அதிமுக கூட இப்படி பண்ணது இல்லை.. அண்ணாமலை "ஹனி டிராப்".. உடைத்து நொறுக்கிய கனிமொழி.. ஒரே போடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு எதிரான புகார்கள், வீடியோ ஆடியோ புகார்கள், ஹனி டிராப் சர்ச்சைகள் உச்சம் தொட்டுள்ளன. பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு பாஜகவில் இருந்து வெளியேறி இருக்கிறார் காயத்ரி ரகுராம். அண்ணாமலையின் ஒரே குறிக்கோள் உண்மையான தொண்டர்களை வெளியே அனுப்புவதுதான். பாஜகவிற்கு வாழ்த்துக்கள். நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.

பெண்களே பாதுகாப்பாக இருங்கள். மற்றவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். யாரும் உங்களுக்காக வர மாட்டாரக்ள். நீங்கள் தனித்து இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது, என்று கூறிவிட்டு காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். முக்கியமாக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஹனி டிராப் கலாச்சாரம் உச்சம் எடுத்துள்ளது என்று காயத்ரி ரகுராம் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் செயல்பாடு குறித்தும், ஹனி டிராப் புகார்கள் குறித்தும் திமுக எம்பி கனிமொழி பேட்டி அளித்துள்ளார். ஒன்இந்தியா அரசியலுக்கு அவர் அளித்துள்ள ஸ்பெஷல் பேட்டி பின்வருமாறு..

 கனிமொழி பேட்டி

கனிமொழி பேட்டி

தமிழ்நாட்டில் பாஜக எதிர்க்கட்சி போல இருக்கிறது என்று அக்கட்சியினர் கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பாஜக நேரடியாக ஹிந்தியை திணிக்க பார்க்கிறது. ஜனாதிபதியிடம் அவர்கள் கொடுத்துள்ள ரிப்போர்ட்டில் கூட ஹிந்தியை திணிக்கும்படி கூறியுள்ளனர். பேசும் போதெல்லாம் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஹிந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இரண்டிற்கும் அவர்கள் செலவு செய்யும் தொகையை வைத்தே அவர்களின் பாரபட்சத்தை புரிந்துகொள்ள முடியும்.

 மக்கள் பாஜக

மக்கள் பாஜக

மக்களும் இதை புரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டில் பாஜக எதிர்க்கட்சி போல இருக்கிறது. பாஜகவிற்குத்தான் முக்கியத்துவம் இருக்கிறது என்றெல்லாம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் எதற்காக ஒரு ஒருவரிடம் மைக்கை நீட்டுவீர்கள்? அவர் ஏதாவது சர்ச்சையாக பேசுவார். அவர் ஏதாவது சொல்லுவார். அரசியல் தலைவர்களை திட்டவில்லை என்றால் உங்களையாவது மோசமாக திட்ட வேண்டும். செய்தியாளர்கள் யாரிடம் காசு வாங்குகிறார்கள் என்று கேட்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் எல்லாம் டிரெண்ட் ஆவார்கள். செய்தியாளர்களும்.. பரவாயில்லை.. நம்மை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை.. பிரேக்கிங் செய்திக்காக அவரிடம் போய் செய்தியாளர்களும் நிற்கிறார்கள்.

பிரேக்கிங்

பிரேக்கிங்

பிரேக்கிங் செய்திகளுக்காக இதை எல்லாம் செய்தியாளர்களும் தாங்கிக்கொள்கிறார்கள். திமுகவினர் இப்படி எல்லாம் பேச மாட்டார்கள். எதிர்க்கட்சியாக இருந்த போதும் கூட திமுகவினர் இப்படி பேசியது இல்லை. அதிமுகவினரும் கூட இப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள். ஊடகத்தினர் போய் பேட்டி எடுக்கிறார்கள் என்பதற்காகவே நாங்கள் வளர்ந்துவிட்டோம் என்று நினைப்பது எல்லாம் மாயை. தேர்தல் களம் என்பது வேறு. தேர்தல் களம் அவர்களுக்கு நிதர்சனத்தை சொல்லித்தரும். உண்மையான நிலவரம் என்ன என்பது அவர்களுக்கு தெரியும்.

ஆளுநர்

ஆளுநர்


ஆளுநரின் சமீபத்திய பேச்சுக்கள்.. தமிழ்நாடு என்ற வார்த்தையை பயன்படுத்துவதை அவர் எதார்த்தத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

ஆளுநர் அரசியல்வாதி போல பேசிக்கொண்டு இருக்கிறார். தனது தனிப்பட்ட அரசியல் கொள்கைகளை பேசிக்கொண்டு இருக்கிறார். பாஜகவின் கொள்கைகளை, கருத்தை ஆளுநர் பேச கூடாது. ஆளுநரை பாஜக தங்களின் ஆயுதம் போல பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் கருத்துக்களை விமர்சனம் செய்யவோ, அரசியல் கருத்து பேசவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. தமிழர்கள், திராவிடர்கள் தங்கள் அடையாளத்தை துறக்க வேண்டும், எல்லோரும் ஒன்றாக ஒரு அடையாளத்தின் கீழ் இருக்க வேண்டும் என்று ஆளுநர் சொல்வது தவறு. பிரிட்டிஷ் மக்கள் இதைத்தான் செய்தனர்.

அடையாளம்

அடையாளம்

அமெரிக்காவில் பூர்வகுடிகள் இப்படித்தான் அழிக்கப்பட்டனர். பூர்வகுடி மக்களை அழிக்க கூடாது. அமெரிக்காவில் நடந்தது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்தது இப்போதும் நடக்க கூடாது. இந்து மதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டிலேயே மாவட்டத்திற்கு மாவட்டம் பூஜை முறைகள், வழிபாட்டு முறைகள், விரத முறைகள் மாறுபடுகின்றன. இவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளில் ஒற்றுமையுடன் இருக்கிறோம். ஆனால் இதை எல்லாம் நான் ஒன்றுபோல ஆகிவிடுவேன். இவர்களின் அடையாளங்களை அழித்து எல்லோரையும் ஒரே அடையாளத்திற்கு கீழ் கொண்டு வருவேன் என்பது தவறு. காலனியாதிக்கத்தின் கீழ் இப்படித்தான் செய்து கொண்டு இருந்தனர்.

வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்

நான் சொல்வதுதான் சரி.. என் வாழ்க்கை முறை, வழிபாட்டு முறைகள்தான் சரி என்று சொல்வதற்கு இவர்கள் யார்? அப்போது என்னுடைய அடையாளம் என்ன ஆவது? வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார்கள்.. எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. சின்ன சின்ன குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை பொதுவிற்கு இழுத்து விமர்சனம் செய்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் அரசியலில் இருக்க அருகதை இல்லை. வீட்டில் உள்ள சிறியவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சிலர் இழுத்து பேசுவது.. அவர்கள் யார்.. அவர்களின் குணம் என்ன என்பதைதான் காட்டுகிறது.

ஹனி டிராப்

ஹனி டிராப்

பாஜகவில் வைக்கப்படும் ஹனி டிராப் புகார்களை எப்படி பார்க்கிறீர்கள்? அண்ணாமலை ஹனி டிராப் செய்வதாக புகார்கள் வைக்கப்படுகிறதே?

பாஜகவில் நிறைய ஹனி டிராப் புகார்கள் வைக்கப்படுகின்றன. ஹனிடிராப் என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பாஜகவில் புகார் வைக்கப்படும் ஆண்கள் என்று இல்லை. ஹனி டிராப்பில் சிக்கும் ஆண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சுயநினைவோடுதான் அந்த முடிவை எடுக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் தெரியாமல் மாட்டிக்கொள்ள குழந்தைகள் கிடையாது.அந்த செயலை செய்ய அவர்கள்தான் முடிவு எடுக்கிறார்கள். இதில் பெண்கள் மீது குறை சொல்ல முடியாது. பெண்கள் எதோ போய் சிக்க வைப்பதாக நினைக்க கூடாது. பெண்களை தொடர்ந்து விமர்சனம் செய்வது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்குவது. பெண்களை இழிவுபடுத்துவது இதை எல்லாம் நிறுத்த வேண்டும். ஆனால் பெண்கள் இதை எல்லாம் பார்த்து வீட்டில் உட்கார வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை எல்லாம் எதிர்த்துதான் பெண்கள் சாதிக்க வேண்டும்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

கனிமொழி என்று பெண் மீது ஜெயலலிதா என்று இன்னொரு பெண்ணே மலிவான விமர்சனங்களை வைத்தாரே? பெண்களே அரசியலில் பெண்களை மலினப்படுத்துகிறார்களே?

நான் தொடர்ந்து என் மகளிரணி சகோதரிகளுக்கு சொல்லும் விஷயம் இதுதான்.. எந்த பெண்களையும் தனிப்பட்ட வகையில் விமர்சனம் செய்யாதீர்க்ள. அது தவறு. அப்படி செய்வது அது நம்மை நாமே கொச்சைப்படுத்திக்கொள்ளும் நிகழ்வு. பெண்களை பெண் அரசியல் தலைவர்களே கொச்சைப்படுத்த கூடாது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நாம் அதை சொல்லிவிட கூடாது என்பதுதான் நாம் திரும்ப திரும்ப சொல்லும் விஷயம். பெண் என்றால் அவளின் அழகு, பத்தினித்தன்மை, கன்னித்தன்மை இதுதான் என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அழுத்தங்களை எல்லாம் உடைத்துக்கொண்டுதான் வர வேண்டும்.

அப்பா அண்ணன்

அப்பா அண்ணன்


அப்பாவின் இடத்தை அண்ணன் எந்த அளவிற்கு நிரப்பி உள்ளார்?

வீட்டில் எந்த விஷயமாக இருந்தாலும் அண்ணனிடம் ஆலோசனை பெறுவோம். முக்கிய விஷயங்களில் அண்ணனின் ஆலோசனையை பெறுவோம். அரசியலிலும் எந்த தொகுதியை தேர்வு செய்வது என்று கூட அண்ணனாகத்தான் அவரிடம் கேட்டேன். அதே சமயம் அரசியல் ரீதியாக ஒரு தலைவராக அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கிறேன். தலைவராக அவர் என்னை வழிநடத்தி வருகிறார். தனிப்பட்ட வகையில் முதல்வர் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றபடி சிறப்பாக செயல்படுகிறார். இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஆட்சியை, தேவையான முறையில் அவர் வழங்கி வருகிறார், என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+