1 மணி நேரம்! விடாமல் பேசிய அண்ணாமலை - அமித் ஷா - குருமூர்த்தி! நயினாரை எதிர்த்த ஆர்எஸ்எஸ்.. சீக்ரெட்
சென்னை: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திடன் ஒரு மணி நேரமாக அமித் ஷா ஆலோசனை செய்து வருகிறார். இதன் மூலம் தமிழக பாஜகவில் ஆர்எஸ்எஸ் கை மீண்டும் ஓங்கி உள்ளது என்கிறார்கள். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரனை கொண்டு வருவதில் ஆர்எஸ்எஸ் தயக்கம் காட்டி வருகிறதாம். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அமித் ஷா இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜகவில், தமிழக அரசியலில் கொரோனா சமயம் வரை ஆர்எஸ்எஸ் கை ஓங்கி இருந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்தார். இதற்கு பின் ஆர்எஸ்எஸ் இருப்பதாக கூறப்பட்டது. அதோடு முக்கியமாக குருமூர்த்தி கை ஓங்கி இருப்பதாக கூறப்பட்டது. அதாவது ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர குருமூர்த்தி காய் நகர்த்தி வருவதாக கூறப்பட்டது.
தமிழக அரசியலில் இதன் மூலம் குருமூர்த்தி மீண்டும் கவனம் பெற தொடங்கி உள்ளார். இன்று நடக்கும் கூட்டத்தில் அமித் ஷா - குருமூர்த்தி தனியாக பேசுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இன்று மாலையே இவர்கள் ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீட்டிங் நேரம் மாலைக்கு பதில் பிற்பகலுக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதோடு இல்லாமல் இந்த கூட்டத்தில் அண்ணாமலை, எல் முருகன் ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். எல் முருகன் - அண்ணாமலை - அமித் ஷா - குருமூர்த்தி ஆகிய நான்கு பேரும் இன்று ஆலோசனை செய்து வருகின்றனர்.
1 மணி நேரமாக இவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 1 மணி நேரமாக இவர்கள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். ஒருங்கிணைந்த அதிமுக தொடர்பாக அமித் ஷா - குருமூர்த்தி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரனை கொண்டு வருவதில் ஆர்எஸ்எஸ் தயக்கம் காட்டி வருகிறதாம். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அமித் ஷா இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலை உள்ளிட்டோர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக பேசும் நிலையில் அமித் ஷா நயினார் நாகேந்திரன் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக அலுவலகம் வந்த நயினார் நாகேந்திரன் அலுவலகம் வாசலை தொட்டு வணங்கினார்.
இன்று அதிமுக கூட்டணி பற்றியும் அறிவிப்பு வரும் என்கிறார்கள். ஆனால் அமித் ஷாவை சந்திக்க கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் வராததால் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் பேனர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ITC நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் இன்று தேஜகூ அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
அமித் ஷா பயணம்
இரண்டு நாள் பயணமாக மத்திய அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான அமித் ஷா நேற்றிரவு சென்னை வந்தார். இன்று அவர் பல சந்திப்புகளை ஆலோசனைகளை, கூட்டங்களை நடத்த உள்ளார். முக்கியமாக பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது. 2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.. பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார். அதோடு தலைவர் போட்டியில் நான் இல்லை என்றும் அண்ணாமலை நேற்று அறிவித்துவிட்டார். இதனால் இன்று அமித் ஷா தலைமையில் பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது.
அதிமுக கூட்டணி மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கும் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை இன்று(ஏப். 11) சந்திக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமித் ஷாவை சந்திப்பது உறுதியாகியுள்ளது.
-
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!












Click it and Unblock the Notifications