Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கண்ணாடியாக நொறுங்கும் கனவு".. எடப்பாடியை நம்ப கூடாது.. அன்புமணி போட்ட போடு.. ஓ இதுதான் சங்கதியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக வெளியேறினால் அதிமுகவின் வாக்கு வங்கி மொத்தமாக காலியாகும். கூட்டணி கட்சிகள் எடப்பாடியை பெரிதாக நம்புவது இல்லை. எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி, சசிகலா எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக என்ற அமைப்பு ஒன்றாக இருந்தால்தான் அதற்கு மதிப்பு என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் நினைக்கின்றன. எடப்பாடியை பாமக வலிமையான தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பமாக பாமக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று தொண்டர்கள் எதிர்ப்பார்த்து வந்த நிலையில்தான் அந்த கூட்டணி கனவில் பாமக மண் அள்ளி போட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாமக - அதிமுக மீண்டும் கூட்டணி வைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மாறாக இரண்டு கட்சிகளுக்கும் இருக்கும் விரிசல் மேலும் அதிகரித்து உள்ளது.

சமீபத்தில் பாமக கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார்.

 அதிமுக விமர்சனம்

அதிமுக விமர்சனம்


மக்கள் நம்மை நம்புகிறார்கள். நாம்தான் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம், என்று அன்புமணி ராமதாஸ் அதிமுகவை விமர்சனம் செய்து, திமுகவை பாராட்டுவது போல பேசி இருந்தார். அதிமுகவை அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து இருந்த நிலையில், இதற்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதில், பாமக ஏறி வந்த ஏணி அதிமுக. அதிமுக இல்லை என்றால் பாமக இல்லை. பாமக நன்றி மறக்க கூடாது. பாமகவை ஏற்றி விட்டது ஜெயலலிதா. அன்புமணி மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனாலும் அவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். 1991 ஆம் ஆண்டு பாமக சட்டமன்றத்தில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பாமகவிற்கு அங்கீகாரம் கொடுக்க காரணமே ஜெயலலிதாதான் என்பதை மறக்க வேண்டாம். பாமக 1998 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 சீட்டு கொடுத்தது, என்று கூறினார். இந்த நிலையில் பாமக - அதிமுக மோதலுக்கு என்ன காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

திமுக

திமுக


அவரின் பேட்டி பின்வருமாறு.. திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் அதிமுகவிற்கு பாமக ரொம்ப முக்கியம். அதே சமயம் பாஜக எப்படியாவது அதிமுக - பாமக கூட்டணியை உருவாக்க பார்க்கும். அதிமுக பிளவுபட்டு கிடந்தால் தேர்தல் நேரத்தில் அது பாஜகவிற்கு உதவியாக இருக்காது. அதேபோல் பாமக இல்லை என்றாலும் அது பாஜகவிற்கு உதவியாக இருக்காது. எல்லா கட்சிகளும் ஒன்றாக வர வேண்டும். தேமுதிக போன்ற கட்சிகளும் வர வேண்டும். அப்போதுதான் அதிமுக கூட்டணி வலிமையாக இருக்கும். பாஜக இதற்கான வேலைகளை செய்யும். பாமக இல்லை என்றால் அதிமுக கூட்டணி வடதமிழ்நாட்டில் மோசமாக தோற்கும் வாய்ப்புகள் உள்ளன.

பாமக

பாமக

ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற மக்கள் தலைவர்கள் அதிமுகவில் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் இப்போது அதிமுகவிற்கு பாமகவின் தயவு தேவை. பாமக வெளியேறினால் அதிமுகவின் வாக்கு வங்கி மொத்தமாக காலியாகும். கூட்டணி கட்சிகள் எடப்பாடியை பெரிதாக நம்புவது இல்லை. எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி, சசிகலா எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக என்ற அமைப்பு ஒன்றாக இருந்தால்தான் அதற்கு மதிப்பு என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் நினைக்கின்றன. எடப்பாடியை பாமக வலிமையான தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை.

எடப்பாடி

எடப்பாடி

எடப்பாடி ஒரு குழுவிற்கு மட்டும்தான் தலைமை தாங்குகிறார். எடப்பாடிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. அவர் இன்னும் மக்கள் செல்வாக்கை நிரூபிக்கவில்லை. தனியாக நிற்கும் எடப்பாடியுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி ஒரு விபத்துக்குரிய தலைவர். ஒரு விபத்தால் அவர் தலைவர் ஆனார். ஆனால் அவர் ஒரு குரூரமான தலைவர். தான் வளர வேண்டும், தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. ஒரு தோல்விக்கு பின் வெற்றியை கொடுப்பவர்தான் மக்கள் தலைவர்.

வேட்பாளர்

வேட்பாளர்

ஆனால் 2019ல் தோற்ற எடப்படியால், 2021லும் தோல்வி அடைகிறார். முதல்வர் வேட்பாளர் என்று சொல்லியும் கூட எடப்பாடியால் வெற்றிபெற முடியவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட, அதிமுக ஆட்சியின் போது கூட திமுகதான் வென்றது. அப்படி இருக்கும் போது எடப்பாடியை நம்பி எப்படி பாமக கூட்டணி வைக்கும். கட்சிக்காரர்கள் எடப்பாடியை பெரிதாக நம்பவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில்தான் பாமகவை அனுசரித்து போகாமல் ஜெயக்குமார் போன்ற தலைவர்கள் பாமகவை விமர்சனம் செய்கிறார்கள். ஜெயக்குமார் எல்லை மீறி பேசுகிறார். பாமகவை ஜெயக்குமார் விமர்சனம் செய்ய கூடாது. பாமகவை ஜெயக்குமார் விமர்சனம் செய்ய விடாமல் தடுக்க வேண்டும். ஜெயக்குமாரை எடப்பாடிதான் தடுக்க வேண்டும்.

தேர்தல் கூட்டணி

தேர்தல் கூட்டணி


இந்த வருஷம் முடிவில் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், ஏற்பாடுகள் தொடங்கிவிடும். இப்போதே கூட்டணி கட்சிகளை பக்கத்தில் கொண்டு வர வேண்டும். ஆனால் அதை செய்யாமல் எடப்பாடி இருக்கிறார். உட்கட்சி பிரச்னையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். உட்கட்சி மோதலை முதலில் சரி செய்வோம். பின்னர் கூட்டணி பற்றி பேசலாம். இப்போது கூட்டணி பற்றி முடிவு எடுக்க நேரம் இல்லை என்று எடப்பாடி நினைக்கிறார். அதனால் ஜெயக்குமார் போன்றவர்களை அவர் கண்டிக்கவில்லை, என்று மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+