ஸ்டாலினுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை .. மத்திய சென்னையிலிருந்து நக்கலடித்த அன்புமணி!
மத்திய சென்னை பாமக வேட்பாளருக்காக அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னை: "ஸ்டாலினுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "விவாதம்". நானும் 4 வருஷமாக விவாதத்துக்கு அவரை கூப்பிட்டு கொண்டே இருக்கிறேன்... ஆனால் வரவே இல்லை " என்று அன்புமணி ராமதாஸ் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மத்திய சென்னையில் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அமைச்சர் ஜெயக்குமாரும் அன்புமணியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கும்போது அன்புமணி பேசியதாவது: "எப்ப பார்த்தாலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் எங்களை திட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். திட்ட மட்டுமே அவருக்கு தெரிகிறது... ஆனால் நல்ல திட்டங்களை பற்றி தெரிவதில்லை. நாட்டின் வளர்ச்சி பற்றி பேசுறதே கிடையாது. ஆனால் நாங்கள் பேசுறோம்.

விவாதிக்க தயாரா?
தமிழ்நாட்டுக்கு நீங்க என்ன செஞ்சீங்க? நாங்க என்ன செஞ்சோம்? என்று மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் எப்பவும் தயாராகத்தான் இருக்கிறேன். அதனால்தான் விவாதிக்க வாங்க என்று 4 வருஷமாக கூப்பிடுகிறேன். அதுவும் ஒரு ஆரோக்கியமான அரசியல் விவாதத்துக்குதான் கூப்பிடுகிறேன். ஆனால் அவருக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "விவாதம்"

4 மாசத்தில் இடைத்தேர்தல்
இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு எதிரான வழக்கு ஒன்று உள்ளது. அதை இன்னும் 4 மாசத்தில் முடிக்கும்படி கீழ் நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதனால் அவருக்கு ஓட்டு போட்டால், அடுத்த 4 மாசத்தில் கண்டிப்பாக இதே மத்திய சென்னையில் இடைத்தேர்தல் வரும்.

காலி குடங்களா?
தயாநிதி மாறன் பெரும் பணக்காரர். இந்த தொகுதியில் காலி குடங்களோடு பெண்கள் நிற்கிறார்கள் என்று அவர் பேசியிருக்கிறார். 10 ஆண்டுகளாக இதே தொகுதியில்தான் அவர் எம்பியாக இருந்திருக்கிறார். குடிநீர் பிரச்சனையை தீர்க்க அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால், யாருமே காலி குடங்களோடு நின்றிருக்க மாட்டார்கள்.

தெளிவா இருக்காங்க
காவிரி பிரச்சனையிலிருந்து, நீட் பிரச்சனை வரை கொண்டு வந்தது திமுகதான். அதனால் மக்களை ஏமாற்றவே முடியாது. அதிலும் இப்போதெல்லாம் இளைஞர்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறாங்க. செல்போன் மூலம் தகவல்களை தெரிந்து கொண்டு வருவதால் நிச்சயம் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications