Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அன்புமணியை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்”.. ராமதாஸ் முன்னிலையில் கொந்தளித்த பாமக எம்.எல்.ஏ அருள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்புமணியை சிறைக்கு அனுப்ப வேண்டும் என ராமதாஸ் முன்னிலையில் ஆவேசமாகப் பேசியுள்ளார் பாமக எம்.எல்.ஏ அருள். "போலி ஆவணங்களை வைத்து நிலத்தை அபகரிப்பது போல் கட்சியை அபகரிக்கிறார் அன்புமணி. நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணியை சிறைக்கு அனுப்ப வேண்டும்" என கடலூரில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏ அருள் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே அதிகார மோதல் நடந்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளின் பதவிக்காலம் 01.08.2026 வரை செல்லுபடியாகும், அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ராமதாஸ் தரப்பு கடும் கொந்தளிப்பில் உள்ளது.

Anbumani Should Be Sent to Jail PMK MLA Arul Explodes in Front of Ramadoss

கடலூரில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக உள்ளரங்க கூட்டத்தில் பேசிய பாமக எம்.எல்.ஏ அருள், "இன்றைக்கு நடந்து கொண்டிருப்பது ஒரு போர். ஒரு குருஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு தூசுக்கும், இமயமலைக்கும் இடையிலே ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. அன்புமணி ஒரு தூசு. எதுக்கும் பயன்படாத ஒரு தூசு. அந்த சின்னப் புள்ளி, இன்றைக்கு ராமதாஸ் என்ற ஒரு இமயமலையோடு மோதுகிறது.

இன்றைக்கு பல திட்டங்களை, பல சதிகளை, பல துரோகங்களை பல்வேறு விதமான கோடிகளை இறைத்து செய்து கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் தெரியும். பெற்றெடுத்த அப்பா, அம்மாவை மதிக்காத யாரும் இந்த தமிழ்நாட்டிலே தலைவராக வந்ததில்லை. எம்ஜிஆரின் அம்மா சத்யா. அவரை தினமும் கோயில் கட்டி கும்பிடாத அளவுக்கு வழிபட்டு விட்டு தான் செல்லுவார். கலைஞர் அவருடைய தாய் அஞ்சுகம் அம்மையாரையும், அவருடைய தந்தை முத்துவேலரையும் தினமும் பார்க்காமல் வெளியே போக மாட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய தாய் சந்தியாவை கடவுளுக்கு நிகராக பார்த்தவர். இன்றைக்கு இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய அப்பா கலைஞர் அவர்களுக்கு 94 வயது வரை அவருடைய உதவியாளர் போல இருந்து செயல்பட்டவர். முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான் பெற்றெடுத்த தாயோடு உணவு அருந்துவதையே மிகவும் பெரிய பாக்கியமாக கருதியவர்.

அப்படிப்பட்டவர்கள் எல்லாம் வாழ்ந்த இந்த நாட்டிலே தன்னை பெற்றெடுத்த தந்தை இந்த பாட்டாளி மக்கள் கட்சி என்று ஒரு மிகப்பெரிய இயக்கத்தை உருவாக்கி அன்புமணியை தலைவர் ஆக்கிய ராமதாஸுக்கு அன்புமணி செய்து கொண்டிருக்கிற துரோகம் ஒன்றா, இரண்டா? தேர்தல் ஆணையம் ஒரு நீதிமன்றத்திற்கு சமமான ஒரு அமைப்பு. அந்த தேர்தல் ஆணையத்தில் பொய்யான தகவல் கொடுத்திருக்கிறார். 2022 மே மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஒரு தேர்தல் நடக்கிறது. அந்த பொதுக்குழுவிலே நிறுவனர் ராமதாஸ், தலைவராக அன்புமணியை முன்மொழிகிறார்.

அன்றைக்கு ராமதாஸால் தலைவராக்கப்பட்டவர் அன்புமணி. எல்லா கடிதமும் ஆதாரத்தோடு இருக்கிறது. அந்த ஆதாரத்தை எல்லாம் மறைத்துவிட்டு தேர்தல் ஆணையத்தில் 2023ல் நான் தலைவராக தேர்வானேன் என்று சொல்லி ஒரு செய்தியை கொடுக்கிறார். நீதிமன்றத்திற்கு நிகரான தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி மீது மருத்துவர் ஐயாவும், செயல் தலைவர் அக்காவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.

நீதிமன்றத்தை அவமதித்த அன்புமணியை சிறையில் அடைக்க வேண்டும். இந்த கடலூர் மண் ராமதாஸின் கோட்டை. புயலுக்கும் பணியாது, புனலுக்கும் பணியாது. நான் அய்யாவிடம் சொல்கிறேன். நீங்கள் நீதிமன்றத்தை ஏமாற்றிய அன்புமணி மீது வழக்கு தொடர வேண்டும். போலி பத்திரம் மூலம் நிலத்தை பிடுங்குவதை பார்த்திருக்கிறோம். இது நீங்கள் 46 ஆண்டுகாலம் உழைத்து உருவாக்கிய கட்சி. நிலத்தை அபகரிப்பது போல் கட்சியை அபகரிக்கிறார் அன்புமணி." எனப் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+