"சம்மட்டி அடி" அன்புமணி.. "உனக்கென்னப்பா? ஊட்டிக்கு தனியா போவே?" திமுக நக்கலடிக்க, பின்னாலயே அதிமுக
சென்னை: அதிமுகவுடனேயே பாமக கூட்டணி வைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பாமக - பாஜக கூட்டணி முடிவாகி உள்ளது. இது அரசியல் தளத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை திமுகவும் கிண்டலடித்து வருகிறது.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை பாமக வைத்திருக்கிறது.. எனவேதான், பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுகவும், பாஜகவும் சமீப நாட்களாகவே முயற்சித்து வந்தனர்.. அதிமுக தரப்பில், பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 7 + 1 சீட்கள் வரைகொடுப்பதாக உறுதி அளித்தனர்.

அன்புமணி: அதேபோல, பாஜக தரப்பும் அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.. இறுதியில் 10 + 1 சீட்கள் வரையும், ஆட்சி அமைந்ததுமே, மத்திய அமைச்சர் பதவியும் தருவதாக உறுதி தந்தனர்.. இதனால் யாருடன் பாமக கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு நாளும் எழுந்தபடியே இருந்தன.. இறுதியில் பாஜக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பாமக திடீரென பாஜகவுடன் இணைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. தொடர் தோல்விகளால் மாம்பழ சின்னத்தை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக உள்ளது..
நழுவவிட்ட அதிமுக: அதுமட்டுமல்ல, கூட்டணியில் 10 தொகுதியில் போட்டியிடுவதால் குறைந்தது 1 சதவீதம் வாக்கு வாங்கினால் சின்னத்தை தக்கவைக்க முடியும் என்றும் கணக்கு போடுகிறது. இதை மனதில் வைத்தே பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.. எப்படி பார்த்தாலும் பாமகவை நழுவவிட்டது அதிமுகவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
இதைதான் திமுக கிண்டல் செய்தது.. திமுக ஐ.டி. பிரிவு எக்ஸ் பக்கத்தில் அதிமுக-வை கிண்டல் செய்யும் வகையில், "ஊட்டிக்கு தனியாதான் போகனும் போல"... என எடப்பாடி பழனிசாமி வீட்டின் படத்தை வெளியிட்டு பதிவிட்டிருந்தது.
அமைதிப்படை: அதாவது சத்யராஜ் நடித்துள்ள அமைதிப்படை படத்தில், சத்யராஜ் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார். வாக்கு எண்ணிக்கையின்போது, அவரது வாக்கு வித்தியாசத்தில் அதிகரிக்க அதிரிக்க, மணிவண்ணனின் சின்னவீடு, அப்படியோ சத்யராஜ் பக்கம் மெல்ல சாய்ந்துவிடுவார். அந்த நேரத்தில், மணிவண்ணன் இந்த வசனத்தைதான் பேசுவார். இதைத்தான் நக்கலாக திமுக பதிவிட்டிருந்தது.
திமுக இப்படி கிண்டல் செய்ததற்கு, அதிமுக தற்போது பதிலடி தந்துள்ளது.. "உனக்கென்னப்பா... நீ ஜாபர் சாதிக்கை கூட கட்சியில சேர்த்துட்டு Private Jet ல போவ.
நாங்க அப்படியா? தமிழ்நாட்டு நலன் பத்தி சிந்திக்கிற கட்சிகளுடனும் மக்களுடனும் கூட்டணி வெச்சிருக்கோம்.
ஊட்டி என்ன? கும்மிடிப்பூண்டில இருந்து குமரி வரைக்கும் எல்லா ஊருக்கும் போவோம்- ஸ்டைலா கெத்தா! ?️" என பதிலடி கொடுத்துள்ளது..

கிண்டல்: ஆக, பாமக - பாஜக கூட்டணி + அமைதிப்படை சத்யராஜ் காமெடி என சோஷியல் மீடியாவில் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் கிண்டலடித்து கொள்கிறார்கள்..!
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி!












Click it and Unblock the Notifications