மில்கி மிஸ்ட் ஓனர் வீட்டு திருமணத்தில் அண்ணாமலை! மணமக்களுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
சென்னை: பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் வீட்டு திருமணத்தில் பங்கேற்ற தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை புதுமணத் தம்பதிகளுக்கு மங்களகரமான மஞ்சளை பரிசாக கொடுத்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் பால், பால் பொருட்கள் தயாரிக்கப்படும் தொழிலுக்கு நிறைய வரவேற்பு உள்ளது. அந்த வகையில் மிக முக்கியமான நிறுவனம் மில்கி மிஸ்ட். இந்த நிறுவனம் பால், மோர், தயிர், பன்னீர், சீஸ், யோகர்ட் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கிறது.
இந்த நிறுவனம் ஈரோட்டில் பெருந்துறையில் தொடங்கப்பட்ட மில்கி மிஸ்ட் நிறுவனம் உலகின் பல நாடுகளில் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டதட்ட 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் தலைவர் சதீஷ்குமாரின் மகன் சஞ்சய்- மித்ரா தம்பதியின் திருமணம் நேற்று நடந்தது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்றிருந்தார். அங்கு அவர் அளித்த பரிசு என்ன தெரியுமா, மங்களகரமான மஞ்சளை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் சேர்மனும், மேலாண்மை இயக்குநருமான திரு. சதீஷ்குமார் அவர்களின் மகன் செல்வன் T.S.சஞ்சய் - செல்வி S.மித்ரா ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்லுறவுகள் சூழ இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மணமக்கள் இருவரும் இறைவனின் அருளோடு எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை புதுமணத் தம்பதிக்கு மஞ்சள் கொடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலந்து கொண்ட திருமணங்களிலும் ரசாயனம் கலக்கப்படாத மஞ்சளை பரிசாக கொடுத்திருந்தார். தரமான மஞ்சளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி அதை பொடியாக்கி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மங்களகரத்தை உணர்த்தும் வகையில் கொடுத்து வருகிறார். என்னதான் விலையுயர்ந்த பரிசுகள் இருந்தாலும் ஒரு சுப விசேஷத்தில் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களை பரிசாக கொடுக்கும் போது அந்த இடத்தில் நல்லதொரு தெய்வீக ஆற்றல் ஏற்படும். விசேஷம் நடத்தும் வீட்டார் மத்தியிலும் ஒரு விதமான மகிழ்ச்சி பொங்கும்.
அண்ணாமலை மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக சிலர் சொல்லி வரும் நிலையில் அவருக்கான முக்கியத்துவம் கொஞ்சம் கூட குறையவில்லை என்கிறார்கள். மேலும் அண்ணாமலையும் வெகு விரைவில் பால் பண்ணை வைக்கப் போவதாக கூறியுள்ளார். அவர் வீட்டில் இன்னமும் விவசாயம் செய்து வருவதாகவும் தன் வீட்டில் ஆடு, மாடு உள்ளதாகவும் பல தருணங்களில் தெரிவித்திருந்தார். பால் பண்ணையை தொடங்குவதற்காக அவர் இடம் கூட வாங்கிவிட்டார். விரைவில் அங்கு பால் பண்ணையை தொடங்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications