Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8 பைக்குகளில் 8 பேர்.. 2 ரவுடிகளுக்கு ஸ்கெட்ச்.. அண்ணாசாலையை அதிரவைத்த குண்டுவீச்சு.. ஷாக் வீடியோ

குண்டுவெடித்தது தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 8 பேர் 8 பைக்குகளில் சுற்றி சுற்றி வந்துள்ளனர்.. கருப்பு கலர் காரில் வந்து கொண்டிருந்த பிரபல தாதா காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி ஆகியோரை கொல்வதற்காகவே, அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே வெடிகுண்டு வீச்சு

    சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரிட்ஜ் அருகே 2 இளைஞர்கள் நேற்று மாலை பைக்கில் வந்தனர்.. தேனாம்பேட்டை நோக்கி இவர்கள் வந்து கொண்டிருந்தனர்.. அதேபோல, எதிர்திசையில் சாலை தடுப்புக்கு அந்த பக்கமாக ஒரு கருப்பு நிற கார் வந்து கொண்டிருந்தது.

    அந்த காரின் மீது பைக்கில் உட்கார்ந்து கொண்டே 2 நாட்டு வெடிகுண்டுகளை 2 பேரும் வீசினர்.. அந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் தரையில் விழுந்து வெடித்தன.. இதனால் அந்த காருக்கு பக்கத்திலேயே இருந்த கார் ஷோரூம், மற்றும் அதன் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் சேதம் அடைந்தது.

    அண்ணாசாலை

    அண்ணாசாலை

    சாயங்காலம் 4 மணி என்பதால், அண்ணாசாலை பரபரப்பாகவே காணப்பட்டது.. இந்த குண்டு வெடித்ததும் மக்கள் தலைதெறித்து ஓடினர்.. வாகன ஓட்டிகள் உட்பட அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்... அவர்கள் யார் என்ன என்று தெரியவில்லை.. அதற்குள் பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்துவிட்டனர். ஆனால் நல்லவேளையாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை..

    காஸ்ட்லி பைக்

    காஸ்ட்லி பைக்

    தகவல் அறிந்து கமிஷனர் ஏகே விஸ்வநாதனே நேரில் வந்துவிட்டார்.. சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.. இதையடுத்து தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முடுக்கி விடப்பட்ட விசாரணையில் தகவல்கள் தெரிய வந்தன. முதலாவதாக சென்னை திநகர் ராஜா பிள்ளை தோட்டத்தை சேர்ந்த தேவதாஸ் என்பவரின் பைக்கில்தான் அவர்கள் வந்திருந்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மெக்கானி - டியோ பைக்

    மெக்கானி - டியோ பைக்

    இந்த பைக் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மெக்கானிக் ஒருவருடையதாம்.. டியோ பைக் என்பதால் அடையாளம் எளிதாக தெரிந்தது.. இது காஸ்ட்லி பைக்கும்கூட.. மெக்கானிக்கிடம் இருந்து பைக்கை வாங்கி வந்துள்ளனர்.. இந்த பைக்கை வைத்துதான், அதில் வந்தவர்கள் யார் என்ற அடுத்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. கல்லூரி மாணவர் மகேஷ், அவரது நண்பரும் வந்துள்ளனர்.. மகேஷ்தான் பைக்கை ஓட்டி உள்ளார்.. அந்த நண்பனுக்கு வயசு 17! இவர்கள் 2 பேரும் தப்பியதால், தொடர்பில் உள்ள கிட்டத்தட்ட 10 பேரை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    வடசென்னை

    வடசென்னை

    இதை தவிர, வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.. பின்னர் வட சென்னை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர்தான் அந்த காரில் சென்றிருக்கிறார் என்றும், அவரை குறி வைத்தே இவர்கள் வெடி குண்டுகளை வீசியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை அந்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜியாக இருக்கலாம் என்றும், என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில்தான், தற்போது அந்த தகவல் உறுதியாகி உள்ளது.

    காக்கா தோப்பு பாலாஜி

    காக்கா தோப்பு பாலாஜி

    காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சிடி மணி ஆகியோரை குறி வைத்துதான் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.. இவர்களை கொல்லும் நோக்கத்திற்காக வந்தாலும், அதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.. ஆனால் வந்தவர்கள் வெறும் 2 பேர் இல்லை, மொத்தம் 8 ரவுடிகள், 8 பைக்குகளில் வந்துள்ளனர் என்பது அங்கிருக்கும் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.. இந்த வீடியோ காட்சிகளை போலீசார் இப்போது வெளியிட்டுள்ளனர்.

    முன்விரோதம்

    முன்விரோதம்

    வெடிகுண்டை வீசிவிட்டு இவர்கள் 8 பேரும் பைக்குகளில் அதே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்துள்ளனர்.. எழும்பூரில் இருந்தே அவர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.. இவர்கள் பின்னாடி துரத்தி வருவதை பார்த்துதான், அந்த கார் எதிர்ப்புறமாக தப்பி செல்ல முயன்றுள்ளனர்.. இவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான், 2 குண்டுகளையும் அவர்கள் மீது வீசினர்.. காக்கா தோப்பு பாலாஜியை ஒழித்து கட்டிவிட்டால் தாங்கள்தான் அந்த ஏரியாவுக்கு தாதா என்பதை காட்டவே இந்த தாக்குதலுக்கு பிளான் போட்டிருக்கலாம் என்கிறார்கள்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    தற்போது மொத்த ரவுடிக் கும்பலையும் பிடிக்க போலீஸார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். யார் யார் என்ன மேட்டர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் சீக்கிரமே இவர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது. ஆனால் ஒன்று மட்டும் காவல்துறை செய்ய வேண்டும்.. சிக்கும் அனைவர் மீதும் மிக வலுவான முறையில் வழக்குகளைத் தொடர்ந்து ஜென்மத்துக்கும் வெளியே வர முடியாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. காரணம் இவர்கள் சென்னையை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் நேற்று பதட்டத்துக்குள்ளாக்கி விட்டனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+