ஆஹா சினிமாவில் களமிறங்கும் அன்புமணியின் மகள்! தருமபுரியை கலக்கிய சங்கமித்ராவின் மிரட்டல் படம்
சென்னை: அரசியலில் மட்டுமில்லை சினிமாவிலும் களமிறங்க போகிறார் பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா. வெள்ளித்திரையில் இவரை என்னவாக பார்க்கலாம் என்பதை பார்க்கலாம்.
செய்யும் தொழில் மட்டுமில்லை, அரசியலிலும் வாரிசுகள் வரிசை கட்டி வருவர். இதை வாரிசு அரசியல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும் அது குறித்து கவலைப்படாமல் வாரிசுகளை உள்ளே இழுத்துக் கொண்டே இருப்பார்கள்.

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியை களமிறங்கினார். அது போல் அவரும் தனது மனைவி சவுமியாவை தருமபுரி லோக்சபா தேர்தலில் களமிறங்கினார். ஆனால் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே திமுக வேட்பாளரிடம் அவர் தோல்வியை கண்டார்.
இந்த நிலையில் தருமபுரி லோக்சபா தேர்தல் காலகட்டத்தில் பிரச்சார பீரங்கியாக சவுமியாவுக்கு இருந்தவர்கள் அன்புமணி, கட்சியின் மூத்த முன்னோடிகள் என நீங்கள் நினைத்தால் அது தவறு! ஆம்! சவுமியா- அன்புமணி தம்பதியின் 3 மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர்தான்.
சம்யுக்தா தனது குழந்தைகளுடன் தருமபுரியில் தங்கியிருந்து சில நாட்கள் பிரச்சாரம் செய்தார். 2ஆவது மகள் சங்கமித்ரா, தனது கணவருடன் அந்த தொகுதியிலேயே தங்கி பிரச்சாரம் செய்தார். அது போல் 3ஆவது மகள் சஞ்சுத்ராவும் தொகுதியிலேயே தங்கியிருந்து தனது தாய்க்காக பிரச்சாரம் செய்தனர்.
அதிலும் சங்கமித்ராவின் பிரச்சாரம் அந்த தொகுதி மக்களை வெகுவாக ஈர்த்தது. ஒவ்வொரு கிராமங்களுக்கும் செல்லும் போதெல்லாம், அங்குள்ள மக்களை அண்ணா, அக்கா, மாமா, சித்தப்பா, தாத்தா, பாட்டி, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, அத்தை என உறவு முறைகளை கூறியே அவர் அழைத்திருந்தார். ஒவ்வொரு இடத்திலும் "எங்கள் அம்மாதான் எலெக்ஷன்ல நிக்கிறாங்க, உங்கள் ஓட்டு போட்டால் அவங்க டெல்லிக்கு போவாங்க, உங்களுக்கு வேண்டியதை செய்வாங்க. அதிலும் எங்களையெல்லாம் விட்டுவிட்டு இந்த தொகுதிக்கே குடியேறிடுவாங்க.
நாங்களும் எங்கள் அம்மாவை பார்க்க வரும் போது உங்கள் எல்லாரையும் பார்ப்போம் என பேசி மக்கள் மனங்களை கவர்ந்தனர். அரசியலுக்கு வரும் வாய்ப்பிருக்கிறதா என அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது கூட தற்போது அதை உறுதியாக சொல்ல முடியாது என்றார். இப்படி அரசியலில் தங்கள் பிரச்சாரத்தை மக்கள் முன் கொண்டு சேர்த்து அவர்களது மனங்களை வென்ற சங்கமித்ரா சினிமா துறையிலும் களமிறங்குகிறார்.
டிஜி பிலிம் நிறுவனம் மற்றும் மேக்னாஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து ஒரு புதிய ஆக்ஷன் படத்தை தயாரிக்கிறார்கள். அதற்கு அலங்கு என பெயரிடப்பட்டுள்ளது. தமிழக- கேரள எல்லை பகுதியை ஒட்டி நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்ஷன் டிராமாவாக உருவாகி இருக்கும் திரைப்படம்தான் அலங்கு.
கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் திரைப்படத்தின் மையம். அதன் பின்னணி என்ன என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்கள்.
இந்த படத்தில் சரத் அப்பானி, செம்பன் வினோத் , காளி வெங்கட், குணாநிதி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை டி.சபரீஷ், எஸ்.ஏ. சங்கமித்ரா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்த நாய் இனமும் நடிக்கிறது. இது ஒரு த்ரில்லர் திரைப்படமாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications