சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக எங்களை அணுகியது.. அன்புமணி வெளியிட்ட பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    இதனால்தான் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தோம் - அன்புமணி விளக்கம்!-வீடியோ

    சென்னை: கூட்டணிக்காக மற்ற கட்சிகளை போல் திமுகவும் எங்களை அணுகியது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என இத்தனை காலம் கூறி வந்த பாமக தேர்தல் நேரத்தில் அதிமுக- பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இது பெரும் விவாதப் பொருளாகிவிட்டது.

    இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டதற்கு என்ன காரணம் என ராமதாஸ் அன்றைய தினமே விளக்கிய போதிலும் பாமகவிலிருந்தே கலகக் குரல் எழுந்தது. அது மட்டுமல்லாது பாமகவை கிண்டல் செய்து மீம்ஸ்கள் பறந்தன.

    எல்லா கட்சி

    எல்லா கட்சி

    இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி ஏன் என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் எல்லாம் எங்களை அணுகியது.

    ஆலோசனை

    ஆலோசனை

    திமுக தேர்தல் கூட்டணிக்காக எங்களை அணுகியது. இது தேர்தலின் போது இயல்புதான். நாங்கள் பல கட்ட ஆலோசனை செய்தோம். திமுக, அதிமுக குறித்து தொடர் ஆலோசனை நடத்தினோம்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    ஆலோசனைக்கு பின்பே அதிமுகவுடன் கூட்டணி முடிவானது. ஸ்டாலின் இப்போது எங்களை விமர்சனம் செய்கிறார். கூட்டணி வைக்காத ஆதங்கத்தில் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்.

    தடுமாற்றம்

    தடுமாற்றம்

    தோல்வி பயத்தில் அவர் அவதூறு பரப்புகிறார். நாங்கள் ஸ்டாலினை விமர்சனம் செய்ய மாட்டோம் என்றார் அன்புமணி ராமதாஸ். இந்த கூட்டத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் அவர் தடுமாற்றத்துடனே பதில் அளித்தார்.

     அன்புமணி கருத்து

    அன்புமணி கருத்து

    பாமகவை நாங்கள் கூட்டணிக்கு அணுகவில்லை என திமுக தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில் அன்புமணி தற்போது மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    It is said to be strong if Naam Thamizhar Seeman's alliance with MNM Kamal hasan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X