கொங்கு போச்சு.. அதிமுகவின் அஸ்திவாரத்தை ஆட்டிய அண்ணாமலை.. எடப்பாடிக்கு இப்படி ஒரு சிக்கலா?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் பாஜக அதிமுகவை காலி செய்துள்ளதாக மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சட்டசபை வாரியாக எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெற்றுள்ளன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ் இருக்கும் சட்டசபை தொகுதியில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்கள் கிடைத்தன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. சட்டசபை வாரியாக விவரம்: 221 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது.

8 இடங்களில் அதிமுக முதலிடம் பிடித்துள்ளது. 3 தொகுதிகளில் பாமக முதலிடம் பிடித்துள்ளது. 2 தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட, பாஜக/தாமரை போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் முதலிடம் வரவில்லை. அதிமுக 8 தொகுதிகளில் அதாவது எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது.
பாமக 3 தொகுதிகளில் பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது. தேமுதிக 2 தொகுதிகளில் திருமங்கலம், அருப்புக்கோட்டை முதலிடம் பிடித்துள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகளிலும் பாஜக ஒரு தொகுதியில் கூட முதலிடம் இல்லை. அதிமுக 8 தேமுதிக 2 பாமக 3 தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது.
பாஜக முன்னேற்றம்: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் பாஜக அதிமுகவை காலி செய்துள்ளதாக மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டு, எடப்பாடியை ஏற்றுக்கொள்ளாத வாக்குகள் பாஜகவிற்கு சென்றுள்ளது. கிட்டத்தட்ட 13 சதவிகித வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. அதாவது பாமக வாக்குகள் போக. இவர்கள் எடப்பாடியை நம்பவில்லை. ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டு, எடப்பாடியை ஏற்றுக்கொள்ளாத வாக்குகள் பாஜகவிற்கு சென்றுள்ளது. எடப்பாடியை விரும்பாமல் பாஜகவிற்கு இவர்கள் வாக்களித்து உள்ளனர்.
கொங்கு ஈஸ்வரன் நாமக்கல்லில் வெற்றிபெற்று காட்டி இருக்கிறார் . ஆனால் அதே கொங்கு மண்டலத்தில் எடப்பாடியால் வெல்ல முடியவில்லை. செந்தில் பாலாஜி கொங்கில் செல்வதை எடப்பாடி செய்ய முடியவில்லை. அண்ணாமலை வளர்ந்துவிடுவார் என்று எடப்பாடிக்கு பயம். அண்ணாமலை மீது எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்று எரிச்சல். கொங்கு ஈஸ்வரன், செந்தில் பாலாஜி, அண்ணாமலை செல்வாக்கை எல்லாம் எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எடப்பாடியை மக்கள் ஆதரிக்கவில்லை. இளம் கொங்கு வேளாளர்கள் அண்ணாமலையை ஆதரிக்கிறார்கள். பாஜகவினர் ஆதரிக்கிறார்கள். எடப்பாடிக்கு அவர்கள் ஆதரவு இல்லை. அண்ணாமலை இன்னும் முழுமையாக கொங்கை பிடிக்கவில்லை. ஆனால் எடப்பாடியை அங்கே அண்ணாமலை பின்னுக்கு தள்ளிவிட்டார். சட்டசபை தேர்தலில் அண்ணாமலை கண்டிப்பாக எடப்பாடியை மேலும் பின்னுக்கு தள்ளுவார்.
எடப்பாடியை அவர் ஜாதி மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. இது அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை கொங்கில் முன்னேறி விட்டார். கொங்கு ஈஸ்வரன் நாமக்கல்லில் வெற்றிபெற்று காட்டி இருக்கிறார் . ஆனால் எடப்பாடியால் சேலத்திலேயே பவரை காட்ட முடியவில்லை. அப்படி இருக்க.. சட்டசபை தேர்தலில் அண்ணாமலை கண்டிப்பாக எடப்பாடியை மேலும் பின்னுக்கு தள்ளுவார். என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications