அமித்ஷா ஆர்டர்.. எடப்பாடி பழனிசாமியின் வீடு தேடி வந்த அன்புமணி.. உறுதியான அதிமுக பாமக கூட்டணி
சென்னை: பாமகவில் உள்கட்சி பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகிறது. ராமதாஸ் - அன்புமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், பிரச்சனைகளை விரைவில் முடித்து கூட்டணி நிலைப்பாட்டி இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாமக உள்ளது. இந்நிலையில் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை, அன்புமணி ராமதாஸ் சந்திப்பு இன்று நடைபெற்ற நிலையில், அதிமுக பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு 2 மாதங்களே உள்ளன. மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வியூகங்களில் பரபரப்பாக உள்ளனர். பாமகவில் தந்தை மகன் பனிப்போர் வெடித்து கொண்டிருக்கிறது. ராமதாஸ், அன்புமணி இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவுகிறது. இதன் காரணமாக பாமகவில் பிளவு ஏற்பட்டு, ராமதாஸ், அன்புமணி தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.

பாமக கூட்டணி நிலைப்பாடு
பாமகவில் நிலவும் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து, அவர்களை தங்கள் கூட்டணியில் உறுதிபடுத்தும் வேலையில் அதிமுக - பாஜக இறங்கியுள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதுகுறித்து நேரடியாகவே பாஜக நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்.
பாமக வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதேநேரத்தில் ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பாமகவில் எப்போது பிரச்சனைகள் முடிவடையும் என்று அந்தக் கட்சியின் தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி - அன்புமணி சந்திப்பு
கடலூரில் இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அன்புமணி உரையாற்ற உள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை, பாமக அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை பாமக அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பையடுத்து, அதிமுக பாமக கூட்டணி உறுதியாகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வலிமையான தமிழகம் அமைய வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications