எந்த பலனும் இல்லை.. பாஜகவை கழற்றிவிடும் அன்புமணி.. பனையூரில் திமுக தொடங்கிய கூட்டணி பேச்சுவார்த்தை?
சென்னை: திமுக தரப்பில் இருந்து பாமக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டது தெரிய வந்திருக்கிறது. என்டிஏ கூட்டணியில் மத்திய இணையமைச்சர் பதவி கிடைக்கும் என்று அன்புமணி எதிர்பார்த்த நிலையில், அது நடக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதனால் பாஜக உடன் கூட்டணியில் இருந்து எந்த பலனும் இல்லை என்பதால், திமுக உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
2011 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிட்டது. அந்த தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் பாமக மீண்டும் திமுக கூட்டணியில் இடம்பெறவில்லை. அதேபோல் விசிக மற்றும் பாமக எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்டு வந்ததால், திமுக கூட்டணிக்குள் விசிகவை ஸ்டாலின் அரவணைத்தார். திமுக கூட்டணிக்கு வந்த பின், விசிகவின் வளர்ச்சியும் அபரிதமாக இருந்து வருகிறது.

தற்போது 2 எம்எல்ஏ-க்களை வைத்தே அமைச்சர் பதவி வரை விசிக கைப்பற்றியுள்ளது. தற்போது தவெக தலைமையிலான கூட்டணியில் விசிக இருந்து வருகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் இருந்த ஏராளமான கட்சிகள் தவெக பக்கம் நகர்ந்துவிட்டன. இதனால் மீண்டும் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய தேவையோடு ஸ்டாலின் இருக்கிறார்.
குறிப்பாக சென்னை உட்பட வட மாவட்டங்களில் பாமக வலிமையாக இருக்கிறது. பாமக இல்லாமல் அதிமுகவால் இத்தனை இடங்களில் வென்றிருக்க முடியாது என்றும் நம்பத் தொடங்கி இருக்கிறது. அதனை அன்புமணி ராமதாஸ் ஒவ்வொரு கூட்டத்திலும் பதிவு செய்து வருகிறார். அதேபோல் காவிரி விவகாரத்தின் போது திடீரென பாஜக உடன் கூட்டணியில் இருந்து விலகவும் தயார் என்று பேசி அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
அன்புமணியின் இந்த பேச்சிற்கு மத்திய இணையமைச்சர் பதவியை பாஜக கொடுக்க முன் வராததே காரணம் என்று சொல்லப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலின் போது பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றதற்கு இந்த கோரிக்கையும் ஒரு காரணம். ஆனால் இதுவரை பாஜக அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.
இந்த சூழலில் பனையூரில் வசித்து வரும் அன்புமணி ராமதாஸ் தரப்புடன் திமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. இதற்கு செளமியா அன்புமணியும் ஒத்துப் போவதாக சொல்லப்படுகிறது. திமுக உடன் கூட்டணியில் இணைந்தால், லோக்சபா தேர்தலில் எம்பிக்களை அதிகமாக பெற்று வெல்ல முடியும் என்று கணக்கு போடுவதாக தெரிகிறது.
இந்த இடைத்தேர்தலுக்கே பாமக கூட்டணியை அமைக்க வேண்டும் என்று திமுக விரும்புகிறது. இதனால் யோசனையில் இருக்கும் அன்புமணியிடம் தொடர்ந்து பேசவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது. விரைவில் பாமக பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து, கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை மாற்றம் செய்யலாம் என்றும் பேச்சுகள் அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications
