய கூத்து", "சேஞ்ச் பின்னால் நடந்த பெரிய எக்ஸ்சேஞ்ச்", "புஷ்பா பட பாணி ஆட்சி", "சோபாவுக்கு பின்னால் போன முதலமைச்சர்", "இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சியை விட்டு ரியல் ஆட்சியை நடத்துங்கள்" என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி (Udhayanidhi Stalin) கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! என தெரிவித்து பதிவிட்டு உள்ளார்.

Anbil Mahesh Udhayanidhi Stalin Vijay Government Tamil Nadu Politics Rathan Pandit Anbil Mahesh tweet Udhayanidhi Stalin speech Vijay government controversy Tamil Nadu assembly debate Insta Reel politics Real governance quote Rathan Pandit controversy CM Vijay latest news DMK vs TVK Premalatha Vijayakanth speech Tamil Nadu political news astrologer appointment controversy Vijay CM criticism Tamil politics trending social media political debate vs

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு திமுக தரப்பிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி ஆதரவு கிடைத்துள்ளது. சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை திமுகவினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"Insta Reel ஆட்சி இல்லாமல் Real ஆட்சியை நடத்துங்கள்" என்ற உதயநிதியின் பேசுக்கு கருத்தை அன்பில் மகேஷ் "வேற லெவல் அடி" என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

தற்போதைய அரசின் செயல்பாடுகள் விளம்பர அரசியலாக மட்டுமே இருக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் கருத்தை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சட்டசபை விவாதங்கள் தற்போது சமூக வலைதள அரசியலாக மாறியுள்ளன. திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் இடையே கடும் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு சமுக வலைத்தளத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஜோதிடர் விவகாரம்

இன்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் விஜய்க்கு எதிராக பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதில் முக்கியமாக முதலமைச்சரின் தனிப்பணி அதிகாரியாக - ஸ்பெஷல் பணி பிரிவின் கீழ் (OSD) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருந்தது இதில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் முதல்வர் விஜய் அமைதியாக இருந்தது மட்டும் அல்லாமல் சட்டசபை கூட்டம் முடிந்த உடன் ரிக்கி ராதன் பண்டிட்-க்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவர் விஜயின் தனிப்பட்ட ஜோதிடராக அறியப்படும் நபர் ஆவார்.

பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

அதிமுக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய அவர், "முதலமைச்சர் அனைவருக்கும் வெளிப்படையான ஆட்சி நடத்துவோம் என்று உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் யாரையோ சந்திக்க முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தில் சென்ற சம்பவம் பற்றி மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்த வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "தற்போது முதல்வரின் ராஜகுருவாக இருக்கும் ராதன் பண்டிட் என்பவரை அரசு சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். "அவர் உங்களுக்கு தனிப்பட்ட ராஜகுரு என்றால், அவரை தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ளுங்கள். அரசு உயர் பதவியில் அமர்த்தி, உங்களை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? வருங்கால இளைஞர்கள் மற்றும் தமிழகத்தின் எதிர்காலத்துக்கு இந்த நியமனம் என்ன மெசேஜ் தருகிறது என்பதை தெளிவாக விளக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

பிரேமலதா விஜயகாந்தின் இந்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் விஜய் அரசுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+