அனைத்துக் கட்சி கூட்டம் ஒரு நாடக மேடை.. அதில் பாஜக நடிக்க தயாராக இல்லை- அண்ணாமலை அறிக்கை
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்ஜாதியினருக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க திமுக இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தது.
இந்த கூட்டத்தை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், தற்போது பாஜகவும் புறக்கணித்துள்ளது.
"அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையிலே, நாடக நடிகர்களாக பாஜக பங்கேற்க விரும்பவில்லை" என கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தீர்ப்பு
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்ஜாதியினருக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீடு செல்லும் என்று கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்(சிபிஎம், காங்கிரஸ் தவிர) எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக சொல்லப்பட்டது. எனவே இது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது.

புறக்கணிப்பு
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி அதிமுக இக்கூட்டத்தில் பங்கேற்காது என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதேபோல "அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையிலே, நாடக நடிகர்களாக பாஜக பங்கேற்க விரும்பவில்லை" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இதர பிற்படுத்தப்பட்டோர். பட்டியலினத்தோர், பழங்குடியினர் அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு (EWS) அரசியல் அமைப்பு சட்டத்தில் 103 வது திருத்தத்தின் மூலமாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கியது.

தள்ளுபடி
இதனை எதிர்த்து பல மாநில உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் திமுக உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு ஏற்று கொண்டு அனைத்து தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட பின் இந்த வாரம் 7 ஆம் தேதி தீர்ப்பை வெளியிட்டது. இதர பிற்படுத்தப்பட்டோர்,பட்டியலினத்தோர், பழங்குடியினர் அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 103வது திருத்தம் செல்லும்' என்று ஐவர் நீதிபதிகள் அமர்வில் மூன்று நீதிபதிகள் தெரிவித்ததால், இடஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கேரளா
வழக்கம் போல் திமுக தலைவர். திமுக கட்சி தொண்டர்கள் மற்றும் அவர்களது தோழமை கட்சியில் பெரும்பாலானோர் இந்த தீர்ப்புக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து கொண்டிருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி EWS இட ஒதுக்கீட்டை இரண்டு வருடங்களுக்கு முன்பே அமல்படுத்திவிட்டது, ஆனால் தமிழகத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். திமுகவிடம் நாவை அடகு வைத்து பிழைப்பை நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

அறிக்கை
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். 1. மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 1989ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தெள்ளத்தெளிவாக கூறியுள்ளது. 2. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு உச்ச வரம்பான 50 சதவீதத்தை கடந்த போதும் அதற்கு எதிராக பலர் குரல் எழுப்பினாலும், தமிழகத்தின் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் எவ்வாறு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பாரதிய ஜனதா கட்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சின்ஹோ கமிஷன்
3.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்த வகுப்புகள் இடம் பெறலாம் என்ற அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது என்று சட்டத்தை 127 வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக கொண்டு வந்தது மாநில உரிமைகளுக்கு தோள் கொடுத்து நின்றது பாரதிய கட்சியின் தலைமையிலான மத்திய அரசு. 4. 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட EWS சட்டத்தின் வரலாறு திமுக தலைவர் மறந்திருக்கலாம். 2010ஆம் ஆண்டு சின்ஹோ கமிஷன் தனது அறிக்கையை திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசிடம் சமர்ப்பித்தது.

வருமான வரம்பு
அதை அன்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்தவர்களுடனும் சட்ட வல்லுனர்களிடமும் ஆராய்ந்த பின்னர் இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு சட்ட மசோதாவும் தயாரானது. ஆனால் சட்ட மசோதாவை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் அரசு வழக்கம் போல் கிடப்பில் போட்டது. 5. முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்களை முன்னேறியவர்களை தீர்மானிக்க ஆண்டு வருமானம் 6 லட்ச ரூபாயாக இருந்தது. 2017 ஆம் ஆண்டு அந்த வருமான வரம்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இடஒதுக்கீட்டை தீர்மானிக்க ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் என்று வரம்பு உயர்த்தப்பட்டது.

நிபந்தனைகள்
6. அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு EWS சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. பொருளாதார சூழலை நிர்னயிக்க கீழ்க்கண்ட நிபந்தனைகளையும் மத்திய அரசு கொண்டு வந்தது. அதாவது, ஆண்டு வருமானம் ரூ 8 லட்சம் குறைவாக இருக்க வேண்டும். ஐந்து ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் இருக்க வேண்டும். 1,000 சதுர அடிக்கு கீழ் உள்ள வீட்டில் குடியிருக்க வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் 100 கெஜத்துக்கு மேல் நிலம் இருக்க கூடாது. மற்ற பகுதிகளில் 200 கெஜத்துக்கு மேல் நிலம் இருக்க கூடாது. தமிழகத்தில் EWS இட ஒதுக்கீட்டின் மூலமாக ரெட்டியார், நாயுடு பிள்ளை முதலியார், பிராமணர்கள், மலங்கரா கிறிஸ்தவர்கள், தாவூத் மற்றும் மீர் இஸ்லாமியர்கள் போன்ற 79 சமூகத்தினர் பயன்பெறுவார்கள். அனைத்து தரப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான்." என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?












Click it and Unblock the Notifications