என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு?
சென்னை: தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் முன்னாள் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தற்போது எடுத்துள்ள புதிய அரசியல் நிலைப்பாடு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, மத்திய கல்வி அமைச்சகத்தின் "மூன்று மொழிக் கொள்கை" தொடர்பான புதிய அறிவிப்புக்கு அவர் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக அவர் மோடி அரசை வெளிப்படையாக எதிர்த்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மூன்று மொழிகள் கட்டாயம் என்ற திட்டத்தை இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்தும் முடிவை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கனவே 6-ஆம் வகுப்பில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய மொழியை தேர்வு செய்துள்ளனர். தற்போது திடீரென புதிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது குழந்தைகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை
மேலும், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்த நடைமுறை 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமலுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது திடீரென 2026-27 கல்வியாண்டிலேயே அமல்படுத்த முயற்சிப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை
அண்ணாமலையின் இந்த கருத்து சாதாரண அரசியல் விமர்சனமாக மட்டும் பார்க்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க. தேசிய தலைமையுடன் அவர் மனவருத்தத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. கூட்டணியை உறுதி செய்வதற்காக, அவரை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றியது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கியது.
தமிழக பாஜக
தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்காக மிக தீவிரமாக உழைத்தவர் அண்ணாமலை என்ற கருத்து கட்சியின் ஒரு பகுதி நிர்வாகிகளிடையே உள்ளது. இளைஞர்கள் மத்தியில் தனக்கென தனி ஆதரவை உருவாக்கியிருந்த அவர், திமுக அரசை நேரடியாக எதிர்த்து பேசும் தலைவராக உருவெடுத்தார். ஊழல் குற்றச்சாட்டுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், குடும்ப அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து தாக்குதலான அரசியல் செய்தார்.
பிரதமர் மோடி
அவரது தலைமையில் பா.ஜ.க. தமிழகத்தில் வேகமாக வளர்ந்ததாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். ஆனால், அவரை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றிய பிறகு, கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் அதிகமாக பங்கேற்கவில்லை. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை தவிர்த்து, பல தேசிய அளவிலான ஆலோசனை கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
பாஜக படுதோல்வி
அதேபோல், சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளுக்கான பொறுப்பாளராக நியமிக்க முயற்சி செய்யப்பட்ட போதும், அதை அவர் ஏற்கவில்லை என்ற தகவல்களும் வெளியாகின. இருப்பினும், மாநிலம் முழுவதும் 95-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து கட்சிக்காக உழைத்தார். ஆனால், தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, "அண்ணாமலையை ஓரங்கட்டியதே பா.ஜ.க.வின் தோல்விக்குக் காரணம்" என்ற கருத்தும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
புதிய தமிழகம் ஜனதா கட்சி
இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் புதிய கட்சி பெயர், கொடி, கொள்கைகள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து வைரலாக்கி வருகின்றனர். "புதிய தமிழகம் ஜனதா கட்சி" என்ற பெயரில் வெளியாகியுள்ள சில பதிவுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சி
இந்த சூழலில், மத்திய அரசின் மொழிக் கொள்கைக்கு எதிராக அவர் எடுத்துள்ள நிலைப்பாடு, "தமிழக உணர்வுகளை முன்னிறுத்தும் அரசியலை நோக்கி அண்ணாமலை நகர்கிறாரா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் அண்ணாமலை எடுக்கும் முடிவுகள், பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
நயினார் தலைக்கு மேல் தொங்குது கத்தி.. ’கணக்கு’ கேட்கும் டெல்லி! கோபத்தில் கண்சிவந்த அமித் ஷா! பரபர -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications