அன்புமணி நடைப்பயணத்திற்கு திடீர் தடை! முதல் நாளே வந்த சிக்கல்.. டிஜிபி அதிரடி உத்தரவு
சென்னை: பாமக தலைவர் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் (Anbumani Road show) என்ற பெயரில் மாநிலம் முழுக்க நடைப்பயணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். முதல் நாளான இன்று திருப்போரூரில் நடைப்பயணத்தைத் தொடங்கினார். இதற்கிடையே அன்புமணி நடைப்பயணத்திற்கு அனுமதி தரக்கூடாது எனக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுக்க பாமக தலைவர் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் மாநிலம் முழுக்க நடைப்பயணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். முதல் நாளான இன்று திருப்போரூரில் நடைப்பயணத்தைத் தொடங்கினார். பாமக தொண்டர்கள் அதிகளவில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். நாளை செங்கல்பட்டில் நடைப்பயணம் மேற்கொள்ளவிருந்தார்.

இதற்கிடையே அன்புமணி நடைப்பயணத்திற்கு அனுமதி தரக்கூடாது என காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நகரங்களில் காவல் ஆணையர்கள், மாவட்டங்களில் எஸ்பிக்கள் தேவையான நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதாவது நடைப்பயணத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
அன்புமணி நடைப்பயணம் தொடர்பாக முன்னதாக ராமதாஸ் மனு அளித்திருந்தார். அதாவது நிறுவனர் என்ற முறையில் தனது அனுமதி இல்லாமல் அன்புமணி பேரணி நடத்துவதாகவும் இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் ராமதாஸ் மனு அளித்திருந்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளை டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதியில்லாமல் நடத்தப்படும் உரிமை மீட்பு பயணத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய மாவட்ட எஸ்பிகள் மற்றும் காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ராமதாஸ் அனுமதி இல்லாமல் நடத்தப்படக்கூடிய பேரணி இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் இதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என டிஜிபி தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைப்பயணத்தின் முதல் நாளே அன்புமணிக்கு அதிர்ச்சி தருவதாக இந்த உத்தரவு வந்திருக்கிறது. இதையடுத்து பாமக தலைவர் அன்புமணியை பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவசர ஆலோசனையை அவர்கள் நடத்தினர்.












Click it and Unblock the Notifications