ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா?
சென்னை: அதிமுக-பாஜக-தவெக - இந்த புதுவிதமான கூட்டணி பேச்சு நேற்றிலிருந்து தீயாக பரவுவதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணிக்கு விஜய் செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்கின்றனர் தவெக நிர்வாகிகள். அதே நேரத்தில் விஜய் உடன் ஆந்திர துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் பேசியது உண்மை தான் என்கின்றனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக அதிமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த தகவல் வெளியானதிலிருந்து தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி குறித்து பரவி வரும் தகவல்களுக்கு மத்தியில், தவெக நிர்வாகிகள் சிலர் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளனர்.

தவெக பாஜக கூட்டணி
அவர்களின் கூற்றுப்படி, நடிகரும் மற்றும் தவெக தலைவருமான விஜய் பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது, தற்போது பரவி வரும் தகவல்கள் அரசியல் ஊகங்களாகவே இருக்கலாம் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். அதே நேரத்தில், விஜய் மற்றும் ஆந்திர மாநில துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் இடையே சமீபத்தில் உரையாடல் நடைபெற்றது உண்மை தான் என்றும் தவெக தரப்பு தெரிவித்துள்ளது.
பவன் கல்யாண் விஜய்
அந்த உரையாடலில் அரசியல் நிலைமை குறித்து ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த உரையாடலை கூட்டணி அமைப்பு தொடர்பானதாக பார்க்க வேண்டாம் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் பல அரசியல் கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அதிமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இந்த தேர்தல் அரசியல் ரீதியாக மிகப்பெரிய சவாலாக உள்ளது.
தவெக அரசியல்
ஏனெனில் இந்த தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த மூன்று கட்சிகளின் அரசியல் நிலைமையும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் அந்த கட்சிகளின் தலைவர்களிடம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே, இந்த முறை திமுக கூட்டணியை தோற்கடிக்க எந்த வகையிலும் அரசியல் வலிமையை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, அதிமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்தால் அது திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய சவாலாக மாறக்கூடும்.
அமித் ஷா
இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரப்பிலிருந்து தவெக தலைவர் விஜயை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக தொகுதி பங்கீடு மற்றும் தேர்தலுக்கு பிந்தைய ஆட்சியில் அதிகாரப் பகிர்வு போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை நடைபெற்ற ஆலோசனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications