டி.ஆர்.பாலுவிடம் 3 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தேன்! திமுகவுக்கு பாடம் புகட்டப்படும் - அண்ணாமலை
சென்னை: திமுக எம்பி டிஆர் பாலுவை 3 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தேன். அவதூறு வழக்கில் மற்றொரு நாள் டி.ஆர்.பாலுவிடம் குறுக்கு விசாரணை தொடரும். இந்த வழக்கு மூலமாக நிச்சயமாக திமுகவிற்கு ஒரு பாடத்தைப் புகட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் டிஆர் பாலு என் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று நேரடியாக திமுக எம்பி டிஆர் பாலுவை 3 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு கிடைத்தது. நான் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மீது தொடர்ந்த அவதூறு வழக்கு, அவர் வராத காரணத்தால் மற்றொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்தபட்சமான வழக்கில் மட்டும்தான் அந்த வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் வழக்கை நேரடியாக எடுத்து வாதிடுவார்கள். எனக்கு திமுக செய்திருக்கக்கூடிய ஊழல், நாங்கள் வெளியிட்டிருக்கக் கூடிய டிஎம்கே பைல்ஸ் பார்ட் 1, பார்ட் 2, டிஆர் பாலுவின் மேல் நான் சுமத்தி இருக்கக்கூடிய குற்றம் அனைத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும் காரணத்தால் நமது மூத்த வழக்கறிஞர் கொடுத்த அபிடவிட்டை திரும்பப் பெற்று, ஒரு சாமானிய மனிதனாக நானே ஆஜராகி வாதிட்டேன்.
டிஆர் பாலுவுக்கு 2.15 மணிக்கு விமானம் இருந்ததால் 3 மணி நேரம் குறுக்கு விசாரணைக்குப் பிறகு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞரின் உதவியுடன் இந்த வழக்கில் நானே வாதாடுகின்றேன். இந்த வழக்கின் மூலமாக திமுகவிற்கு கண்டிப்பாக ஒரு பாடத்தைப் புகட்டுவோம். சாமானிய மனிதர்கள் நம் உரிமைக்காகப் பேசும்போது, நம்முடைய வழக்கை எடுத்து நாமே வாதாட முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக இருக்கும்.
எந்தவொரு மனிதரும் எப்படிப்பட்ட பொறுப்பில் இருந்தாலும் கூட எந்தவொரு சாமானிய மனிதனும் தன் மீதான குற்றச்சாட்டு மீது வாதாடலாம் என்பதைத் தான் இன்று செய்திருக்கிறோம். தொடர்ந்து செய்வோம். இந்த வழக்கு சம்பந்தமாக முழுமையாக சொல்ல முடியாது. முழுமையாக வழக்கு முடிந்த பிறகு உங்களுக்குப் பொது வெளியில் நான் கேட்டுள்ள எல்லா கேள்விகளும், சேது சமுத்திரம் திட்டம், சாராய ஆலை, குடும்பம் நடத்தக்கூடிய நிறுவனம், அவர் வந்த கார் என நிறைய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அடுத்து வரக்கூடிய குறுக்கு விசாரணையின் போது நிறைய கேள்விகள் கேட்கவுள்ளோம். அவதூறு வழக்கில் மற்றொரு நாள் டிஆர் பாலுவிடம் குறுக்கு விசாரணை தொடரும். எனது மனைவி பெயரில் சொத்து வாங்கியதாக நீதிமன்றத்தில் அவதூறு செய்தார் டிஆர் பாலு. பொது வாழ்வில் இல்லாத என் மீது டிஆர் பாலு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார். என் மீது சொத்துக் குவிப்பு புகார் சொன்ன டிஆர் பாலு மீது அவதூறு வழக்குத் தொடர்வேன்.
மு.க. அழகிரி மீது வழக்குத் தொடராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். நீதியின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. நீதி வெல்லும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.அவர்கள் கேட்டிருக்கும் புதிய தேதியில் மறுபடியும் குறுக்கு விசாரணை நடக்கும். அவருக்கு மார்ச் முழுவதும் பார்லிமென்ட் இருக்கும் காரணத்தினால் அவர்கள் நீதிபதியிடம் பார்லிமென்ட் முடிந்து தேதி கேட்டிருக்கிறார்கள். ஏப்ரல் 7ம் தேதி மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆர்எஸ் பாரதி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மார்ச் 10ம் தேதி வழக்கு விசாரணை நடக்கிறது.
டிஎம்கே பைலில் நான் குற்றச்சாட்டி இருப்பது குறித்து டிஆர்பாலு பதில் சொல்லாமல் அவர் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். என் மனைவி பெயரில் நான் சொத்து வாங்கி இருப்பதாக சொன்னார். நாங்கள் வாங்கி இருக்கும் அனைத்து சொத்துக்களும் வருமான வரி கட்டி வாங்கி இருக்கிறது குறித்து தெரியுமா என்று கேட்டேன் தெரியாது என்று சொன்னார். பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி சொத்து வாங்கி இருக்கிறோம், டாக்குமெண்டில் பார்த்தீர்களா என்று கேட்டேன், தெரியாது என்று சொன்னார்.
புதிய வழக்கு எதுவுமே தெரியாம நான் ஊழல் செய்து சொத்து வாங்கியதாக கூறினார். அதற்காக குறுக்கு விசாரணை நடக்கும் போது நீதிபதியிடம் பதிவு செய்துவிட்டு, நாளை அவர் மீது மீண்டும் ஒரு புதிய அவதூறு வழக்கை தொடுக்க இருக்கிறோம். இந்த வழக்கை பொறுத்தஅளவில், நாங்கள் விடப்போவது கிடையாது. அந்த அவதூர் வழக்கில் நானும், எனது மனைவியும், திருமணத்திற்கு பிறகு 15 வருடம் எவ்வளவு சம்பாதித்து இருக்கிறோம். எனது மனைவி மும்பை, சென்னையில் நிறுவனத்தில் பணிபுரிந்த போது வாங்கி இருக்கும் சம்பளம்.
சொத்து விபரங்கள் நாங்கள் கடன் வாங்கிய சொத்துக்கள் குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிட இருக்கிறோம். நான் வாங்கி இருக்கும் கடன் குறித்த விவரங்களையும் பொதுவெளியில் வெளியிடுவேன். இதையெல்லாம் எனக்கு டிஆர்பாலுவிடம் தொடுக்க உள்ள புதிய அவதூறு வழக்கு வாயிலாக பத்திரிகையாளர் மூலம் தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள இருக்கிறோம் என்றார்.
-
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications