மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசு இடங்களுக்கு பொது நுழைவுத்தேர்வா? அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு
சென்னை: மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு வேண்டாம்; ஆனால் மாநில அளவில் பொதுநுழைவுத் தேர்வு நடத்தலாம் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதற்கு பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மருத்துவப் படிப்பில் மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் நடத்தலாம். மாநில அரசு இடங்களுக்கு நீட் கூடாது... அதற்கு மாநில அரசே நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இது என்ன இரண்டும் கெட்டான் நிலைப்பாடு?
நுழைவுத்தேர்வு என்பது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கக்கூடியது. அந்தத் தேர்வை மத்திய அரசு நடத்தினாலும், மாநில அரசு நடத்தினாலும் அது மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி தான். அதை தமிழக அரசு செய்யக் கூடாது!
எந்தப் படிப்புக்கும், எந்த வடிவிலும் நுழைவுத்தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. திமுகவின் நிலைப்பாடு என்ன? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு கூடாது!
நீட் தேர்விலிருந்து ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். அதற்காக சட்ட, அரசியல் நடவடிக்கைகள் அடங்கிய செயல்திட்டத்தை கால அட்டவணையுடன் உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
நீட் வினாத்தாளுடன் தூத்துக்குடி சென்ற வாகனம்.. நடு வழியில் நின்றதால் பரபரப்பு.. இரவில் நடந்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications