விருதுநகர் இளம்பெண் பலாத்காரம்: "திமுக பிரமுகர்தான் மூளை.. முதல்வர் என்ன செய்வார்.." அண்ணாமலை ஆவேசம்
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அந்த 22 வயது பெண், திமுக பிரமுகர் ஹரிஹரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது இவர்கள் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நெருக்கமாக இருந்த சமயங்களை வீடியோவாக எடுத்த ஹரிஹரன் அதை திமுகவில் உறுப்பினராக இருக்கும் ஜீனைத் அகமது என்பவரிடம் காண்பித்து உள்ளார்.

வீடியோ
இதையடுத்து அந்த வீடியோவை மேலும் 4 பள்ளி மாணவர்களிடமும் ஹரிஹரன் காட்டி இருக்கிறார். பின்னர் இந்த வீடியோவை வைத்து அந்த பெண்ணை 6 பேரும் மிரட்டி உள்ளனர். அந்த பெண்ணை வீடியோவை வைத்து 6 பேரும் மிரட்டியதோடு கடந்த 8 மாதமாக அவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி உள்ளனர். தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு அந்த பெண் உள்ளாகி இருக்கிறார்.

என்ன நடந்தது?
இதை அந்த பெண் மாடசாமி என்ற பக்கத்து வீட்டு நபரிடம் தெரிவிக்க, அவரும் அந்த வீடியோவை பெற்றுக்கொண்டு, அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை 7 பேரும் மாறி மாறி வன்புணர்வு செய்துள்ளனர். இந்த நிலையில்தான் அந்த பெண் விருதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஹரிஹரன் உட்பட 7 பேரும் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.

அண்ணாமலை விமர்சனம்
இந்த சம்பவத்தில் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். அதில், விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் - இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர்

அண்ணாமலை கேள்வி
இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது திமுக அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். முதல்வர் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். திமுக நிர்வாகிகள் இருவர் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பதுதான் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
