சென்னையின் அடையாளம் அண்ணா மேம்பாலம்.. கருணாநிதி செய்த முதல் சாதனையே இங்கு தான்.. கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் 1973ம் ஆண்டு ஜுலை 1ம் தேதி திறக்கப்பட்டது. சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம் இது தான். நாளையுடன் 50 ஆண்டுகளை சென்னை அண்ணா மேம்பாலம் பூர்த்தி செய்கிறது. இந்த மேம்பாலத்தில் தினமும் 3 லட்சம் வாகனங்கள் செல்கின்றன.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் ஆங்கிலேயர் காலத்தில் மிகவும் பிரதானமான சாலை என்றால், பாரிஸ் கார்னர் முதல் கிண்டி வரையிலான சாலை தான். அதாவது மவுண்ட் ரோடு எப்படி, கோவையில் உள்ள அவிநாசி சாலையைப் போல் முக்கியமானதாக இருந்தது. எல்லா வணிக நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களின் அலுவலங்களும் இந்த சாலையில் தான் இருந்தது.

Anna Flyover is the symbol of Chennai; Karunanidhis first achievement is here, Did you notice?

சுதந்திரம் அடைந்த பின்னர் சென்னையில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதால் அசுர வளர்ச்சி அடைய தொடங்கியது. மவுண்ட ரோட்டில் வாகன பெருக்கம் அதிகரித்தது. சென்னை மவுண்ட் ரோடு, அண்ணா மறைவுக்கு பின்னர் அண்ணா சாலை ஆனது.

சென்னையில் 1970களில் மக்கள் தொகை கிட்டத்தட்ட கால்கோடியை தொட்டது. அதாவது 25 லட்சம் என்கிற அளவில் உயர்ந்தது. சென்னையின் நகரப்பகுதிகளை இரண்டாக பிரிக்கும் வகையில் அண்ணா சாலை இருந்தது. அண்ணா சாலை வழியாகவே சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முடியும் என்பதால் போக்குவரத்து நெரிசலை 1970களிலயே சமாளிக்க முடியாத அளவிற்கு மாறியது. தினமும் 12 ஆயிரம் வாகனங்கள் அப்போது சென்றன.

இதையடுத்து அண்ணா சாலையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் அண்ணா சாலை- உத்தமர் காந்தி சாலை, கதீட்ரல் சாலை, ஜி.என். செட்டி சாலை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது.

1971-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியழ. சுமார்1,500 டன் எக்கு, 3,500 டன் சிமெண்ட் கொண்டு அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த அண்ணா மேம்பாலம் தான் சென்னையில் அமைக்கப்பட்ட முதல் மேம்பாலம் ஆகும். மும்பையில் உள்ள கெம்ஸ் கார்னர், மரைன் டிரைவ் ஆகிய இடங்களில் அமைந்த மேம்பாலங்களை தொடர்ந்து இந்தியாவில் கட்டப்பட்ட 3-வது மேம்பாலம் இதுவாகும். அந்த நேரத்தில் இந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாகவும் விளங்கியது. ரூ.66 லட்சம் ரூபாயில் இந்த மேம்பாலம் 21 மாதங்களில் கட்டி முடிக்கப் பட்டது.

இந்த மேம்பாலத்தை 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அதற்கு 'அண்ணா மேம்பாலம்' என்றும் பெயர் சூட்டினார். மேம்பாலத்தின் அடியில் அண்ணா புத்தகம் வாசிப்பது போன்ற சிலையும் அமைக்கப்பட்டது. பெரியார் மறைவுக்கு பிறகு 1974-ம் ஆண்டு அவரது பிறந்த நாளின் போது மேம்பால பகுதியில் சிலையை அன்றைய முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். வைத்த கோரிக்கையை ஏற்று அமைத்தார். அதன்பின்னர் சென்னையில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையில் குதிரையை அடக்கும் வீரனின் சிலைகள் மேம்பால பகுதியில் 2 பக்கங்களில் நிறுவப்பட்டன.

தற்போது அண்ணா மேம்பாலம் அண்ணா சிலை, பெரியார் சிலை, குதிரைகளைஅடக்கும் வீரன் சிலைகள் ஆகியவற்றுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு நாளை (சனிக்கிழமை) 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

சென்னையில் மோசமான பல சிக்னல்கள் எல்லாம் இன்று மேம்பாலம் ஆகிவிட்டது. சென்னையில் இன்று எத்தனை மேம்பாலங்கள் இருந்தாலும் அதற்கு ஆரம்ப புள்ளி அண்ணா மேம்பாலம் தான். இன்று அண்ணா மேம்பாலத்தில் 3 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. அண்ணா மேம்பாலம் தற்போது ரூ.8.85 கோடி செலவில் சீரமைத்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது.. இந்த சீரமைப்பு பணிகள் முடிந்தால் இன்னும் பல வருடங்கள் கம்பீரமாக அண்ணா மேம்பாலம் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+