2.. ஓங்கியடித்த பாஜக.. அண்ணாமலையின் "பிள்ளையார் சுழி".. கமலாலயம் வாசலில் விழுந்த அஸ்திரம்.. அதிமுக?
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக பாஜக அடுத்தடுத்த வியூகங்களை கையில் எடுத்துள்ளது.. அந்த வகையில் 2 விதமான அப்டேட்கள் நமக்கு கிடைத்துள்ளன.
எந்த காரணம் கொண்டும் ஓபிஎஸ் + தினகரனை கட்சிக்குள் சேர்த்து கொள்ளக்கூடாது, தன்னுடைய தலைமையிலான அதிமுகவே மிகப்பெரிய பலமான கட்சி என்பதை மேலிட பாஜகவுக்கு நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே மாநாட்டை மதுரையில் நடத்தி காட்டினார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

புளிசோறு: ஆனால், புளி சோறு பிரச்சனையே இன்னும் தீராத சூழல், மாநாட்டு தினத்தன்று, மதுரை சுங்கக்கட்டணத்துக்கு 20 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுவிட்டதாக அடுத்த புகார் கிளம்பி உள்ளது.
எனினும், மதுரை மாநாடு மிகப்பெரிய வெற்றி என்பதை பாஜக உணர்ந்து கொண்டுள்ளது. அப்படியானால், எடப்பாடி பழனிசாமியின், கூட்டணி முடிவு எதுவாக இருந்தாலும், அதனை பாஜகவும் கிட்டத்தட்ட ஏற்கும் என்றே தெரிகிறது. அதேசமயம், சீட் ஒதுக்கீடு + தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் எந்த மாதிரியான அதிருப்திகள் வரப்போகிறதோ தெரியவில்லை.
சக்ஸஸ்: அதிமுக கூட்டணியிலேயே பாஜக இணைந்து போட்டியிட நேர்ந்தாலும், தன்னுடைய சொந்த பலத்தையும், வாக்கு சதவீதத்தையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக பாஜக உள்ளது. அந்தவகையில், 2 விதமான வியூகங்களை கையில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. முதலாவதாக, மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரையில் சில அதிரடிகளை செய்ய போகிறார்களாம்.
சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி என யாத்திரை முடிந்துள்ள நிலையில், மக்களுடன் நேரடி தொடர்பு அண்ணாமலைக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த யாத்திரை வெறுமனே முடிந்துவிடாமல், பாதயாத்திரை சென்ற இடங்களிலெல்லாம் கிராமங்களிலேயே பாஜகவினர் தங்கி, மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து, தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
சூப்பர் திட்டங்கள்: அதுமட்டுமல்ல, மத்திய அரசின் காப்பீட்டு திட்டமான, முத்ரா கடன், பிஎம் கேர் உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெறுவதற்கு, ஏற்பாடு செய்யுமாறு, மாவட்ட, மண்டல நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். யாத்திரை நடந்த இடங்களில், தெருமுனை கூட்டம், பூத் கமிட்டி கூட்டம் நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.. பாஜக முன்னெடுத்துள்ள இந்த ஐடியாவும், மக்களை வெகுவாக கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களாக பாஜகவினர் கிராமங்களில் தங்கி, இத்தகைய பணிகளை மேற்கொள்ளும்போது, பாஜகவின் கிராஃப் உயருமென்றும் நம்பப்படுகிறது.
பிள்ளையார் சுழி: அதேபோல, இன்னொரு ஐடியாவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, திமுக அரசு மீதான அதிருப்திகளையும், குற்றச்சாட்டுகளையும் பொதுமக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், இந்த யாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டுள்ளார். ஆனால், பாஜகவின் ஜனதாவின் அடித்தளமான இந்துத்துவா உணர்வு, குறைந்துவிடாதபடிதான் இயக்கத்தின் பயணம் இருக்க வேண்டும் என்று அமைப்பு ரீதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

ஆன்மீக உணர்வை வளர்ப்பதற்கு முக்கியத்துவத்தை தராமல், பலர் ஒதுங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த தொய்வை களைய வேண்டும் என்பதற்காகவே, விநாயகர் சதுர்த்தியை மையமாக வைத்து அடுத்த அதிரடியை பாஜக செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாம். அதன்படி, அனைத்து பூத்களிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை, வழிபாடு செய்து, இதன்மூலம் ஆன்மீகத்துக்கான முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் முன்னெடுக்க ஆலோசித்து வருகிறார்களாம்.
இப்போதைக்கு முதல்கட்ட பாதயாத்திரை முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2ம் கட்ட யாத்திரையில், இந்த அதிரடி மேற்கொள்ளப்படும் என்றும், உயர்மட்டக்குழு முடிவு செய்து, அதன்பிறகு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தியமா?: இந்த 2 ஐடியாக்களும் ஒர்க் அவுட் ஆனால், தாமரை நிஜமாகவே தமிழகத்தில் மலர்ந்துவிடும் என்று பெருத்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள் பாஜகவினர்.. எனினும், இந்த வியூகங்களையெல்லாம் முறியடிக்க திமுக கூட்டணி என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை..!!
காரணம், திமுக வலுவாக உள்ள இடங்களில், பாஜக அதிக கவனத்தை செலுத்தி வருகிறதாம்.. அந்தவகையில், 5 தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கு களப்பணியையும் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. 2ம் கட்ட பாதயாத்திரையின்போது, பிரத்யேகமாக இந்த தொகுதிகளில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தும் என்கிறார்கள்.. அதேபோல, பாஜகவின் இந்த அதிரடிகளை அதிமுகவும் கவனிக்காமல் இல்லை.. அந்தவகையில், கூட்டணி சமாச்சாரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications