ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவனம் இடமாறுகிறதா? ஆந்திராவின் ஸ்ரீசிட்டி அதிகாரிகள் பேச்சுவார்த்தை?
சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஒரு மாதத்தை கடந்து இரண்டாவது மாதம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் இடமாற்றம் தொடர்பான பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. பல்வேறு மாநிலங்கள் இடமாற்றம் செய்வது குறித்து சாம்சங்கை அணுகுவதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து 75 கிமீ தூரமுள்ள ஆந்திராவின் ஸ்ரீசிட்டிக்கு இடமாற்றம் செய்வது குறித்து சாம்சங்கை ஆந்திர அதிகாரிகள் அணுகியுள்ளனர்.
ஆந்திராவின் சிறப்புப் பொருளாதார மண்டலமான ஸ்ரீ சிட்டிக்கு சாம்சங் நிறுவனத்தை கொண்டு செல்ல, ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை ஒரு வாய்ப்பாக ஆந்திர அதிகாரிகள் பார்க்கிறார்களாம். சென்னையில் இருந்து வெறும் 75-கிமீ தொலைவில் உள் ஸ்ரீசிட்டியில் தான் சென்னைமெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. சென்னையில் அமைய வேண்டிய பல்வேறு தொழிற்சாலைகள் அங்கு தான் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திராவின் ஸ்ரீ சிட்டி தொழில் நுட்ப நகர அதிகாரிகள் சாம்சங் நிறுவனத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீ சிட்டியை சேர்ந்த அதிகாரிகள் கூறும் போது, ஆலையை இடமாற்றம் செய்வது குறித்து முறைசாரா சுற்று பேச்சுவார்த்தைக்காக சாம்சங் நிர்வாகிகளை அணுகியுள்ளோம் என்றார்கள். எனினும், சாம்சங் அதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
இந்த ஆண்டு மே மாதம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது முதலே ஸ்ரீசிட்டியில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள தொழில் நகரத்தில் 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
இதனிடையே ஸ்ரீ சிட்டி அதிகாரிகள் சம்சங்கை அணுகினார்களா இல்லை என்பது குறித்த கேள்விக்கு , சாம்சங் செய்தித் தொடர்பாளர் அதை மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.. அதேநேரம் மாநிலத்தைவிட்டு சாம்சங் வெளியேறுதவற்கு வாய்ப்பே இல்லை என்றே சொல்கிறார்கள். தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும் ஆலையை வேறு இடத்திற்கு மாறப்போவதாக வெளியான செய்தியை திட்டவட்டமாக மறுத்தார். சாம்சங் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையான சிஐடியு தொழிற்சங்கத்தை பதிவு செய்வது என்பது, நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே சாத்தியம் என்றும், அதில் அரசுக்கு எந்த கருத்தும் இல்லை என்றும், ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு வலியுறுத்தினார்.
ஸ்ரீ சிட்டியை பொறுத்தவரை சென்னையிலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து காரில் செல்ல சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கிருஷ்ணாப்பட்டினம் மற்றும் வரவிருக்கும் துர்காராஜுபட்டினம் உட்பட அதன் 100 கிமீ சுற்றளவில் உள்ள ஐந்து துறைமுகங்களை அடையும் வகையில ஸ்ரீசிட்டி தொழில் நகரம் அமைக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications