கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து.. திருவள்ளூரில் கம்பெனி இருக்க ஜெர்மனி எதுக்கு? அன்புமணி கேள்வி
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு மூலம் 26 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 7020 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூரில் இயங்கும் நிறுவனங்களிடம் முதலீடு திரட்ட ஜெர்மனி பயணம் தேவையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், இது கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கும் முயற்சி என விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஜெர்மனியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அங்கு 3 நிறுவனங்களுடன் ரூ.3201 கோடி முதலீடு திரட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டிருக்கிறது.
ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்கும் எந்த நிறுவனமும் புதிய நிறுவனம் அல்ல.. அவை அனைத்தும் ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வருபவை தான். முதலமைச்சரின் முதலீடு திரட்டும் பயணம் மோசடிப் பயணம் என்பது அவரது பயணத்தின் முதல் நாளிலேயே உறுதியாகிவிட்டது.

அன்புமணி ராமதாஸ்
ரூ.2000 கோடி முதலீடு செய்யப்போவதாக கூறப்படும் Knorr - Bremse என்ற நிறுவனத்தின் செயற்கை அறிவுத் திறன் மையம் சென்னை கிண்டிக்கு அருகில் செயல்பட்டு வருகிறது. ரூ.1000 கோடி முதலீடு செய்யவிருக்கும் Nordex குழுமத்தின் காற்றாலை தயாரிப்பு நிறுவனம் சென்னைக்கு அருகில் பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. மூன்றாவதாக ரூ.201 கோடி முதலீடு செய்யவுள்ள ebm - papst நிறுவனத்தின் உலக திறன் மையம் சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கடைசி இரு முதலீடுகளும் ஏற்கனவே செயல்பட்டு வரும் அமைப்புகளின் விரிவாக்கத்திற்காக செய்யப்படுபவை ஆகும்.
ஸ்டாலின் ஜெர்மனி பயணம்
முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள ரூ.3201 கோடி முதலீடுகளும் இயல்பாக வந்திருக்கக் கூடியவை தான். தமிழக அரசு நினைத்திருந்தால் அதிகாரிகள் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்க முடியும். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படை பரிவாரங்களுடன் ஜெர்மனி சென்றிருப்பதைப் பார்க்கும் போது, கொக்கை நேரடியாக பிடிப்பதற்கு பதிலாக அதன் தலையில் வெண்ணெயை வைத்து, அது உருகி கொக்கின் கண்களை மறைத்தவுடன் அதை பிடிப்பதற்கு ஒப்பான செயலாகும்.
வரிப்பணம் வீண்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் வீணாணவை; மக்களின் வரிப் பணத்தை அழிக்கக் கூடியவை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். ஜெர்மனி பயணத்தையும் சேர்த்து இதுவரை வெளி நாடுகளுக்கு சென்று கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி தான். இது ஒட்டு மொத்தமாக கையெழுத்து இடப்பட்டதாகக் கூறப்படும் ரூ.10.65 லட்சத்துடன் ஒப்பிடும் போது, வெறும் 2% மட்டும் தான்.
சென்னை ஒப்பந்தம்
தமிழ்நாட்டுக்கான மொத்த முதலீட்டு ஒப்பந்தங்களில் 98 விழுக்காட்டை சென்னையில் இருந்தபடியே செலவில்லாமல் சாத்தியமாக்க முடியும் எனும் போது, வெறும் 2% முதலீட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரது உடலை வருத்திக் கொண்டு வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications