திமுக பிச்சையா.. 'அறிவாலய வாசலிலேயே இருக்கும் ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல'.. அண்ணாமலை ஆவேசம்
சென்னை: பட்டப் படிப்புகள் டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர்கள், மாணவரணி நிர்வாகிகள், கல்வியாளர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "" கம்யூனில் ஜி.ஓ. மூலம் தான் இங்கு நம்மில் பல பேர் டாக்டர்கள். பல பேர் இதை மறந்து விட்டார்கள். ஏதோ குலப்பெருமையால், கோத்திர பெருமையால் டாக்டர் ஆகிவிட்டது போல பேசுகிறார்கள். நான் வெளிப்படையாக பேசுகிறேன். நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதே கிடையாது. மனசுக்கு பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய தைரியம் உள்ளவன் நான்

இதை நாம் நினைக்க வேண்டும். நான் ஒரு வக்கீல் என்றால் இது என்ன குல பெருமையால் கோத்திர பெருமையால் வந்ததா? நான் படிக்கும்போது பிஏ படித்தாலே வீட்டில் போர்டு வைத்துக் கொள்வார்கள். இப்போது நாய்கூட பிஏ பட்டம் வாங்குகிறது. எங்கள் பட்டப் படிப்புகள் குலம், கோத்திர பெருமையால் வரவில்லை. பட்டப் படிப்புகள் டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. குலம் கோத்திர பெருமையால் டாக்டராகவில்லை. சாதிவாரி இட ஒதுக்கிட்டதால் எங்களின் பலர் மருத்துவர்கள் ஆகினர். எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்கு தான் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் வந்துள்ளது."என்று கூறினார்.
பட்டப் படிப்புகள், டாக்டர் பட்டங்கள் படிப்பது என்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று ஆர்எஸ் பாரதி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரத்தில் ஆர் எஸ் பாரதியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "எப்போதெல்லாம், திமுக ஆட்சிக்கு, பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலய வாசலிலேயே இருக்கும் திரு. ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல. கள்ளக்குறிச்சியில், திமுக ஆதரவோடு நடந்த கள்ளச்சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற, திரு. ஆர்.எஸ்.பாரதியைக் களமிறக்கியிருக்கிறார்கள். முன்பு ஒருமுறை, தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்றப் பதவிகள் கிடைத்தது திமுக போட்ட பிச்சை என்று பேசினார். இன்று, தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது திமுக போட்ட பிச்சை என்று பேசியுள்ளார். அதோடு, தமிழகத்தில் இன்று நாய் கூட B.A. பட்டம் வாங்குகிறது என்று, ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் திரு. ஆர்.எஸ்.பாரதி.
தமிழகத்தில், 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே அமைத்துள்ளது என்பதை மறந்த திரு.ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் மருத்துவர்களை உருவாக்கியதே திமுகதான் என்று போலிப் பெருமை பேசிக் கொள்கிறார். திமுக முதல் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளுக்கு வாதாட வேண்டுமானால், டெல்லி, மும்பையிலிருந்து பல மூத்த வழக்கறிஞர்களையும், தமிழக அரசு சார்பான வழக்குகளுக்கு, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுக்கும் கோபாலபுர குடும்பம், திரு.ஆர்.எஸ்.பாரதியை வாதாட அனுப்புவது, கதைக்கு உதவாத வழக்குகளுக்காகத்தான்.
தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும், தங்கள் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவச் செல்வங்களை அவமானப்படுத்தி, அவர்கள் வளர்ச்சிக்கு திமுகதான் காரணம் என்று கூறிக் கொள்ளும் திரு.ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களைத்தான், திமுக உண்மையில் உருவாக்கியிருக்கிறது.
தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், திரு.ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் அனைவரும் திமுகவினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள்." இவ்வாறு கூறியுள்ளார்.
-
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications