அப்பாவெல்லாம் அப்பறம் தான்.. பாமகவில் ராமதாஸ் முடிஞ்சு போன கதை! யூகத்துக்கு டாட் வைத்த அன்புமணி!
மதுரை: திமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது, அதிமுக தலைமையிலான NDA கூட்டணி 200 இடத்தை பிடித்து ஆட்சி அமைப்போம் எனவும், திமுக ஒற்றை இலக்கை மட்டுமே பெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மீண்டும் பாமகவில் ராமதாஸுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பாபுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ் அது முடிந்த போன கதை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணி, அவர்களது மூத்த மகள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ்," ஆன்மீக பயணமாக மதுரை அழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.

அன்புமணி ராமதாஸ் பேச்சு
அனைத்து தரப்பினரும் திமுக மீது கோபத்தில் உள்ளனர். 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் 505 வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால் 66 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டது. அதனால் சத்துணவு, ஊராட்சி செயலாளர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், ஆசிரியர், என அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் எங்களை ஏமாற்றி விட்டார் என சொல்கின்றனர். தற்போது தமிழகத்தில் நடப்பது காட்டாச்சி, திமுவின் மிகப்பெரிய தோல்வி எங்கும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது.
திமுக ஆட்சி
அமெரிக்காவில் கிடைக்கும் போதைப் பொருள் கூட இங்கு கிடைக்கிறது. இளம் சமூகத்தை போதைப்பொருளால் வீணாக்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ளவர்களை போதைப்பொருள் விற்பனையால் நாசப்படுத்திவிட்டனர். கருணாநிதி 3 தலைமுறையாக மதுகடை திறந்து குடிக்க வைத்தார். திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் உள்ளது. சிபிஐ விசாரணை வரும் 2 மாதத்தில் அதிமுக ஆட்சி வரும், கிரானைட் கொள்ளை உள்ளிட்ட கொள்ளைகள் குறித்து விசாரணை நடத்துவோம்.
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் தினசரி பொய் பேசுகிறார். முதலீடு குறித்து பொய் சொல்கிறார். மொத்தத்தில் 2 லட்சம் கோடி தான் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால் எப்படி 12.25 லட்சம் கோடி ஒப்பந்தம் வந்தது. எங்களது கூட்டணி உணர்வுப்பூர்வமான கூட்டணி இன்னும் சில கட்சிகள் எங்களுடன் வருகிறது. திமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது. தேர்தலில் எங்களுக்கு சாதகமான பேரலை வரும். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 சீட்டுகளை பெறுவோம், திமுக ஒற்றை இலக்கை பெறுவார்கள்.
2026 தேர்தல்
திமுக ஆட்சி மோசமான ஆட்சி தமிழகத்தில் ஆண்ட முதலமைச்சர்களின் ஆட்சியிலயே ஸ்டாலினின் ஆட்சிதான் மோசமான ஆட்சி. சில அதிகாரிகளும், வியாபாரிகள் போல உள்ள அமைச்சரும் தான் இந்த ஆட்சியை நடத்துகின்றனர். சாதி வாரி கணக்கெடுப்பது எடுக்காதது ஏன். இந்த திமுக ஆட்சியை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். முதலமைச்சர் அன்றாடம் உளறி கொண்டிருக்கிறார். இப்போது புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். கனவை சொல்லுங்கள் என கேட்கிறார் இளைஞர்கள் அதற்கு போதைப்பொருள், லஞ்சம் இருக்க கூடாது என சொல்வார்கள்.
இறுதியாக பாமகவில் மீண்டும் ராமதாஸுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ் "அது முடிஞ்சுபோன கதை" என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications