அண்ணாமலை பாதயாத்திரையை விடுங்க.. இப்படித்தான் சிவாஜி கணேசன் ஒரு சம்பவம் பண்ணாரு! அட இவ்ளோ ஒற்றுமையா?
சென்னை: இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்குகிறார். அமித் ஷா இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். சிவாஜி கணேசன் தனியாக அரசியல் கட்சி தொடங்கிய சமயத்தில் வெளியான படம் 'என் தமிழ் என் மக்கள்'. அதனை இயக்கியவர் சந்தான பாரதி.
அண்ணாமலை பாதயாத்திரை: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் பாதயாத்திரையை இன்று மாலை தொடங்குகிறார். தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நடைபெறவுள்ள இந்த பாதயாத்திரையை, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார்.

இந்த பாதயாத்திரை இன்று தொடங்கி 168 நாட்கள் நடைபெற்று, அடுத்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. பாதயாத்திரையின் இறுதி நாள் பொதுக் கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு, நடைபயணத்தை முடித்து வைக்க உள்ளார்.
தேர்தலுக்கு கைகொடுக்குமா?: அண்ணாமலையின் இந்த நடைபயணத்தில் "மக்கள் புகார் பெட்டி" எடுத்துச் செல்லப்படுகிறது. இதில், பொதுமக்கள் ஊழல், நில அபகரிப்பு, போன்ற புகார்களை தெரிவிக்கலாம் என்றும் நடை பயணத்தின் இறுதியில் பொதுமக்களின் முன்பு அந்த புகார்களை வெளியிடப் போவதாகவும்,கூறியுள்ளார் அண்ணாமலை. இந்த நடைபயணத்தில் பங்கேற்க இதுவரை இரண்டரை லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் இந்த நடை பயணம், 2024 லோக்சபா தேர்தலை மையமாக வைத்து நடைபெறுகிறது. அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையே, அண்ணாமலை நடைபயணத்திற்கும், நடிகர் சிவாஜி கணேசனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.
சிவாஜி அரசியல்: அண்ணா, திமுகவை தொடங்கிய சமயத்தில், அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் முக்கியமான திரையுலக பிரபலங்கள், கே.ஆர்.ராமசாமியும் சிவாஜியும் தான். அண்ணா, கருணாநிதியுடன் மிகுந்த நெருக்கமாக இருந்தார் சிவாஜி. பின்னாட்களில் தான் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் திமுகவில் இணைந்து பிரச்சார மேடைகளை அலங்கரித்தனர். பின்னர் திமுக தலைவர்கள் உடனான மனஸ்தாபத்தால் காங்கிரஸ் பக்கம் சென்றார் சிவாஜி கணேசன்.
காமராஜருக்கு நெருக்கமாக, காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக, தேர்தல் பிரச்சாரப் பீரங்கியாகச் செயல்பட்டார் சிவாஜி. 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்று, திமுக ஆட்சியைப் பிடித்தபோதும் சிவாஜி, காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்தார். 1980 தேர்தலில் திமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்தபோது, என் பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒன்றாகிவிட்டது எனக் கூறினார் சிவாஜி. அந்த சமயத்தில் நடிகர் நர்கீஸ் காலமானதால் அவர் வகித்து வந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவியை சிவாஜி கணேசனுக்கு வழங்கினார் இந்திரா காந்தி.
என் தமிழ் என் மக்கள்: எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளவுபட்டபோது காங்கிரஸ் கட்சி ஜானகியை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினார் சிவாஜி. ஆனால், ஜெயலலிதா அணியையே ஆதரிப்போம் என்று ராஜீவ் காந்தி உறுதியாக நின்றதால், காங்கிரஸ் தலைமை மீது கோபமடைந்த சிவாஜி கணேசன் தனிக்கட்சி தொடங்கினார்.
1988ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அன்று தமிழக முன்னேற்ற முன்னணி எனும் கட்சியைத் தொடங்கினார் சிவாஜி. அந்த சமயத்தில் தயாரான திரைப்படம் தான் 'என் தமிழ் என் மக்கள்'. அரசியல் படமாக அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவானது. இந்தப் படத்தை சந்தான பாரதி இயக்கினார்.

எனக்கு நாடு தான் முக்கியம், வருங்கால அரசியல் இளைஞர்கள் கையில் தான், லஞ்சம் கொடுத்து வேலை பெறும் நிலை நம் அரசாங்கத்தில் இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட வசனங்களையும் இப்படத்தில் பேசியிருந்தார் சிவாஜி கணேசன். இப்படம் தனக்கு அரசியல் ரீதியாக மைலேஜ் கொடுக்கும் என எதிர்பார்த்தார் சிவாஜி. ஆனால், சிவாஜி நினைத்தது நடக்கவில்லை.
டைட்டில் ஒற்றுமை: 1989 தேர்தலில் அதிமுக ஜானகி அணி உடன் கூட்டணி அமைத்தார் சிவாஜி. அவரது கட்சிக்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டன. திருவையாறு தொகுதியில் சிவாஜி போட்டியிட்டார். அதில் தோற்றுப்போன சிவாஜி, அதோடு கட்சியைக் கலைத்தார். பின்னர் தமிழக ஜனதா தளம் தலைவராகவும் ஆகி, பின்னர் அரசியலில் தொடர் தோல்விகளால் முற்றிலும் விலகினார்.
சிவாஜி கணேசன், தனிக்கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட சமயத்தில் வெளியான படமான 'என் தமிழ் என் மக்கள்' போலவே தனது பாதயாத்திரைக்கு 'என் மண் என் மக்கள்' என டைட்டில் வைத்துள்ளார் அண்ணாமலை. சிவாஜி படத்தை இயக்கியது சந்தான பாரதி. இன்று அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைப்பவர் சந்தான பாரதி போலவே உருவ ஒற்றுமை கொண்ட அமித் ஷா என்பது தான் விசித்திரம்.
-
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications