கோயம்பேடு பஸ் நிலையத்தில் மால், ஐடி பார்க்கை அமைக்க கூடாது! மக்கள் வாழ வேண்டாமா? அன்புமணி கடிதம்
சென்னை: வாழத்தகுந்த சென்னை மாநகரை உருவாக்க கோயம்பேடு பசுமைப்பூங்கா, உயிரிபன்மய செயல்திட்டம், சென்னை பொதுவெளிகள் செயல் திட்டம் ஆகியவற்றை அரசு செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரை வாழத்தகுந்த, செழிப்பான, சிறந்ததொரு மாநகராக மாற்ற கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் பகுதியில் 50 முதல் 60 ஏக்கர் பரப்பில் ஒரு பெரிய பசுமைப்பூங்காவை அமைக்க வேண்டும் என்று பா.ம.க, தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் சென்னையில் சென்னை உயிரிப்பன்மய செயல்திட்டம், சென்னை பொதுவெளிகள் செயல் திட்டம்ஆகிய புதிய செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பன்னாட்டு உயிரிப்பன்மய நாளையொட்டி கடிதம் எழுதியுள்ளார். நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு உள்ளிட்ட 10 அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா உள்ளிட்ட 28 அதிகாரிகள் ஆகியோருக்கும் இந்த கடிதங்களின் நகல்களை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.
கடிதத்தின் விவரம்:
பெறுதல்
மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம், சென்னை - 600 009
2.மாண்புமிகு திரு.கே.என். நேரு
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம், சென்னை - 600 009
3.மாண்புமிகு திரு. எ.வ. வேலு
பொதுப் பணித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம், சென்னை - 600 009
4.மாண்புமிகு திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
தலைமைச் செயலகம், சென்னை - 600 009
5.மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
தலைமைச் செயலகம், சென்னை - 600 009
6.மாண்புமிகு திரு. சு. முத்துசாமி
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்,
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
7.மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன்
குடிசைத்தொழில்கள், சிறுதொழில்கள் உள்ளிட்ட ஊரகத்தொழில்கள்,தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
8.மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
9.மாண்புமிகு திரு. பி.கே. சேகர்பாபு
இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
(சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்)
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
10.மாண்புமிகு திரு. சிவ. வீ. மெய்யநாதன்
சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
11.மாண்புமிகு டாக்டர். மா.மதிவேந்தன்
வனத்துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
12.மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா
பெருநகர சென்னைமாநகராட்சி,ரிப்பன் மாளிகை, சென்னை - 600 003
13.திரு. சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப.
அரசு தலைமைச் செயலாளர்
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
14.திருமதி. சுப்ரியா சாஹு, இ.ஆ.ப
அரசு கூடுதல் தலைமை செயலாளர்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
15.திரு ககன் தீப் சிங் பேடி, இ.ஆ.ப
அரசு கூடுதல் தலைமை செயலாளர்
மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
16.திருமதி. காகர்லா உஷா இ.ஆ.ப
அரசு முதன்மை செயலாளர்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
17.டாக்டர்டி. கார்த்திகேயன், இ.ஆ.ப.,
அரசு முதன்மை செயலாளர்
நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
18.திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப.,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி)
திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
19.டாக்டர் பி. சந்திர மோகன் இ.ஆ.ப
அரசு முதன்மை செயலாளர்
பொதுப்பணி துறை
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
20.திரு. குமார் ஜெயந்த், இ.ஆ.ப.,
அரசு கூடுதல் தலைமை செயலாளர்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009
21.திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப
உறுப்பினர் செயலர், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA),
எண்.1, காந்தி இர்வின் சாலை,. எழும்பூர், சென்னை - 600 008
22.டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்,
பெருநகர சென்னை மாநகராட்சி,ரிப்பன் மாளிகை, சென்னை - 600 003
23.மாவட்ட ஆட்சியர்
சென்னை மாவட்டம், மாவட்ட ஆட்சியரகம்,
சிங்காரவேலர் மாளிகை, சென்னை - 600001
24.இயக்குனர்
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை
எண்.1,ஜீனிஸ் சாலை, பனகல் கட்டிடம்,
சைதாப்பேட்டை, சென்னை-600 015
25.திருமதி. பி. காயத்ரி கிருஷ்ணன்,இ.ஆ.ப.,
தலைமை நிர்வாக அதிகாரி(CEO),சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA),
எண்.1, காந்தி இர்வின் சாலை,. எழும்பூர், சென்னை - 600 008
26.திரு. ஐ. ஜெயக்குமார், ஐ.ஆர்.டி.எஸ்.,
சிறப்பு அலுவலர்,
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA),
நந்தனம், சென்னை - 600 035
27.மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்
எண். 5, காமராஜர் சாலை, சேப்பாக்கம், சென்னை - 600 005
28.Superintending Engineer (Parks, Playfields and CRRT)
Greater Chennai Corporation, Ripon Building,Chennai-600003.
29.தமிழ்நாடு பசுமை இயக்கம் (Green Tamil Nadu Mission)
எண்.1,ஜீனிஸ் சாலை, பனகல் கட்டிடம்,
சைதாப்பேட்டை, சென்னை-600 015
30.Tamil Nadu State Wetland Authority,
PanagalMaligai, Saidapet, Chennai - 600 015
31. Tamil Nadu Climate Change Mission
Tamil Nadu Green Climate Company,
7th Floor, Tamil Nadu Secretariat,
Namakkal KavignarMaaligai, Fort St. George, Chennai - 600009
32. Tamil Nadu Biodiversity Board (TNBB)
Velacherry-Tambaram Main Road, Post, Nanmangalam,
Medavakkam, Chennai, Tamil Nadu 600100
33. Principal Chief Conservator of Forests (Head of Department),
Forest Headquarters Building,Near KannikapuramCheckpost,
Guindy-Velacherry Main Road,Guindy, Chennai 600 032
34. District Forest Office, Chennai Division
259, Anna Salai,DMS Compound,Teynampet, Chennai 600 006,
35. Tamil Nadu Urban Habitat Development Board
No.5, Kamarajar Salai, Chepauk, Chennai 600004
36தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாடுவாரியம்,
எண்.76, மவுண்ட்சாலை, கிண்டி, சென்னை- 600 032
37. Directorate of Town and Country Planning
2nd, 3rd & 4th Floor, C & E Market Road, Koyambedu, Chennai - 600 107
38. Chennai Rivers Restoration Trust
6 / 103, Dr. D. G. S. Dinakaran Salai,
Raja Annamalaipuram,Chennai - 600 028.
39. Tamilnadu Urban Infrastructure Financial Services(TUFIDCO)
19,T.P Scheme Road,Raja Street Extention,
Raja Annamalai Puram,Chennai - 600028.
40. Chairperson,
National Biodiversity Authority(NBA),
5th Floor, TICEL Bio Park,CSIR, Road, Taramani,Chennai - 600 113
அன்புடையீர்! வணக்கம்.
பொருள்:சென்னைகோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம் இருந்த இடத்தில் ஒரு பெரிய பசுமைப் பூங்காவைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும்
அனைத்து உயிர்களின் இன்றியமையாத அடித்தளமான உயிரிப்பன்மயத்தை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாட்டிலும் சென்னை மாநகரிலும் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி இக்கடிதத்தை எழுதுகிறேன். அத்தகையநடவடிக்கைகளில் ஒன்றாக,சென்னைகோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம் இருந்த இடத்தில் ஒரு பெரிய பசுமைப் பூங்காவைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் எனவும், அதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
உலகளவில் உயிரிப்பன்மயத்தைக் காப்பதற்கான ஐநா உயிரியல் பன்மய உடன்படிக்கை (UN Convention on Biological Diversity -CBD)1992-ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இந்த நாள் பன்னாட்டு உயிரிப்பன்மய நாளாக (International Day for Biodiversity) கடைபிடிக்கப்படுகிறது.
பூமியில் எந்த ஒரு உயிரும் தனித்து வாழ இயலாது. இயற்கை அமைப்பில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு இடமும் தேவையும் இருக்கிறது. உயிரினங்களுக்கு இடையே உள்ள தொடர்பு ஒரு மாபெரும் வலைப்பின்னல் ஆகும். இந்த வலைப்பின்னலில் ஒரு கண்ணி அறுந்தால் அது மற்றதையும் பாதிக்கும். உயிரிப்பன்மயம் (Biodiversity)எனப்படும் இந்த வலைப் பின்னல்தான் மனிதவாழ்வின் ஆதரமாகும். மனிதர்களின் பெரும்பாலான அடிப்படை தேவைகளை இதுதான் நிறைவு செய்கிறது. சுவாசிக்கும் தூய காற்று, குடிக்கும் நீர், உணவு, உடை, இருப்பிடம் - இவை அனைத்தையும் உயிரிப்பன்மயம்தான் அளிக்கிறது.
மனிதர்களின் பல்வேறு தேவைகளான மரம், மருந்துப்போருட்கள், மீன், மாமிசம், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பல்வேறு தொழில்களுக்கான மூலப்பொருட்கள் என பொருளாதார ரீதியில் மதிப்பிடக்கூடிய ஏராளமான பொருட்களின் ஆதாரம் உயிரிப்பன்மய வளங்களே ஆகும்.
மனித வாழ்வின் மிக அடிப்படையான தேவைகளான, ஆனால், பொருளாதார ரீதியில் மதிப்பிடப்படாத மாபெரும் சேவைகளை உயிரிப்பன்மய வளங்களே வழங்குகின்றன. ஒரு பகுதியின் தட்பவெப்பம், அங்கு பெய்யும் மழை, கிடைக்கும் தண்ணீர், இயற்கையான நோய்த்தடுப்பு சூழல், சுவாசிக்கும் காற்றை தூய்மை படுத்துதல் போன்ற எல்லாமும் உயிரிப்பன்மயத்தால் நடைபெறும் ஒழுங்குமுறைப் பணிகளே ஆகும்.
பண்பாட்டு அடிப்படையிலான பல சேவைகளை உயிரிப்பன்மயம் அளிக்கிறது. கலாச்சார நம்பிக்கைகள், இயற்கை அழகு, சுற்றுலாவின் அடிப்படையான கடற்கரை, வனம், காடு, பறவைகள், விலங்குகள் என எல்லாமும் உயிரிப்பன்மய வளங்களே ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உயிரிப்பன்மயத்தை காக்க உறுதியேற்கும் வகையில் பன்னாட்டு உயிரிப்பன்மய நாள் கடைபிடிக்கப்படுகிறது.
(உயிரிப்பன்மயம் (Biodiversity)அல்லது உயிரியல் பன்மயம் (Biological Diversity) என்பது உயிரினங்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளைக் குறிக்கும் வார்த்தை ஆகும். உயிரிப்பன்மயம், உயிரிப்பன்மம், உயிரிப்பல்வகைமை, பல்லுயிரிப்பெருக்கம் எனப் பலவாறாக தமிழில் குறிப்பிடப்படுகிறது).
ஐநா உயிரிப்பன்மய மாநாடு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது. 2022கனடாவில் கூடிய 15ஆவது ஐநா உயிரிப்பன்மய மாநாட்டில் (COP15, UN Convention on Biological Diversity) குன்மிங்-மாண்ட்ரியல் உலகளாவிய உயிரிப்பன்மயக் கட்டமைப்பு (The Kunming-Montreal Global Biodiversity Framework)எனும் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்முக்கியத்துவதை உணர்த்தும் வகையில்,“Be part of the Plan” (திட்டத்தின் ஒரு பகுதியாக இருங்கள்) என்பதை 2024 உயிரிப்பன்மய நாள் முழக்கமாக ஐநா அவை முன்வைத்துள்ளது. உயிரிப்பன்மய செயல்திட்டத்தினை செயலாக்குவதில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.
இந்த செயல்திட்டத்தின் 2ஆவது இலக்கு சீரழிந்த இயற்கைவள பரப்பளவில் குறைந்தபட்சம் 30விழுக்காட்டினை 2030ஆம் ஆண்டுக்குள் மீளமைக்க கோருகிறது (Target 2: Restore 30% of all Degraded Ecosystems);இதன்12ஆவது இலக்கு நகரங்களில் பசுமைப் பொதுவெளிகளை அதிகரிக்கக் கோருகிறது (Target 12: Enhance Green Spaces and Urban Planning for Human Well-Being and Biodiversity)- இவ்வாறாக 2030ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய 23இலக்குகளை இந்தியா உட்பட உலகின் 196 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.இந்த இலக்குகள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
சென்னைகோயம்பேட்டில் இயங்கிவந்த புறநகர்ப் பேருந்து நிலையம் வண்டலூர் - கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெரிய பசுமைப் பூங்காவைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். மாறாக வணிக வளாகம், திரையரங்குகள்,அடுக்குமாடிக் குடியிருப்பு, ஐ.டி பார்க் போன்ற எதையும் அமைக்கக் கூடாது.
சென்னை மக்களை அச்சுறுத்தும் தொற்றா நோய்ப் பேராபத்து(Non-communicable diseases - NCDs), வெள்ளச் சேதம், நகர்ப்புற வெப்பத்தீவு(Urban Heat Island - UHI), நீர்ப்பற்றாக்குறை உள்ளிட்ட பல சிக்கல்களுக்குத் தீர்வாக கோயம்பேடு பசுமைப் பூங்கா அமையும். கோயம்பேடு, அரும்பாக்கம், திருமங்கலம், முகப்பேர், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்து வசதிகளுடன் கோயம்பேடு இணைக்கப்பட்டுள்ளதால் அதிக தொலைவில் உள்ள மக்களுக்கும் பயனாக இருக்கும்.
இந்தியாவிலும் உலகெங்கிலும் முன்னணி நகரங்கள் மிகப்பெரிய பொதுப் பூங்காக்களைக் கொண்டுள்ளன. அதுபோன்ற நல்வாய்ப்பு சென்னையில் இல்லை. பெங்களூரின் லால்பாக் தோட்டம் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. புதுதில்லியின் மெக்ராலி பூங்கா 200 ஏக்கரிலும், லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இந்த நகரங்களில் மேலும் பல பெரிய பூங்காக்கள் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா புதுதில்லியின் பதர்பூர் பகுதியில் 880 ஏக்கர் பரப்பளவில்450 கோடி ரூபாய் செலவில் இப்போது அமைக்கப்படுகிறது. நியூயார்க் நகரின் புகழ்பெற்ற சென்ட்ரல் பூங்கா 843 ஏக்கரிலும், லண்டன் நகரின் புகழ்பெற்ற ஹைட் பூங்கா 350 ஏக்கரிலும் அமைந்துள்ளன.
உலக நகரங்களுடன் ஒப்பிடும் அளவில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் பொதுமக்களுக்கான பூங்காக்கள் சென்னை நகரில் அமைந்திருக்கவில்லை.
சென்னை பூங்காக்களில் 20 ஏக்கர் பரப்பிலான செம்மொழிப் பூங்கா மற்றும் 15 ஏக்கர் பரப்பிலான அண்ணாநகர் கோபுரம் பூங்கா ஆகியன மட்டுமே பொது மக்கள் முழு அளவில் பயன்படுத்தத்தக்க பெரிய பூங்காக்கள் ஆகும்.
· மாநகரின் 30% முதல் 40% பரப்பளவைப் பசுமைப் பகுதியாகமாற்றுவோம், சென்னை நகர மக்களில் 70% பேருக்கு, 15 நிமிட நேரத் தொலைவுக்குள், நகர்ப்புறப் பூங்காவை நடந்து அடையும் வாய்ப்பினை, 2030ஆம் ஆண்டுக்குள் கிடைக்கச் செய்வோம் எனும் வாக்குறுதியை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது.இக்கோரிக்கையை முன்வைக்கும் சி40 நகர்ப்புற இயற்கைப் பிரகடனம்(C40 Urban Nature Declaration)எனும் பன்னாட்டு பிரகடனத்தை 2021ஆம்ஆண்டில்சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
· சென்னை மாநகராட்சியின்,சென்னைக் காலநிலைச் செயல்திட்டதை(Chennai Climate Action Plan) 2023 ஜூன் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்தச் செயல்திட்டத்தில் சென்னை மாநகரின் பசுமைப் பொதுவெளியை அதிகரிப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் தனிநபர் பொதுவெளிப் பரப்பளவை 2030, 2040,2050ஆம் ஆண்டுகளுக்குள் முறையே 25%,33%, 40% அதிகமாக்குவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்ந்த லட்சியங்கள் வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், உண்மையாகவே நிறைவேற்றப்பட வேண்டும். சென்னைப் பெருநகரில் புதிய பூங்காக்கள் உருவாக்குவதற்குப் போதுமான இடம் இல்லாத நிலையில், 36 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையமும், 6.8 ஏக்கர் பரப்பளவில் உள்ள புறநகரத் தனியார்ப் பேருந்து நிலையமும் இடம் மாற்றப்பட்டுள்ளது ஒரு நல்வாய்ப்பு ஆகும். இவற்றில் மொத்தமுள்ள 42.8 ஏக்கர் நிலத்தில், மாநகரப் பேருந்து நிலையத்திற்கான சுமார் 5 ஏக்கர் போக மீதமுள்ள பகுதியைப் புதிய பூங்காவாக உருவாக்க வேண்டும். இதன் மூலம்,சுமார் 50முதல் 60 ஏக்கர் அளவிலான பரப்பில் ஒரு பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும்.
இதன்முலம், கடந்த 60 ஆண்டுகளில், சென்னையில் இருந்த ஏராளமான நீர்நிலைகளும் பசுமைப் பகுதிகளும் அழிக்கப்பட்டதுதான் வரலாறு என்பதை மாற்றி, ஒரு பெரிய பசுமைப் பூங்காவைப் புதிதாக அமைக்கும் சாதனையை தமிழ்நாடு அரசு படைக்க முடியும். கூடவே, சென்னை மாநகரின் பிராண்ட் மதிப்பை உயர்த்தும் ஒரு மிகச்சிறந்த அடையாளமாகவும் இது இருக்கும்.
எனவே, சென்னைப் பெருநகரில் பூங்காக்கள் உள்ளிட்ட பொதுவெளிகள் குறைந்து வரும் நிலைமையைமாற்றவும், பெருகிவரும் தொற்றா நோய்ப் பேராபத்தை எதிர்கொள்ளவும், சென்னையின் சுற்றுச்சூழலையும்உயிரிப்பன்மயத்தையும்காக்கவும், நீர்வளத்தை மேம்படுத்தவும்,வெப்ப அலையை சமாளிக்கவும், வெள்ள பாதிப்பை குறைக்கவும் - கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையப் பகுதிகளில் புதிய பூங்காவை அமைக்க வேண்டும். அதற்கானஅறிவிப்பினைதமிழ்நாடுஅரசுஉடனடியாகவெளியிட வேண்டும்.
மேலும்,பொதுமக்களின் நடைப்பயிற்சிக்கும் உடலுழைப்புக்கும் உதவும் வகையிலுல் பாதுகாப்பானதாகவும்,அனைவருக்குமானதாகவும், கட்டணமில்லாததாகவும், பசுமையானதாகவும் இப்பூங்காவை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கூடவே, சென்னைமாநகரில்உயிரிப்பன்மயத்தைக் காப்பாற்றும் வகையிலும், மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கிலும்,சென்னை உயிரிப்பன்மய செயல்திட்டம் (Chennai Biodiversity Action Plan) மற்றும் சென்னை பொதுவெளிகள் செயல் திட்டம் (Chennai Public Spaces Action Plan)ஆகிய புதிய செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும்.தமிழ்நாடு மாநில பசுமைக் குழு ஏற்கெனவே தயாரித்துள்ளமரங்கள் சட்ட(Trees Act)முன்வரைவை சட்டமாக நிறைவேற்ற வேண்டும். அதனடிப்படையில் மரங்கள் ஆணையத்தை(Tree Authority)உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு மற்றும் சென்னையின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். வாழத்தகுந்த, செழிப்பான, சிறந்ததொரு சென்னை மாநகரை உருவாக்க துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தக் கடிதத்துடன் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் பசுமைத் தாயகம் அமைப்பின் விரிவான அறிக்கை ஒன்றினை இணைத்துள்ளேன். நிலம், நீர், காற்று, சுற்றுச்சூழலை காக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொண்டு அனைவருக்கும் வளமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அன்புமணி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications