பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு? அரசுக்கு எதிராக திரும்பும் அரசு ஊழியர்கள்! உடைத்துப் பேசிய அன்புமணி
கன்னியாகுமரி: ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு வழங்கிய இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது என்ன? என எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இது பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக காத்திருக்கும் அரசு ஊழியர்களை ஏமாற்றம் செயல் எனவும், 2026 தேர்தலில் திமுகவிற்கு எதிராக அரசு ஊழியர்கள் வரும் தேர்தலில் வாக்களிப்பார்கள் என கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிமை மீட்க தலைமுறை காக்க பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வருகை தந்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், கன்னியாகுமரி சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப் பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு அய்யா வைகுண்டர் தலைமை பதி குரு பாலஜனாதிபதி தலைப்பாகை அணிவித்து வரவேற்பளித்த நிலையில் அய்யா வைகுண்டரை தரிசனம் செய்த பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ். அவருடன் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தரிசனம் செய்தனர்.

அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," கேரளாவில் ஆற்றில் மணல் எடுக்க கூடாது, மலையை உடைக்க கூடாது என சட்டம் உள்ளது. கேரளாவில் விவசாய நிலத்தை விவசாயத்திற்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என சட்டம் உள்ளது. கேரளாவில் ஆற்று மணல் அப்படியே உள்ளது மலையின் இயற்கை வளம் அப்படியே உள்ளது.. கேரளாவில் மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. ஏனென்றால் இங்கு கேடுகெட்ட ஆட்சி நடக்கிறது.
திமுக ஆட்சி
மக்களைப் பற்றியோ மண்ணைப் பற்றியோ இயற்கையோ தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை கொள்ளையோ கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தி ஊழல் நடைபெறுகிறது. வயநாடு நிலச்சரிவு போல் கன்னியாகுமரி மாவத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. இந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் கன்னியாகுமரியின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளது.
கரூர் விவகாரம்
கரூர் விவகாரத்தை விசாரிக்கும் அஸ்ராகார்க் நேர்மையான அதிகாரி, நிச்சயமாக நேர்மையான விசாரணை நடக்கும் என நம்புகிறேன். அஸ்ரா கார்க் நியமனத்திற்கு முன்பு சிபிஐ விசாரணை கேட்டேன். ஆறு வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரம் இல்லை என்று அந்த நபரை விடுதலை செய்துள்ளது. இந்த நாள் நீதியின் கறுப்பு நாளாக உள்ளது இது போன்ற மனித மிருகங்கள் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பல முறை வாக்குறுதி கொடுத்தும் அதனை நிறைவேற்றவில்லை. கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் தலைமையில் குழு அமைத்தார்கள். செப்டம்பர் மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சொல்லிவிட்டு, இடைக்கால அறிக்கையை அரசுக்கு வழங்கி உள்ளனர். ஓய்வூதிய திட்டங்கள் குறித்து வழங்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. இது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்
வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிராக இவர்கள் வாக்களிப்பார்கள். 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நிறுத்தப்படும் என்ற அச்சம் இருப்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் திமுக அரசு உள்ளது.
திமுக எதிர்ப்பு
கடந்த 3 ஆண்டுகளில் 1968 விவசாயிகள் கடன் தற்கொலை காரணமாக செய்துள்ளார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. விவசாயத்தை முழுமையுமாக நாசப்படுத்தி விட்டார்கள். குழந்தைகளுக்கு எதிரான குற்றம் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது. இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராகவும் சட்டமும் கிடையாது ஒழுங்கும் கிடையாது.கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று கூறுகிறார்கள் ஆனால் ஊழலில் சிறந்தது தமிழ்நாடாக உள்ளது. 2026 தேர்தல் களம் சூடாக இருக்கும், கூட்டணி சம்பந்தமாக பின்வரும் காலங்களில் முடிவு செய்யப்படும்" என தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications