வட இந்தியர்களுக்கு முன்னுரிமை.. காஞ்சிபுரம் கலெக்டர் பேச்சை கண்டித்த அன்புமணி.. முதல்வருக்கு கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக காஞ்சிபுரம் கலெக்டரின் பேச்சை கண்டித்துள்ள அன்புமணி ராமதாஸ், இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வட இந்தியத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக வேலை செய்வதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், உள்ளூர் மக்கள் அதிக ஊதியமும், அதிக விடுமுறையும் கேட்பதுடன் குறைந்த அளவில் மட்டுமே வேலை செய்வதால் அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கூறியிருக்கிறார்.

ஒரு மாவட்ட ஆட்சியராக மாவட்ட மக்களின் நலனுக்கும், வாழ்வாதாரத்திற்கும் வகை செய்ய வேண்டிய அவர், தனியார் மனிதவள மேலாண்மை நிறுவனத்தின் அதிகாரியைப் போன்று பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகளைக் கொண்ட மாவட்டங்களில் காஞ்சிபுரமும் ஒன்றாகும். சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. அந்தத் தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு தான் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கூட தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80% வரை உள்ளூர் மக்களுக்குத் தான் வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளன. தமிழகத்தில் அத்தகைய சட்டம் இயற்றப்படவில்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் முன்னுரிமையாவது அளிக்கப்பட வேண்டும்.
அதை விடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மக்களை புறக்கணித்து விட்டு, வட இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும், அதை மாவட்ட ஆட்சியரே நியாயப்படுத்துவதும் எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. மக்களின் காவலராக திகழவேண்டிய மாவட்ட ஆட்சியர், தனியார் நிறுவனங்களின் முகவரைப் போல செயல்படக் கூடாது. ஆந்திராவில் பிற மாநிலத்தவருக்கு வேலை மறுக்கப்படுவதால் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஸ்ரீசிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் கூட தமிழர்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. உள்ளூர் தொழிற்சாலைகள் தான் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வாய்ப்பு எனும் போது அதிலும் துரோகம் செய்வதை அனுமதிக்க முடியாது.
2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தால் இந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை. அரசின் செயல்பாடின்மையும், அமைதியும் தான் மாவட்ட ஆட்சியர்களையும், தனியார் தொழிற்சாலைகளையும் உள்ளூர் மக்களுக்கு எதிராக செயல்படத் தூண்டுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா? அல்லது வட இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு என்றால், அதற்கு எதிராக பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 80% வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்குவதற்கான சட்டத்தை வரும் 9-ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications