6 ஆம் வகுப்பு பாடத்தில் ரம்மி! மாணவர்களை சீரழித்துவிடும்! அன்புமணி ராமதாஸ் கடும் ஆட்சேபனை!
சென்னை: 6 ஆம் வகுப்பு கணிதப்பாடத்தில் ரம்மி விளையாடுவது பற்றி விளக்கப்பட்டிருப்பது தனக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சீட்டுக்கட்டுகளுடன் கூடிய அந்த பாடம் மாணவர்களின் கண்களில் கூட படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

6-ம் வகுப்பு
தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ரம்மி ஆட்டத்தை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மாணவர்களை சீரழித்து விடும்!

ரம்மி ஆட்டம்
முழுக்கள் என்ற பாடத்தின் நோக்கம் எண்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதாக இருக்கலாம். ஆனால், அதற்கு நல்ல உதாரணங்கள் இருக்கும் நிலையில், ரம்மி ஆட்டத்தை எடுத்துக்காட்டாக வைத்திருப்பது தவறு. இது மாணவர்களுக்கு எண்களை கற்றுத்தராது; ரம்மியைத் தான் கற்றுத் தரும்!

மாணவர்களை சீரழிக்கும்
ஆன்லைன் ரம்மி ஆட்டம் இளைய சமுதாயத்தை சீரழித்து தற்கொலைக்கும், கொலைகளுக்கும் வழி வகுத்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த பாடம் சீரழிவை மேலும் அதிகரிக்கச் செய்யும். மானவர்களுக்கு நன்மையை போதிக்க வேண்டிய பாடநூல்கள் தீமையை போதிக்கக்கூடாது!

கண்களில் படக்கூடாது
ரம்மியை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடத்தை மாற்றியமைத்தால் மட்டும் போதாது. சீட்டுக்கட்டுகளுடன் கூடிய அந்த பாடம் மாணவர்களின் கண்களில் படக்கூடாது. அதற்காக இப்போது வரும் கல்வியாண்டுக்கு அந்த பாடம் இல்லாத புதிய பாடநூல்களை அச்சிட்டு வழங்க அரசு முன்வர வேண்டும்!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications