விவசாயிகளுக்கு பயங்கர பாதிப்பு.. தினமும் 2000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யுங்க.. அன்புமணி கோரிக்கை
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் ஏதோ ஒரு சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர் என அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் தீவிரமடையாததால் லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. எனவே, தினமும் 2000 மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல் கொள்முதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஒவ்வொரு நாளும் 1000 மூட்டைகள் கூட நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.

நெல் அறுவடை
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமடைந்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 10.50 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. அவற்றில் இதுவரை 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு விட்டன. மீதமுள்ள 7 லட்சம் ஏக்கரில், அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் அடுத்த சில நாட்களில் அறுவடை செய்யப்படவுள்ளன. அறுவடை தீவீரமடைந்திருப்பதன் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அதிக அளவில் நெல் வரத் தொடங்கியிருக்கிறது. ஆனால், கொள்முதல் தீவிரமடையாததால் லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.

நெல் மூட்டைகள் தேக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 456 கொள்முதல் நிலையங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 519, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 159, மயிலாடுதுறை மாவட்டத்தில் 150 என மொத்தம் 1284 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையில் நெல் மூட்டைகள் வருகின்றன. ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அவற்றை அடுக்கி வைக்க போதிய இட வசதி இல்லாததால், தினமும் 1000 மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மழையால் ஏற்பட்ட பாதிப்பு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல கொள்முதல் நிலையங்களில் தினமும் 500-600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதனால், கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டு வரும் விவசாயிகள், நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு
காவிரி பாசன மாவட்டங்களில் இப்போது தான் சம்பா அறுவடை தொடங்கியுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் சம்பா அறுவடை உச்சத்தை அடைந்து விடும்; தாளடி அறுவடையும் தொடங்கி விடும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் நிலையங்களுக்கு வரக் கூடும். அப்போது நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கை பல லட்சமாக உயரக்கூடும். கடந்த வாரத்தில் பெய்தது போன்ற மழை, அப்போது பெய்தால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி விடும். கடந்த வாரம் பெய்த மழையிலேயே பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைத்து சேதமடைந்து விட்டன. அவற்றின் ஈரப்பதம் 25 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பதால் அவற்றை இப்போதைக்கு உழவர்களால் விற்பனை செய்ய முடியாது. அதனால் காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களுக்கு ஏற்படவிருக்கும் இழப்பின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாதது.

குடோன் வசதி
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை நிலவுவதும், அதனால் ஒவ்வொரு நாளும் 1000-க்கும் குறைவான நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதும் இப்போது ஏற்பட்ட சிக்கல் அல்ல. காலம் காலமாக இதே நிலை தான் காணப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளும், விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மூட்டைகளும் நனைத்து நாசமாவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இந்த நிலையை மாற்றுவதற்காக கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 5,000 மூட்டைகளை இருப்பு வைக்கும் அளவுக்கு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தியிருக்கிறது. அதை தமிழக அரசு செவிமடுக்காததன் விளைவு தான் நேரடி கொள்முதல் நிலையங்களில் இன்று நிலவும் சூழல் ஆகும்.

சபிக்கப்பட்ட தொழில் விவசாயம்
உலகிலேயே சபிக்கப்பட்ட தொழில் விவசாயம் தான் என்று சொல்லும் அளவுக்கு உழவர்களில் நிலை மோசமடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உழவர்கள் ஏதோ ஒரு சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். நடப்பாண்டிலாவது அவர்களுக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க வேண்டும். அதற்காக கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகள் அனைத்தும் அதே நாளில் கொள்முதல் செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும்; அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளை இருப்பு வைக்கும் அளவுக்கு கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications