அண்ணாமலை காமெடி பண்றார்.. அவருக்கு ரிப்ளே பண்ண வேண்டாமென தலைவரே சொல்லிட்டாரு!.. ஆர்எஸ் பாரதி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை காமெடி செய்கிறார், அவரை நாங்கள் பொருட்டாகவே கருதவில்லை என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மீது பல்வேறு புகார்களை வைத்து வருகிறார். பல்வேறு அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளனர், அதை வெளியிடுவோம் என்றும் கூட அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்சார கட்டண விலை உயர்வு குறித்தும் அண்ணாமலை சமீபத்தில் விமர்சனம் செய்து இருந்தார். அதோடு போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநர் ஆர். ரவியையும் சந்தித்து அண்ணாமலை புகார் கொடுத்தார்.

ஆர். எஸ் பாரதி

ஆர். எஸ் பாரதி

இந்த நிலையில்தான் அண்ணாமலையை நாங்கள் பொருட்டாகவே கருதவில்லை என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். ஒன்இந்தியா தமிழுக்கு ஆர்.எஸ் பாரதி அளித்த சிறப்பு பேட்டி பின்வருமாறு,


கேள்வி: திமுகவிற்கு மாற்றாக தமிழ்நாட்டில் பாஜக உருவாகிக்கொண்டு இருக்கிறதா?

பதில்: ரொம்ப வேடிக்கையான கேள்வி, ஏனென்றால் நாங்கள் தமிழ்நாட்டில் அண்ணாமலையை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. அவர் பேசுற பேச்செல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. காளிகாம்பாள் கோவிலுக்கு மாவீரன் சிவாஜி 1967ல் வந்துட்டு போனார் என்கிறார். காமராஜ் 1969ல் சத்துணவு திட்டம் போட்டார் என்கிறார். திமுக ஆட்சி 1967லேயே வந்துவிட்டார்.

வாய் தவறவில்லை

வாய் தவறவில்லை

கேள்வி : டங்க் ஸ்லிப் ஆவதை பெரிதாக நினைக்கிறீர்களா?

பதில்: மறைந்த ஆற்காடு வீராசாமி என்று உயிரோடு இருப்பவரை பற்றி சொல்கிறார். இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசுவதே அவரின் வேலை ஆகிவிட்டது. அவரை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவரை பார்த்து சிரிப்புதான் வருகிறது. இன்று அவர் என்ன காமெடி செய்துள்ளார் என்று கேட்கும் அளவிற்கு அவர் பேசுகிறார். அவர் பேசுவது டங்க் ஸ்லிப் கிடையாது. ராமசாமி என்பதற்கு பதிலாக குப்புசாமி என்றால் அது டங்க் ஸ்லிப். ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்தார் என்பது டங்க் ஸ்லிப்பா?

ஊழல் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டு

கேள்வி: அண்ணாமலை ஆளும் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறாரே?

பதில்: இவர் என்ன எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட புத்திசாலியா? எங்கள் மீது 2ஜி குற்றச்சாட்டு வைத்தார்கள்.. என்ன கழற்றினார்கள்? 1 லட்சம் கோடி என்று சொன்னார்கள். என்ன ஆச்சு. அவரை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. அண்ணாமலைக்கு ரிப்ளே செய்ய வேண்டாம் என்று தலைவரே சொல்லிட்டாரு. அவர் பேசும்படி பேசிவிட்டு போகட்டும்.

பொதுக்குழு

பொதுக்குழு

கேள்வி: நீங்கள் அதிமுக பொதுக்குழு பற்றி பேசினீர்கள்.. அவர்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு interest ?

நாங்களும் அரசியல் கட்சி நடத்துகிறோம். அவர்களின் பொதுக்குழு மற்ற கட்சிகளுக்கு தவறான உதாரணம் ஆகிவிட கூடாது. அவர்கள் பொதுக்குழு நடத்திய விதத்தை பார்த்தீர்களா? இதுபோன்று நடக்கும் விஷயங்கள் ஆரோக்கியமானது அல்ல.

ஓபிஎஸ் - திமுக கூட்டு?

கேள்வி: ஓபிஎஸ் தரப்பிற்கு திமுக சாதகமாக இருப்பதாக எடப்பாடி சொல்கிறாரே?

பதில்: அவர் சொல்லுவார். நாங்கள் அப்படி செய்து இருந்தால் 2017ல் எடப்பாடியே உருவாகி இருக்க மாட்டாரே. யாருடைய தயவும் எங்களுக்கு தேவை இல்லை. வந்தால் திமுகவில் வந்து சேருங்கள். இவர்கள் இருவருக்கும் கையை கோர்த்துவிட்டது யார்? நரேந்திர மோடி தானே? நாங்களா செய்தோம்? இவர்களுக்கு பிக்பாஸ் அவர்தான். அவர் சொல்வதைத்தான் இவர்கள் கேட்பார்கள், என்று ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியின் முழு வீடியோவை மேலே காணவும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+