ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை! பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு! பரபர தீர்ப்பு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவி பல்கலைக் கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை வழக்கில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
பின்னர் அந்த குற்றப்பத்திரிக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார்.

வழக்கில், 29 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, கடந்த மே 28 ம் தேதி, ஞானசேகரனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி ராஜலட்சுமி, ஜூன் 2 ம் தேதி தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்களை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று அறிவித்தார். இதற்காக புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட அவருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார்.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் ஒன்பது பிரிவுகளில், ஒரு மாதம் முதல் 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையும், தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அறிவித்த நீதிபதி, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் எந்த தண்டனையும் அறிவிக்கவில்லை. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், அதிகபட்ச தண்டனையான 30 ஆண்டுகளுக்கு தண்டனைக் குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனையை ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும்.
அதேபோல பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி ராஜலட்சுமி, உரிய விசாரணைக்கு பிறகு, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ், போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டு, அதற்காக இந்த தீர்ப்பு நகலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications