ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்தும் அன்புமணி.. அன்பில் மகேஷ் கடும் பதிலடி
சென்னை: கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் தரலாம். அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க பரிந்துரைப்பேன் என அன்பில் மகேஷை கிண்டல் செய்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
கரூரில் கடந்த 27ம் தேதி இரவு விஜய் நடத்திய தவெக பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும், கரூர் அரசு மருத்துவமனைக்கும் சென்று அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குழந்தைகள் நிலையை கண்டு கலங்கி அழுதார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் தரலாம். அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க பரிந்துரைப்பேன் என கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!
எங்கள் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதுபோல "எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!". தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக அன்புமணி விருதுநகரில் கரூர் சம்பவம் குறித்து அளித்த பேட்டியில் கூறும் போது, , "உண்மை நிலவரம் வெளியே வர வேண்டும் பல வதந்திகள் பரவுகிறது. உண்மை வெளியே வர வேண்டுமென்றால் நீதிமன்றம் ஒரு குழுவையோ, ஒரு கமிஷனையோ அமைத்தோ அல்லது சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் வெளியே வரும். இது சூழ்ச்சியா இல்லை விபத்தா என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் இறந்து போனார்கள். அங்கு முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. தற்போது கரூருக்கு முதலமைச்சர் தனி விமானத்தில் வருகிறார். பிரேத பரிசோதனை காலையில் தான் செய்வார்கள். ஆனால் முதலமைச்சர் வருவதற்கு முன்னதாக அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதில் இன்னொரு அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டுமென ஆஸ்கர் நிறுவனத்தை நான் கேட்டு கொள்கிறேன். ஒரு துயர சம்பவத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்
இதை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். கடந்த கூட்டத்தில் எவ்வளவு மக்கள் வந்தார்கள் இந்த கூட்டத்தில் எவ்வளவு மக்கள் வருவார்கள் என உளவுத்துறைக்கு நன்றாகவே தெரியும். கரூரில் பெரிய இடத்தை காவல்துறை கொடுத்திருக்கலாம். அதே நேரத்தில் விஜய் தாமதமாக வந்ததும் ஒரு காரணம் தான். 11.30 என அறிவித்துவிட்டு மாலை 6.30க்கு வந்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடமை இருக்கிறது. 11 மணி என்றால் குறைந்தபட்சம் ஒரு நான்கு மணிக்குள்ளாவது வந்திருக்கலாம். அனைவருக்கும் தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். நாங்களும் மாநாடு நடத்தியிருக்கிறோம். மாமல்லபுரத்தில் சுமார் 10 லட்சம் பேர் கூடினார்கள், ஆனால் எந்த பிரச்னையும் ஏற்படவே இல்லை..
இச்சம்பவத்திற்கு பொதுமக்களும் ஒரு காரணம் தான்.. குழந்தைகளை இதுபோன்ற இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது. எல்லோருக்கும் கடமை இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது. நீதியரசர் அருணா ஜெகதீசன் நேர்மையானவர்தான். அவர் ஒரு பக்கம் விசாரணை நடத்தட்டும். ஆனால் அரசாங்கம் எல்லா உண்மைகளையும் அவரிடம் சொல்வார்களா என்பது தெரியவில்லை. ஏன் மின்தடை ஏற்பட்டது. யார் பாட்டில் வீசினார்கள். அனைத்தும் இது வதந்தி தான்.. முதலில் இந்த இடத்தை யார் தேர்வு செய்தார்கள்... அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்:" இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications