சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் அமைச்சராக இருந்த வரை நீட்டை வரவிடலை.. 2009 இல் போனேன்.. 2010 இல் வந்துவிட்டது! அன்புமணி ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நான் வெளியே வந்தவுடன் காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டுவந்துவிட்டது என தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தனித்து போட்டியிடும் பாமக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில் இந்தியாவில் வேறு எந்த நகரத்திற்கும் இல்லாத அளவிற்கு சென்னையில் கூவம், கொசஸ்தலை மற்றும் அடையாறு என்ற மூன்று ஆறுகள் உள்ளன.

தமிழக உரிமையை பறிக்காதீர்கள்! நீங்கள் செய்வது நியாயமில்லை! மத்திய அரசு மீது அன்புமணி பாய்ச்சல்! தமிழக உரிமையை பறிக்காதீர்கள்! நீங்கள் செய்வது நியாயமில்லை! மத்திய அரசு மீது அன்புமணி பாய்ச்சல்!

அதிமுக

அதிமுக

ஆனால் இவற்றை திமுகவினரும் அதிமுகவினரும் நாசம் செய்து விட்டார்கள். இந்த ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரை குடிநீராக மாற்றுவோம். அதிமுக, திமுகவை இன்னுமா நம்புகிறீர்கள்? நீட் விவகாரத்தில் முதல்வர் அதிமுகவை குறை கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர் செல்வமும் முதல்வர் மு.க.ஸ்டாலினை குறை கூறுகிறார்கள். வேண்டுமானால் ஒரு மேடை போடுவோம்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பது குறித்து இருவரும் விவாதியுங்கள். நானும் வருகிறேன். நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு. நீட் தேர்வு வர காங்கிரஸ்தான் முதல் காரணம், இரண்டாவது காரணம் திமு, மூன்றாவது பாஜக, 4ஆவது தான் அதிமுக. டாஸ்மாக் கடைகளை மூட அதிமுகவும் திமுகவும் தயாராக உள்ளனவா?

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

நான் மத்திய அமைச்சராக இருந்த போது நீட் போன்று தேர்வு நடத்த மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதவி விலகினேன். அது வரை அந்த தேர்வை நான் வரவிடவில்லை. நான் வெளியில் வந்த பிறகு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கொண்டு வந்தது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்த சட்டத்தை கொண்டு வந்தார்.

திமுகவின் காந்திச் செல்வன்

திமுகவின் காந்திச் செல்வன்


அப்போது மத்திய சுகாதாரத் துரை இணை அமைச்சராக இருந்தவர் திமுகவின் காந்திச் செல்வன். 2013 ஆம் ஆண்டு நீட் தேர்வு வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை காங்கிரஸ் தாக்கல் செய்தது. அதிமுக ஆட்சியில் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. நீட் தேர்வால் எத்தனையோ மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நீட் தேர்வை நிச்சயமாக தடை செய்ய வேண்டும் என்றார்.

English summary
Rajyasabha MP Anbumani Ramadoss says that Who is responsible for Neet Exam?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X