இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவியா?.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்!
சென்னை: இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என இளையராஜா ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது தொடர்பாக சர்ச்சையானது ஓயாமல் வெடித்து வருகிறது.
இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க போகிறார்கள். அதற்காகத்தான் அவர் இவ்வாறு மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசினார் என்றெல்லாம் விமர்சனங்கள் இளையராஜாவை வட்டமடிக்க தொடங்கிவிட்டன.

மோடியை புகழ்ந்தது ஏன்?
"தான் எந்த பதவியையும் வாங்குவதற்காக மோடியை புகழவில்லை. தான் கட்சிக்காரர் இல்லை" என்றும் இளையராஜா தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் கொடுத்தார். இந்த நிலையில் இளையராஜாவுக்கு எம்பி பதவி குறித்து தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

12 ராஜ்யசபா எம்பிக்கள்
இதற்கு அவர் கூறுகையில் குடியரசு தலைவர் தேர்வு செய்யும் 12 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த 12 பேரில் இளையராஜாவும் இருந்தால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மேலும் இளையராஜா பாஜகவை சார்ந்தவர் அல்ல. எனவே அவரை பாஜகவின் சார்பில் ராஜ்யசபா எம்பி ஆக்குவார்கள் என சொல்ல முடியாது.

இளையராஜாவுக்கு எம்பி பதவியா?
ஆனால் இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுத்து ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிடக் கூடாது. அவருக்கு பாரத ரத்னா கொடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இதுகுறித்து தேவைப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதவும் தமிழக பாஜக தயாராக இருக்கிறது.

மோசமான விளைவுகள்
திருவாடுதுறை செல்லும் ஆளுநருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு காட்டுவது தவறு. அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநரை மிரட்டுகிறார்கள். தேவைக்கு ஏற்றாற் போல் சட்டத்திற்கு புறம்பாக எவ்வாறு செயல்பட முடியும் . ஆளுநரை தடுத்து நிறுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications