என்.டி.ஏ கூட்டணியில் விஜய்? "கேப்டனும் கோச்சும் முடிவு பண்ணுவாங்க".. அண்ணாமலை பரபரப்பு கருத்து!
சென்னை: "விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது குறித்து NDA அணியின் கோச் மற்றும் கேப்டன் முடிவு செய்வார்கள். நான் வெறும் பார்வையாளன். இந்திய கிரிக்கெட் அணி போல என்.டி.ஏ கூட்டணி வலிமையாக உள்ளது. அதே நேரம் வலிமையாக உள்ளவர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து" என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வர நீங்கள் முயற்சி மேற்கொண்டதாகவும், டிடிவி தினகரன் அமித் ஷாவை சந்தித்ததாகவும் தகவல் வருகிறதே எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "2026 சட்டசபை தேர்தல் 4 முனை போட்டியை சந்திக்க உள்ள தேர்தல். சீமானை யாரும் லேசாக எடை போட வேண்டாம். கொள்கைக்காக நிற்கிறார். அவரது கொள்கை எனக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ அது இரண்டாம் பட்சம். ஆனால், தேர்தலுக்கு தேர்தல் நிற்கிறார். அதுவும் வலிமையான அரசியல் கட்சி. விஜய் வலிமையாக களத்திற்கு வந்துள்ளார்.
என்.டி.ஏ கூட்டணியை பொறுத்தவரை வலிமையும் உண்டு, அனுபவமும் உண்டு. திமுக, பிராந்தியக் கட்சிகளில் மிகப் பழமையான முக்கியமான கட்சி, வலிமையான கட்சி. எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான 4 முனை போட்டி நிலவுகிறது. எனவே ஒவ்வொரு ஓட்டும் முக்கியம், ஒவ்வொரு கட்சியும் முக்கியம். கூட்டணி வலிமையாக இருக்க வலிமையான கட்சிகளை இணைக்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணி வலிமையாக உள்ளது. நல்ல பிளேயர் இருந்தால் வரட்டும், கோலி மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்க முடியாது. நல்ல பிளேயர்கள் கிடைக்கும்போது டீமை வலிமையாக்க அவர்களை சேர்த்துக் கொள்ளலாம். எவ்வளவுக்கு எவ்வளவு வலிமையாக இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது குறித்து NDA அணியின் கோச் மற்றும் கேப்டன் முடிவு செய்வார்கள். நான் வெறும் பார்வையாளன். யார் சேரவேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பார்கள். இந்திய கிரிக்கெட் அணி போல என்.டி.ஏ கூட்டணி வலிமையாக உள்ளது. அதே நேரம் வலிமையாக உள்ளவர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணாமலை பேசுகையில், "பராசக்தி அனைவரும் பார்க்க வேண்டிய படம். காங்கிரஸ் கட்சியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய படம். காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி படம் காட்டியுள்ளது. பராசக்தி மூலம் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆப்பு வைத்துள்ளது. காங்கிரஸின் துரோகத்தை புரிந்துகொண்டு அவர்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது. ஜனநாயகன் திரைப்படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருந்தேன்.
பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன். அதனால் கருத்து சொல்கிறேன். ஜனநாயகன் திரைப்படத்தையும் பார்த்துவிட்டு என்னுடைய கருத்தை நிச்சயம் சொல்வேன். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நிறைய குறைகளும் கொஞ்சம் நிறைகளும் கொண்ட ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
-
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன் -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு?











Click it and Unblock the Notifications