அண்ணா நினைவு தினம் - திமுக அமைதி பேரணி - மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை
பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக தொண்டர்களும் வரிசையாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணி சென்னை வாலாஜா சாலையில் இருந்து புறப்பட்டது.

அமைதி பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு,எச்.ராஜா, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அண்ணா நினைவிடத்தில் அமைதி பேரணி நிறைவடைந்தது. மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அண்ணா நினைவிடத்தில் இன்று மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திமுக தொண்டர்களும் வரிசையாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அதிமுக சார்பாகவும் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications