மிலிட்டரியையே பார்த்தவங்க நாங்க.. நீங்க அப்ப பிறக்கவேயில்லை! மாணிக்கம் தாகூரை விளாசிய அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு கூட்டு சதி செய்கிறார்கள் இதைச் சொன்னால் மாணிக்கம் தாகூர் சட்டையை மடித்துக் கொண்டு ஆவேசமாகிறார்; நாங்கள் ராணுவத்தையே பார்த்தவர்கள் அமைதியான முறையில் ஆக்கபூர்வமான அரசியல் செய்து கொண்டிருக்கிறோம் என மாணிக்கம் தாகூருக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Anbumani slams Manickam Tagore

மேலும் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக வடிவேல் இராவணனும், பொருளாளராக திலகபாமாவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். டாக்டர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் அவர் உடன் இணைந்து செயல்பட்டு வந்த பேராசிரியர் தீரன், பு.த.அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி முன்னிலையில் இணைந்து இந்த பொதுக் குழுவில் பங்கேற்றனர்.

அன்புமணி ராமதாஸ்

பொதுக்குழுவில் பேசிய அன்புமணி," கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே இடத்தில் பாமக பொதுக் குழு நடைபெற்றது அந்த பொதுக்குழு வேறுவிதமான சூழலில் நடைபெற்றது. அன்றைய சூழலில் பல அழுத்தமான விஷயங்கள் மனதில் இருந்தது. அந்த பொதுக்குழுவில் நான் பேசும்போது சொன்னேன் அந்த அணி.. இந்த அணி.. அவர்கள்..நாம் என்று பேசுவதை கேட்கும் போது எனக்கு மனம் அழுத்தமாக இருக்கிறது என்று கூறியிருந்தேன்.

பாட்டாளி மக்கள் கட்சி

நாம் அனைவரும் ஒரே குடும்பம் பாட்டாளி மக்கள் கட்சி என்று பேசினேன். ஒரு சூழ்ச்சியின் காரணமாக நிர்வாகிகள் சிலர் அங்கே இங்கு என்று இருக்கிறார்கள் என்று பேசி இருந்தேன். இந்த ஆண்டு அனைத்தும் மாறி இன்று மீண்டும் நாம் எல்லோரும் 'நாம்'என்று அந்த வார்த்தையை கேட்கின்ற பொழுது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பொது குழுவிலே ஒரு குறை இருக்கிறது. மருத்துவர் அய்யா இந்த பொது குழுவில் இல்லை என்ற ஒரு வருத்தம் இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல்

சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களில் நாம் வெற்றி பெறவில்லை என்றாலும் கிடைத்த வெற்றிகளின் மூலமாக நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம். மற்ற சில கட்சிகள் எல்லாம் அடங்கி ஒடுங்கி இருக்கக்கூடிய நிலையிலே நாம் மட்டும்தான் தலை நிமிர்ந்து இருக்கின்றோம் காரணம் மக்கள் நமக்கு கொடுத்திருக்கக் கூடிய அங்கீகாரம். தேர்தல் முடிந்த பிறகும் களத்தில் வேகமாக இருப்பது பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான்.

மேகதாது அணை

இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் மேகதாது அணை விவகாரத்தில் நல்ல விழிப்புணர்வை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாம் பெருமையோடு சொல்லலாம். நான்கு நாட்கள் நடை பயணம் மேற்கொண்டு அறிக்கைகள் கொடுத்தும் நாம் தொடர்ந்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம். பாராளுமன்றத்தில் நான் 15 கேள்விகளை எழுப்பினேன். அதில் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் தான் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பதில் கொடுத்தார்.

கர்நாடக பாஜக - காங்கிரஸ்

அந்த இரண்டு பதில்களில் இந்த நிலைப்பாடு என்ன என்பது குறித்து விவரங்கள் வெளிவந்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கொடுத்திருக்கக்கூடிய பதில் என்பது தமிழ்நாட்டிற்கான துரோகம். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை தற்போது ஆளுங்கட்சியாக இருக்கிறது. மீண்டும் அங்கு ஆட்சிக்கு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி எண்ணுகிறது ஆனால் அங்கு பிஜேபி வரவேண்டும் என்று அவர்கள் திட்டம் போடுகிறார்கள்.

மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் கட்சியும் பிஜேபியும் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரவிடாமல் சதி திட்டம் திட்டி வருகிறார்கள். அடிக்கல் நாட்டினால் போதும் வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் திட்டம் திட்டுகிறார்கள்.
இது சம்பந்தமாக தான் நான் அறிக்கை வெளியிட்டேன். உடனே இங்கே தமிழ்நாட்டில் புதிதாக வந்திருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்.. (மாணிக்கம் தாகூர் என பெயரை குறிப்பிடாமல்) சட்டை எல்லாம் மடித்து விட்டுக்கொண்டு ஆவேசமாக பேசுகிறார். நாங்கள் தூப்பக்கி சூட்டையே பார்த்து விட்டோம்.. தடியடியை பார்த்து விட்டோம்... ஜெயில் எல்லாத்தையும் கூட பார்த்து விட்டோம் நீங்கள் அப்போது பிறந்து கூட இருக்க மாட்டீர்கள்..

ராகுல் காந்தி

அமைதியாக போய்க்கொண்டிருக்கிறோம. ஆக்கபூர்வமான அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.
பாமக தனியாக நின்று எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெற முடியாது. வரும் ஒன்றாம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார் தமிழ்நாட்டுக்கு வரும் ராகுல் காந்தி தமிழ்நாட்டின் பக்கம் இருக்கும் நியாயத்தை பற்றி பேசுகிறாரா என்று பார்ப்போம்.

ஆந்திராவில் பாமக

ஆந்திராவில் உள்ள மக்கள் அங்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட வேண்டும் என்று அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதமாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரும் சனிக்கிழமை ஆந்திராவிலிருந்து முக்கியமான நபர்கள் வருகிறார்கள். ஆந்திராவில் உள்ள அத்தனை மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் வருகிறார்கள். பாமக-வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+