அனைத்திற்கும் எல்லை உண்டு.. உட்காருங்க.. செய்தியாளர்களிடம் கொந்தளித்த அன்புமணி.. ஏன் தெரியுமா?
எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு, அமைதியாக உட்காருங்கள் என்று செய்தியாளர்களை பார்த்து பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் கொந்தளித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னை: எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு அமைதியாக உட்காருங்கள் என்று செய்தியாளர்களை பார்த்து பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் கொந்தளித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை சென்னையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக - பாமக கூட்டணி குறித்து அன்புமணி விளக்கம் அளித்தார்.
தொடக்கத்தில் அமைதியாக பேசிய அன்புமணி செல்ல செல்ல கோபமாக பதில்களை அளித்தார். இதனால் அங்கு கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது.

ஏன் கோபம்
அதிமுக குறித்த கேள்விகளுக்குத்தான் அன்புமணி கோபமாக பேசினார். முக்கியமாக அதிமுக செய்த ஊழல் குறித்து அன்புமணியிடம் கேள்வி கேட்கப்பட்டது. குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு அதிமுக மீதான ஊழல் புகார்கள் குறித்து அன்புமணியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ஆளுநர் புகார்
அதேபோல் ஆளுநரிடம் முதல்வர் பழனிச்சாமி தொடர்பாக அன்புமணி அளித்த புகார்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. இது தொடர்பான கேள்விகளுக்கு தொடக்கத்தில் அன்புமணி பட்டும் படாமல் பதில்களை அளித்து வந்தார். ஆனால் அது தொடர்பாக தொடர் கேள்விகளை கேட்டதும் கோபம் அடைந்தார்.

என்ன விவாதம்
செய்தியாளர் சந்திப்பில் நடந்ததாவது,
கேள்வி: அதிமுக ஊழல் உள்ள கட்சியா? இல்லையா? நீங்கள் இன்னும் அந்த நிலைபாட்டில் உள்ளீர்களா?
அன்புமணி: பார்க்கலாம், விசாரணை நடக்கும் வரை பொறுத்திருங்கள்
கேள்வி: ஊழல்வாதி ஜெயலலிதாவிற்கு மணிமண்டபமா என்ற நீங்கள் கேட்டீர்கள்? அந்த நிலைப்பாடு எப்படி உள்ளது?
அன்புமணி: பதில் அளிக்க முடியாது!
கேள்வி- அதிமுகவுக்கு எதிராக நீங்கள் வைத்த புகார்களுக்கு மன்னிப்பு கேட்க தயாரா?
அன்புமணி: அனைத்திற்கும் எல்லாம் உண்டு அமைதியாக இருங்கள்! உட்காருங்கள்!
கேள்வி - விஜயபாஸ்கர் மீதான உங்களின் புகார்கள் அப்படியேதான் இருக்கிறதா? அதற்கு மன்னிப்பு கேட்பீர்களா?
அன்புமணி - செய்தியாளர்கள் அசிங்கமாக நடந்து கொள்ள வேண்டாம்.. விட்டா என்னை அடிச்சிட்டுவீங்க போல. நீங்கள் கேட்பதற்குத்தான் பதில் சொல்கிறேன்.
செய்தியாளர்: உங்கள் மீது எழும் கேள்விகள் எல்லாம் நியாயமான கேள்விகள்தான்.. புரிந்து கொள்ளுங்கள்!
அன்புமணி: போதும், போதும்.. நீங்கள் கேள்வி கேட்டதே போதும். அவரின் மைக்கை வாங்குங்கள்.. சட்டமன்றத்தில் செய்வதை போல அவரின் மைக்கை ஆப் செய்யுங்கள், என்று கோபமாக குறிப்பிட்டார்.

சலசலப்பு நீடித்தது
அன்புமணியின் தொடர் கோபமான பதில்களால் செய்தியாளர் சந்திப்பில் சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக குறித்த கேள்விகளுக்கு அன்புமணி கோபமாக பேசினார். அதுகுறித்து கேள்வி கேட்ட பல பத்திரிகையாளர்களுக்கு அன்புமணி கோபமாக பதில் அளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications