அண்ணாமலையின் பேச்சை கேட்டால் சிரிப்பு வருது.. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்!
சென்னை: அண்ணா அறிவாலயத்தின் செங்கல்லை எடுத்துவிட்டு போவேன் என்ற அண்ணாமலையின் பேச்சு சிரிப்பை அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஐஐடி போன்ற கல்லூரிகளில் 10 அரசுப் பள்ளி மாணவர்களே சேர்ந்த நிலையில், தற்போது 600 மாணவர்கள் சேர்கிறார்கள் என்றும் பதில் அளித்துள்ளார்.
திருவான்மியூரில் பாஜக சார்பாக நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், பாஜக தலைவராக தொடர்ந்து இருக்க முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும். பாஜகவை பொறுத்தவரை ஒருவரே தலைவர் பதவியில் தொடர்ந்து இருக்க முடியாது.

ஆனால் நான் இங்கு இருந்து செல்லும் போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழக மாணவர்களுக்கான கல்வி நிதி மற்ற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிவிட்டால் எங்களின் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசும், நாங்களும் பார்த்து கொள்வோம். கடந்த காலங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம், தேசிய சட்டக் கல்லூரி போன்ற பெரிய இன்ஸ்ட்டிட்யூட்களில் சேர்வது அதிசயமான நிகழ்வாக இருந்தது.
2021ஆம் ஆண்டு 10 பேர் மட்டும்தான் இதுபோன்ற கல்லூரிகளில் சேர்ந்தனர். தற்போது 600 பேர் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்த்திருக்கிறார்கள். அது பள்ளிக்கல்வித்துறையின் சாதனையாக பார்க்கிறோம். மத்திய அரசு நமக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில், கூடுதலாக சிறப்பாக செயல்பட முடியும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பட்ஜெட் குறித்து அமைச்சர்களின் கருத்தை அண்ணாமலை விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு, கிட்டத்தட்ட ரூ.6.23 லட்சம் கோடி நமது வரிப்பணம் சென்றிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி, மறைமுக வரி என்று கொடுத்துள்ளோம். இந்த ரூ.6.23 லட்சம் கோடியில் எவ்வளவு தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
இதன் காரணமாகதான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடக்கில் இருப்பது வடக்கில் இருக்கும் அரசா அல்லது வட்டிக்கடை நடத்தும் அரசா என்று கேள்வி எழுப்பினார். அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லை பெயர்த்து எடுத்துவிட்டுதான் போவேன் என்ற அண்ணாமலையின் பேச்சு சிரிப்பை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்










Click it and Unblock the Notifications